வியாழன், டிசம்பர் 25, 2008
வியாழன், அக்டோபர் 30, 2008
ஹாய் பேச்சிலர்ஸ்!
ரெண்டு பேச்சுலர்களின் இந்த சோக வார்த்தை என் செவிகளில் விழ என் கேட்பு திறனை இன்னும் கொஞ்சம் கூர்மைப்படுத்தினேன்.
என்னடா மச்சான் பண்றது, வேலைக்குன்னு சென்னைக்கு வந்தாலும் சாப்பாடு தாண்டா கஷ்டமா இருக்குது. அஞ்சு வருஷமா ஹோட்டல் சாப்பாட்டுலேயே தாண்டா வாழ்க்கை ஓடிட்டு இருக்குது. ஏதாவது விஷேசம்னு வந்து ஊருபக்கம் போனா மட்டும்தான் நல்ல சாப்பாடு இல்லாட்டி, காஞ்ச புரோட்டாவும், கோழி கால் குழம்பும் தான் கெடச்ச கதி...
மச்சி இதைவிடக் கொடுமை துணி துவைக்கிறதுதாண்டா... நீட்டா உடுத்தும்போது துள்ளுற மனசுதாண்டா, அழுக்கு துணியைப் பார்க்குறப்ப துவைக்கணுமேன்னு துவண்டுபோகுது.
இந்த அழுக்குக்கு பயந்தே லைட் கலர்ல டிரெஸ் எடுக்குறத விட்டுட்டேண்டா. வெள்ளைச் சட்டைன்றது ஊருல படிச்சிட்டிருந்த காலக்கட்டத்தோட முடிஞ்சுபோச்சு. இப்போ பாரு, பேருக்கு கூட வெள்ளைச்சட்டை போட மனசு வரமாட்டங்குது. நல்ல கறுப்பு கலர், பிரவுன் கலருன்னு டார்க் கலரா வாங்கிப் போட்டாத்தான் ஒரு பத்து நாளைக்காவது போட்டுக்க முடியுது....
என்னமோ பேச்சுலரா இருந்தா மட்டுதான் பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறதுங்கிற கஷ்டம் மாதிரி பேசிக்கிறாங்க. டேய் கல்யாணம் பண்ணுறவரைக்கும் உங்க துணியை மட்டும்தான் துவைக்கணும், உங்க பாத்திரத்தை மட்டும்தான் கழுவணும். கல்யாணம் பண்ணீட்டிங்கன்னா மவனே, ......
பேச்சுலர் வாழ்க்கைக்கு ஏங்கியவனாய் காதுமடலைத் தடவியபடி சென்றேன்.
புதன், அக்டோபர் 08, 2008
சாந்திபிரியா
ஏம்மா நேத்து ஹோம் ஒர்க் செஞ்சுட்டு அப்படியே தூங்கிட்ட. அந்த புக்க எடுத்து உன்னோட கப்போர்ட்லதாம்மா வச்சேன். பார்த்து எடுத்துக்க... சமையலறையில் மதிய உணவை டிபன் பாக்ஸில் வைத்தபடியே சாந்தி சத்தம் கொடுத்தாள்.
கப்போர்ட்... அம்மாவின் வாய் மொழிந்த வார்த்தை பிரியாவை சில நொடிகள் உறைய வைத்தது. அம்மா கப்போர்ட்ல புக்ஸ வச்சுட்டு மட்டும் வந்தாங்களா, இல்லை அந்த போட்டோக்களை பார்த்து விட்டார்களா? குழப்பத்தோடு கப்போர்ட்டுக்கு வந்தவள் மேத்ஸ் புக் அங்க இருந்ததை எடுத்துவிட்டு், கலக்கத்துடன் பள்ளிக்கு கிளம்பினாள்.
பிரியா பள்ளிக்கு போனதும், அம்மாவும் தன் அலுவலகத்துக்கு வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
கதவைப் பூட்டி சாவியை தன் கைப்பையில் வைத்தவள் தெருமுனையில் நின்றிருந்த, வாடகை வேனில் ஏறினாள்.
ஏற்கனவே வண்டிக்குள் இருந்த அவளது அலுவலகப் பணிப் பெண்கள் வாசித்துக் கொண்டிருந்த கந்தர்சஷ்டி கவசத்துக்குள் தன்னை இனணத்தபடி வாய் முணுமுணுத்தாலும், பிரியாவின் கப்போர்டில் தான் பார்த்த போட்டோதான் அவள் மனசுக்குள் சுழன்றடித்தது.
கந்தர்சஷ்டி கவசம் முடியவும், அவளது அலுவலகத்தைவேன் அடையவும் சரியாக இருந்தது.
புஷ்பா... அலுவலகத்தில் மட்டும் இல்லை வேனிலும் சாந்தியின் அருகில் அமர்ந்து வருபவள்.
சாந்தி, தேவையில்லாத கதைகளைப் பேச வேண்டாம்னுதான், நாம் வேனில் கந்தர்சஷ்டி கவசம் பாடி வருகிறோம். வழக்கமா சுருதி கூடியிருக்கும் உன் குரலில் இன்னைக்கு ஏன் சுரத்தே இல்லாமல் இருந்தது _ பதில் தேடி கேள்வியை வீசினாள் புஷ்பா.
மவுனம் மட்டுமே சாந்தியின் பதிலாக இருந்தது.
மத்தியானம் அரைநேரம் விடுப்பு போட்டுவிட்டு சீக்கிரமாகவே வீடு திரும்பியிருந்தாள் சாந்தி.
நாம செஞ்சது சரிதானே... அப்புறம் ஏன் கவலைப்படணும்... இதுமாதிரியான ஆள்கூட வாழுறதை விட தனியாவே இருந்து சாதிக்கலாம். நாமும் படிச்சிருக்கோம், வேலை பார்க்க முடியும். அப்புறமும் ஏன் இந்த கொடுமையான வாழ்க்கை... தினமும் குடி, சந்தேகம்னு நரக வாழ்க்கை வாழுறதை விட டைவர்ஸ் வாங்கினாள் என்ன. தீர்மானித்தபடியே டைவர்ஸ் வாங்கினாள். ஒரே மகளை அழைத்துக் கொண்டு, சென்னை வந்தவள் தன் நண்பிகளின் மூலமாக ஒரு வேலையை ஏற்படுத்திக் கொண்டு இலட்சிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
தன் மகளிடமும் குடும்ப நிலவரத்தை சொல்லி சொல்லித்தான் வளர்த்தாள். பிரியாவும், அம்மாவின் முகம் கோணாமல் வளர்ந்தாள், படித்தாள். அப்பாவையும் தெரிந்து, அப்பாவின் ஆக்கமும் தெரிந்த பிரியாவா இப்படி...
அப்பாவின் போட்டோவை எடுத்து கப்போர்ட்டுக்குள் வைத்திருக்கிறாள். நாம் என்ன வளர்த்தாலும்... நினைக்க நினைக்க சாந்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
பள்ளி முடிந்து திரும்பிய பிரியா , வீட்டுக்கதவு ஏற்கனவே திறந்திருப்பது அறிந்து மெதுவாக உள்ளே நுழைந்தாள்.
விசும்பிய கண்களுடன் அம்மா இருப்பதை கண்டு அவள் அருகே மெதுவாக அமர்ந்தாள்.
அம்மா என்னை மன்னிச்சுடும்மா. அந்த போட்டோவை உங்ககிட்ட சொல்லாம வச்சிருந்தது தப்புதான்.
முந்தாநாள் பள்ளிக்கூடத்திலிருந்து 'ஆதரவற்றோர் இல்லத்துக்கு" கூப்பிட்டுப் போனாங்க. அங்க ஆதரவற்ற நிலையில் நோய்நொடியில் அப்பா இருக்கிறதப்பார்த்தேன். ஆனா அவருக்கு நான் யாருன்னு தெரியலம்மா.
அவரு உங்களுக்குப் பண்ணுன கொடுமைகளை கூட இருந்த பார்த்ததாலே அந்த ஆளுமேல எனக்கு பரிதாபமே வரலம்மா. இன்னும் வைராக்கியம்தாம்மா அதிகமாச்சு.
இந்த வைராக்கியம் குறையக்கூடாதுன்னுதான் அவர் போட்டோவ என் கப்போர்ட்ல வச்சேன். தினம்தினம் அந்தப் போட்டோவ பார்க்கும்போது எனக்கு இன்னும் சாதிக்கணும்னு வேகம் வரும்மா. அதான் வச்சேன் என்னத் தப்பா நெனச்சுக்காதீங்கம்மா.
மகளின் பதில் கொடுத்த சந்தோஷம் சாந்திக்குள் இன்னும் தன்னம்பிக்கையை அதிகரித்தது.
சனி, செப்டம்பர் 20, 2008
பச்சை விளக்கு
ஒட்டிய உடலோடு, கந்தல் நிறைந்த சேலையைக் கட்டிக்கொண்டு, கசங்கிய மலராய் ஒரு குழந்தையை கையில் வைத்தபடி மதிய வெயிலில், சிக்னலில் நின்று அவள் பிச்சை கேட்ட போது, அந்த காருக்குப் பின்னால் சைக்கிளில் நின்று கொண்டிருந்த என் மனசு கனத்தது।
கார்க்காரரோ அவளை விரட்டாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தார்। என்னைத் தாண்டி, என் பின்னால் நின்ற கார்க்காரனிடம் சென்று பிச்சை கேட்டாள்। நான் என் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து கொடுக்க முயலும் முன் சிக்னல் விழ, அந்தப் பாதையை கடந்து சென்றேன்।
சே... அந்த அம்மாவுக்கு ஐந்து ரூபாயை கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்குள் அதிகரித்திருந்தது। அடுத்த முறை கண்டிப்பாய் சிக்னலில் பார்த்தாள் காசு கொடுக்க வேண்டும்।
என் அம்மாவின் நினைவு வந்தது। அவள் தாயா? இவள் தாயா? என்னைப் பெத்ததும், ஏதோ அனாதை ஆசிரமத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டாள்। ஆனால் இந்தத் தாயோ தன் பிள்ளையை எப்படியும் வளர்க்க வேண்டும் என்று வேகாத வெயிலில் சிக்னலில் பிச்சை எடுத்தாவது காப்பாற்றி வருகிறாள்। கொடுத்த வைத்த குழந்தை...
நினைக்க நினைக்க என் தாய் மீதான கோபம் அதிகரிக்கத்தான் செய்தது।
ஆசிரமத்திலிருந்து வளர்ந்து ஏதோ கொஞ்சம் படித்து, பருவ வயதை அடைந்ததும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து, திண்பதும், தூங்குவதும் அங்கேதான்। ஏதோ மாதச்சம்பளத்தில் நான் வளர்ந்த ஆசிரமத்துக்கும் கொஞ்சம் கொடுத்துத்தான் வந்தேன்।
நினைவுகளோடு அந்த நாள் மூழ்கிப் போனது।
அன்று வாரவிடுமுறை தினம்। பொழுதுபோவதற்காக ஓட்டல் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போனேன்। கருத்த பட்சிகள் என்கிற மலையாள படம்। மம்மூட்டி நடித்தது। மனைவியை இழந்த கணவன் தன் மூன்று பிள்ளைகளுடன் வாழும் யதார்த்த வாழ்க்கைதான் படம்। இதில் ஒரு குழந்தைக்கு பார்வை குறைபாடு। அந்தக்குழந்தை வானத்தை பற்றி, நிலாவைப் பற்றி, நட்சத்திரத்தைப் பற்றி எல்லாம் மம்மூட்டியிடம் கேட்கும்போதெல்லாம், நம்ம குழந்தையாய் இருந்த போது எழுந்த இதுமாதிரியான கேள்விகள் ஆயிரம் இருக்குமே என்று தோன்றியது।
படத்தில் நவ்யா நாயர் சிக்னலில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் கேரக்டரில் நடித்திருப்பார்। அதை பார்த்ததும் நான் சிக்னலில் கண்ட பெண்ணை போலவே தோன்றியது।ஆனால் படத்தில் அதுபோல் ஏமாற்றி பிழைப்பு நடத்துவதாக இருக்கும்। எனக்கு அதில் உடன்பாடு இல்லை। அந்தப் பெண் தன் குழந்தைக்காக எப்படி கஷ்டப்படுகிறார்। படத்தில் நடிப்பு என்கிறார்களே என்று தோன்றியது।
டிர்ர்ர்ர்ர்ர்ரிங்.... சப்தத்தோடு படத்தின் இடைவேளை।
அங்கிருந்த கேண்டினில் நண்பர்களுடன் டீ , சமோஷா சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்। என் அருகில் ஒரு ஆணும், பெண்ணும் நின்று குசுகுசு குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்। கொஞ்சம் கூர்ந்து கவனித்ததில் அந்தப் பெண்.... ஆம் அதே பெண்தான்। சிக்னலில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவள்தான்।
அவர்கள் பேசியதை கேட்ட எனக்கு திக்கென்றது।
இன்னாம்மா இன்னிக்கு தொழிலுக்கு போலீயா...
இல்லயா, தொழிலுக்கு கொண்டுவந்த கொயந்த செத்துப் போச்சு। அடுத்த கொயந்த இன்னும் கெடைக்கல। அதேன்.....
பெத்த குழந்தையை காசுக்காக இந்த மாதிரி பிசாசுகளிடம் கொடுத்த கொலை செஞ்ச தாயை விட, ஆசிரமத்தில் போட்டுவிட்டு சென்ற என் தாய் உண்மையிலேயே தெய்வம்தான்.
வியாழன், செப்டம்பர் 11, 2008
'தாக' வேள்வி!
மாறிவரும்
நாகரீக
நங்கையரின்
நளினம் எனக்குள்
மோக இச்சையை
மோதச் செய்ய
தேக சாந்தி
வேண்டி
வேசிகளின்
வியர்வை
நெருக்கத்தில்
பின்னிரவில் ஆடிய
காமகளியாட்ட
பெரும்போதையின்
பிடியிலிருந்தே
என்னை நான்
உயிர்ப்பித்த்
ஈர உதடுகளின்
இறுக்கம்
பிரிகையில்
புறத்திலிருந்து
கேட்குது
வார்த்தை...
புள்ளி
ராஜாவுக்கு
எய்ட்ஸ்
வருமா?
புதன், செப்டம்பர் 10, 2008
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
அரசியலைப் போல, இந்தத் தொழிலுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை। எந்த விதத்திலாவதுமக்களை ஏமாற்றத் தெரிந்திருந்தால் போதும்।
ஆனாலும் அவர்களிலிருந்து மாறுபட்டவர்கள் இந்த இருயாசகர்களும்। தங்களது உடல் குறைபாடுகளால் அவர்கள் இந்தத் தொழில் செய்து வருகிறார்கள்।
ஆண்டவன் மட்டும் நம்மள நல்லவிதமாக படைத்திருந்தான் என்றால், இது போன்ற யாசகர்களுக்கு நாம் நிறைய செய்வோம் என்பார்கள், எப்போதென்றால் தங்களுக்கு யாராவது யாசகம் தராமல் சென்றால்।
ஆனால் ஆண்டவன் இருக்கத்தானே செய்கிறான்। ஒருநாள் அந்த ஆண்டவன் இவர்கள் முன் வந்தார்। அவரிடமும் யாசகம் கேட்டார்கள்। ஆளுக்கு மூன்று முட்டைகளைக் கொடுத்தார்।
தாங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை நினைத்தபடி இந்த முட்டையை உடைத்தால் அவை கிடைக்கும்।
சொல்லிவிட்டு மறைந்ததால், அவர் கண்டிப்பாய் கடவுள்தான் என்று நம்பினார்கள்। அன்றைய தொழில் முடியும் நேரம் வந்தது।
இந்த முட்டைகளை மறுநாள் உடைப்போம்। அதுவரை யோசிப்போம் என்று கூறிக் கொண்டவர்களாக இருவரும் தங்கள் பகுதிக்கு தனித்தனியே சென்றுவிட்டனர்।
முதலாமவன் சென்ற பாதையில் கண்பார்வையற்ற ஒரு பெண் பூ கட்டி விற்பனை செய்து கொண்டிருந்தாள்। இது அவனைப் பாதித்தது। அவளிடம் சென்று விசாரித்தான்। பார்வையற்ற நீ, ஏன் உழைத்து உண்கிறாய்। யாசகத் தொழிலில் ஈடுபடலாமே என்றான்। என் உழைப்பில் கிடைக்கும் சிறுவருவாயில் எனக்கு பூரண மனநிம்மதி கிடைக்கிறது। அடுத்தவரிடம் யாசகம் பெறுவது என்பது எனது மனசாட்சிக்கு ஒப்பானது அல்ல என்றாள்। அந்தப் பெண்ணின் பேச்சு அவனுக்குள் ஒரு மனமாற்றத்தை ஏறுபடுத்த, உடனே ஒரு முட்டையை எடுத்து , அந்தப் பெண்ணுக்கு கண்பார்வை கிடைக்க வேண்டும்। தானும் நலம்பெற வேண்டும் என்று கூறி உடைத்தான்।
அவ்வாறே நடந்தது। அந்தப் பெண் நன்றிக்கடனாக, அவனையே திருமணம் செய்ய சம்மதித்தாள்। பின்னர் மற்ற இரு முட்டைகளையும், வசதி வாய்ப்பு கோரியும், ஆரோக்கியமான, நிம்மதியான வாழ்க்கை வேண்டியும் உடைக்க அவன் மிகப்பெரும் தனவந்தனான்।
புதுவாழ்வு கிடைத்த மகிழ்வில் தன் பழைய இடத்துக்கு செல்லவில்லை। அதிர்ஷ்டத்தால் கிடைத்த செல்வத்தை பலமடங்கு பெருக்கினான்।
சில ஆண்டுகள் கழித்து, பழைய சந்தைப் பாதைக்கு சென்றான்। அங்கு மற்ற யாசகன் அமர்ந்து யாசகத் தொழில் செய்து கொண்டிருந்தான்।
தனவந்தனை அடையாளம் தெரிந்து கொண்ட யாசகனிடம், முதலாமவன் முட்டை கிடைத்தும் ஏன் இப்படியே இருக்கிறாய் என்று கேட்க, அவன் தன் குமுறலை சொல்லத் தொடங்கினான்।
உன்னிடம் சொல்லிவிட்டு, நான் என்வழியே சென்று கொண்டிருந்தேன்। அப்போது அங்கு ஒரு விலைமாது நின்று கொண்டிருந்தாள்। அவளை நெருங்கினேன்। அன்றைய தொழிலில் சம்பாதித்ததை அவளிடம் கொடுத்து என் இச்சையை தீர்த்துக் கொண்டேன்। பெண் சுகத்தில் திளைத்த நான், என்னிடம் முட்டை இருக்கும் கதையை சொல்ல, அவள் நைசாக என்னிடமிருந்த முட்டையை எடுத்து கொண்டு ஓடிவிட்டாள்।
அதிர்ஷ்டம் கையில் கிடைத்தும் அதை அடைய முடியாத பாவியாகி விட்டேன்। என்று அழுதான்।
முதலாமவன் , அவனது செலவுக்கு பணம் கொடுத்து விட்டு தன்வழி நடந்தான்।
நீதி: ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
திங்கள், ஆகஸ்ட் 25, 2008
யார் கிறுக்கன்?
நம்மாளுக்கு ரொம்ப அவமானமா போயிட்டுது। இந்த ஊருல இருந்து நம்மள தொறத்தி விட்டுட்டாங்க। ஆனா இனிமே நாம போற ஊருலல்லாம் நம்மள எல்லோரும் தேடி வரச்செய்யணும்னு அந்த கிருக்குப் பய மனசுல நெனச்சுக்கிட்டான்।
போற வழியில ஒரு கோயில் இருந்துச்சு। அந்த கோயிலை விட அங்க இருந்த உண்டியல் நம்ம ஆளோட கவனத்தை சீண்டவும் வெடுக்குன்னு உண்டியலை தூக்கிட்டான்। அக்கம் பக்கத்துல நின்னவங்க எல்லாம், திருடன் திருடன்னு கத்திக்கிட்டே தொறத்த ஆரம்பிச்சாங்க। ஊர்க்காரங்களும் சேர்ந்து தொறத்துனாங்க।
எப்படியோ ஊரே நம்மள தேடி ஓடிவர ஆரம்பிச்சுட்டுனு ஒரு சந்தோஷத்துல, கையில் மாட்டுன வரைக்கும் சில்லரையை எடுத்துக்கிட்டு, உண்டியல் தூக்கி ஓரமாப்போட்டுட்டு, சிட்டாப் பறந்துட்டான்। (ஒலிம்பிக்ஸ்ல ஓடியிருந்தானா கண்டிப்பா இந்தியாவுக்கு தங்கம்தான்।)
சரி, உண்டியல் கிடைச்சிடுச்சேன்னு தொறத்துனவங்கள்லாம், திரும்பிப் போயிட்டாங்க।
அந்த ஊரோட எல்லையத் தாண்டி போனவன் கண்ணுல ஒரு கழுதை தட்டுப்பட்டுச்சு। பொதி தூக்கவும் ஆவாதுங்கிற அளவுல வயசான கழுதை।
கழுதைக்கு சொந்தக்காரன் கொஞ்சம் தள்ளி, நின்னு கழுதையப் பார்த்துக்கிட்டிருந்தான்।
நம்ம கிருக்குப்பையன், அவன்கிட்ட போய்ட்டு, ஏ ஐய்யா இந்த கழுதைய, எனக்கு தருவிங்களா?ன்னு கேட்டதும், ஏதாவது கொஞ்சம் பணம் தந்துட்டு கொண்டுபோன்னான்।
கிருக்குப் பையன் அவன்கிட்ட, இப்போதைக்கு பணம் இல்ல, இன்னும் ஒரு மாதம் கழிச்சி உனக்கு கண்டிப்பா ஆயிரம் ரூபாய் தருவேன்। நீ நம்பினால், இப்போது கழுதையை எனக்குத் தான்னான்।
ஒன்னுக்கும் ஒதவாத கழுதைக்கு, ஆயிரம் ரூபாயான்னு சந்தோஷப்பட்ட அந்த கழுதக்காரனும், ஒரு ஒப்பந்தம் போட்டுட்டு எடுத்துட்டுப் போன்னான்।
ஒப்பந்தம் போடப்பட்டது,
ஒப்பந்த சரத்து இதுதான்।
''அதாகப்பட்டது, இன்னாருடைய கழுதைய, இன்னாருக்கு விக்கிறேன்। இன்னாரு, தேதி குறிக்கப்படாத இன்னொரு மாதத்துல ஓராயிரம் ரூபாவக் கொடுக்கனும்। அப்படி பணம் கொடுக்கத் தவறினா, இன்னாருகழுதைய தோள்ல தூக்கிக்கிட்டு, ஒருவாரத்துக்கு ஊர சுத்திவரணும்।"
அதிமேதாவி கழுதக்காரனும், இதுக்கு ஒப்பந்தத்த சந்தோஷமா வாங்கிக்கிட்டு, கழுதையைக் கொடுத்துட்டான்।
கழுதையை வாங்கின கிருக்குப்பையன், அத ஓட்டிக்கிட்டு , பக்கத்து ஊரு சந்தைக்கு வந்தான்।
அங்க , இரண்டு கால் கோழி நாற்பது ரூபா, ஒருகால் கோழி 15ரூபான்னு வித்துக்கிட்டிருந்தவன்கிட்ட போயி, நொண்டிக் கோழி கிடைக்குமான்னு கேட்டான்।
எந்த ஊரு கிருக்கனோன்னு தம் மனசுக்குள்ளார சிரித்தபடி கோழிக்காரன், ஒரு கோழியை எடுத்துக் கொடுத்தான்। அதற்கு ஒத்தக்கால்தான் இருந்தது।
நம்ம கிருக்கன் எடுத்த எடுப்பிலேயே, நொண்டிக்கோழிங்கறதால அஞ்சு ரூபாத் தான் தருவேன்னான்। நொண்டிக்கோழிக்கு அஞ்சு ரூபாயா ன்னு சந்தோஷத்துல, கோழியைக் கொடுத்துட்டான்।
நம்ம கிருக்கன், கழுதைக்கு புல்லுக்கட்டு வாங்கிக்கிட்டு, கோழியையும் எடுத்துக்கிட்டுப் போனான்।
சந்தையை விட்டு ஒதுக்குப் புறமா போனவன், புல்லுக்கட்டுல, உண்டியல் சில்லறையை ஒண்ணு, ஒண்ணா வச்சு கழுதைக்கு கொடுத்தான்। கழுதையும் புல்லுக்கட்டை தின்னு விழுங்கவும், காசும் சேர்ந்து கழுத வயித்துக்குள்ள போயிடுச்சு।
மறுநாள் சந்தை கூடுமிடத்துக்கு கழுதையுடன் வந்த கிருக்கன், கழுதையின் வயிற்றில் லேசாக குத்துவிட்டான்। கழுதை தன் கழிவை வெளியேற்றியது। அப்ப சில்லறையும் ஒன்னொன்னா வெளியே வந்து விழுந்தது।
ஒப்பந்தம் எழுதிக்கொடுத்தானே அந்த கழுதைக்காரனும் சந்தைக்கு வந்தான்। என்னடா இது, நம்ம கழுதை காசா விட்டைப்போடுதேன்னுட்டு, கிருக்கண்ட்ட போயி, ஒப்பந்தத்தை முறிச்சிக்கலாம்। நான் உனக்கு ஆயிரம் ரூபா கொடுக்கிறேன்। கழுதைய என்கிட்டயே கொடுன்னான்।
கிருக்க்ன், கொஞ்சம் பிகு பண்ணிட்டு, ரூபாயை வாங்கிட்டு, சரி இந்தாக் கொண்டு போன்னான்।
அப்ப நொண்டிக் கோழி கத்தியது। உடனே, கிருக்கன், ரூபாயை திருப்பிக் கொடுத்து, கழுதையை தந்துருன்னான்।
கழுதைக்காரன் ஏன்னான்। நாளைக்கு கழுதை தங்கக்காசு போடப்போவுதுன்னு, கோழி சொல்லுதுன்னான்।
கழுதைக்காரனுக்கு ஆசை தாங்கலை, எப்பெல்லாம், கழுதை தங்கக்காசு போடும்னான்। இந்தக் கோழி எப்பெல்லாம் கத்துதோ அப்பெல்லாம் தங்கக்காசு போடும்னான்।
எனக்கு இந்தக் கோழியையும் கொடுத்துருன்னான்। நான் கோழியையும் தரமாட்டேன், கழுதையையும் தரமாட்டேன்னு கிருக்கன் சொன்னான்।
கடைசியில கழுதைக்காரன், தலா ஆயிரம் ரூபான்னு கொடுத்து இரண்டையு ம் கூட்டிட்டுப் போனான்।
அப்ப, கிருக்கன் சொன்னான், கழுதை காசு தரலான்னா, அடிவயித்துல உலக்கையால ஓங்கிப் போடுன்னான்।
மறுநாள் விடிகாலை நொண்டிக் கோழி கூவியது। கழுதைக்காரன் சந்தோஷமா, கழுதைக்கிட்டப் போனான்।
கழுதை காசு போடல। உலக்கையை தூக்கிட்டு வந்து அடிவயித்துல ஓங்கிப் போட்டான்। கழுதை உலகத்தை விட்டேப் போயிட்டு।
ஆனாலும், கோழி கத்திக் கொண்டே இருந்ததால், கழுதைக்காரன் கோழியையும் கழுத்தை திருவிக் கொன்றான்।
அப்பத்தான் அந்த அதிமேதாவிக்கு, தான் ஏமாந்தது உணர்ந்தது। தன் சகாக்களை கூட்டிக் கொண்டு, கிருக்கனைத் துரத்த, கிருக்கன் பணத்துடன் அடுத்த இலக்குக்கு ஓடினான்।
ஓடிஓடி களைத்தவன், ஒரு ஆற்றங்கரையில் வந்து படுத்துக் கொண்டான்। அந்தப் பக்கமாக ஒரு சலவைத் தொழிலாளி, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்தான்।
கிருக்கனைப் பார்த்ததும், பரிதாபப் பட்ட அவன், கிருக்கனை தன்னுடன் அழைத்துக் கொண்டு தன் கிராமத்துக்கு சென்றான்।
உம் பேரென்ன? என்று சலவைத் தொழிலாளி கேட்டதற்கு, 'வந்தான்" என்றவன், சலவைத் தொழிலாளி மனைவியிடம் 'போனான்" என்றும், ஒரு குழந்தையிடம் 'கடலை", மற்றொரு குழந்தையிடம் 'முறுக்கு" என்றும் கூறினான்।
மறுநாள் துறைக்குச் சென்ற சலவைத் தொழிலாளி விலையுயர்ந்து பட்டுப்புடவைகளை கிருக்கனிடம், காயப் போடுவதற்காகக் கொடுக்க, அங்கிருந்து புடவை நீட்டீனான் கிருக்கன்।
நீண்ட நேரமாகியும், கிருக்கனை தேட ஆரம்பித்த சலவைத் தொழிலாளி, தன் குடும்பத்துடன் அவனை தேடி அலைந்தான்। ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் தேடினார்கள்।
சலவைத் தொழிலாளி, ஏய் வந்தான் என்று கத்த, மனைவியும் பிள்ளைகளும் எங்க வந்தான் என்று கேட்டு வர தேடச் சொல்லி சப்தம் போட்டான் தொழிலாளி,
ஏய் போனான் என்ற மனைவியின் குரல் கேட்டு அங்கும் போய் தொழிலாளி ஏமாற், அந்நேரத்தில் குழந்தைகள், ஏய் கடலை, ஏய் முறுக்கு என்று கத்தவும், நானே இங்க புடவையைக் காணோம்னு தேடிக்கிட்டிருக்கேன்। உங்களுக்கு கடலையும், முருக்கும் வேணுமா என்று பிள்ளைகளை அடிக்க ஆரம்பித்தான் சலவைத் தொழிலாளி।
புடவையுடன் வந்த கிருக்கன், நடுக்காட்டிலிருந்த ஒரு புளியமரத்தில் புடவைகளை உச்சிக் கொம்பில் தொங்க விட்டான்। அந்தப் பக்கமாக வண்டியில் வந்த ஒரு பேராசைக்கார வியாபாரி, கிருக்கனிடம் என்னப்பா, இந்தப் புளியமரத்தில் புடவை காய்க்கிற்தா என்று கேட்டது, கிருக்கன் ஆமாம் ஐயா, இந்த மரத்தில் தினசரி இதுபோன்று பட்டுபுடவை காய்க்கும், இன்னைக் இவ்வளவு காய்ச்சிருக்கு, இதை பறிக்கத்தான் வந்தேன் என்றான்।
என்னப்பா சொல்ற, இது உன் மரமா, தினமும் புடவை காய்க்குமா என்று கேட்டான்।
கிருக்கன் பதில் ஏதும் சொல்லாமல், மேலே எறி புடவைகளை எடுக்க ஆரம்பித்தான்।
புடவையுடன் கீழே இறங்கி வந்தவனிடம், மரத்தை தான் விலைக்கு வாங்குவதாக் கூற, பெருந்தொகையை வாங்கினான் கிருக்கன்।
பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது, இந்த மரம் புட்வையைக் காய்க்காவிட்டால், மரத்தின் அடியில் தோண்டி, அண்டா நிறைய வென்னீரை ஊற்றுங்கள் என்று கூறிவிட்டு சென்றான்।
பேராசைக்கார வியாபாரி, மறுநாள் மரத்தில் புடவை இல்லாததால், அண்டா வென்னீரை வேரில் ஊற்ற மரம் விரைவில் பட்டுப் போனது।
ஊர் ஊராய் சம்பாதித்த? பணத்தைக் கொண்டு, உள்ளூருக்கு திரும்பிய கிருக்கனின் வசதியைப் பார்த்த அன்று துரத்தியவர்கள் இன்று ஆரத்தி எடுத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்।
அங்கே தனது வேலையைக் காட்டிய கிருக்கன் ஊர்த்தலைவனான்। அப்புறம் என்ன எந்த ஊருக்கும் போய் வித்தைக் காட்டாமல் சொந்தஊரிலேயே சுகமாக சுரண்ட ஆரம்பித்தான்।
இப்பத் தெரிஞ்சிருக்குமே யார் கிருக்கன்னு?
புதன், ஆகஸ்ட் 13, 2008
இந்தக் கூத்தும் இங்கதான் நடக்குது
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்ஷன்।( ஆண்கள் தங்கும் விடுதி) இரவு பனிரெண்டரை மணி। திபுதிபுவென திரண்டு வந்தார்கள் போலீஸார்।
நாங்கள் மேன்ஷனை சோதனையிட வேண்டும்.....
வழக்கம் போல சுதந்திரதின நாளையொட்டி, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பஸ்நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள் போன்ற பகுதிகளில் போலீஸாரின் பலத்த சோதனை। முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு.
நள்ளிரவு வாகன சோதனைகள் என்று சர்வ ஜாக்கிரதையாக போலீஸார்....
சமீப நாட்களாக பயங்கரவாதிகள் என்று முத்திரையுடன் சிலரையூம் போலீஸார் பிடித்தும், சிலரை தேடுவதாகச் சொல்லிவருவதும் இந்த அதீத எச்சரிக்கை உணர்வினால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்।.....
மேன்ஷனில் புகுந்த போலீஸாருடன் ஒரு பெண் காவல் அதிகாரியும் உண்டு। விடுதி காவலாளியின் சிபாரிசின் பேரில்???? மூன்று அறைகளை மட்டுமே சோதனை மேற்கொண்டுள்ளனர்।
தீவிர சோதனையில் பெண் அதிகாரியின் கையில் ஒரு புத்தகம் கிடைத்தது। அவ்வளவு தான் அந்த புத்தகத்துக்கு சொந்தக்காரரான ஒரு இளைஞரை காவலர்கள் அழைத்து சென்றனர்।
அந்தப் புத்தகம் எந்த இயக்கத்தைச் சேர்ந்தது? அதில் எப்படிப்பட்ட தகவல்
இருந்தது? அதில் தமிழகத்தை உலுக்கும் திட்டம் எதுவும் குறிக்கப்பட்டிருந்ததா என்றால்.........
அது ஒரு ஆபாச புத்தகம்। இந்தப் புத்தகத்தை அந்த இளைஞர் வைத்திருந்தார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்। பெரிய பெரிய பதிப்பகங்களே, டாக்டர்களின் பெயர்களில் கேள்வி பதில் என்ற பெயரில் இதுபோன்ற புத்தகத்தை விற்பனைசெய்து வருகிறது என்பது தெரியாததல்ல.
மறுநாள் மற்ற அறை நண்பர்களின் முயற்சியால் அவர் வெளியே கொண்டு வரப்பட்டார்।
இங்கு தான் ஒரு கேள்வி।
ஆபாச புத்தகத்தை அந்த இளைஞர் வைத்திருந்தது குற்றம் என்றால், அது போன்ற புத்தகத்தை விற்பனை செய்பவர்களையும், அச்சடித்து வினியோகிப்பவர்களையும் ஏன் இவர்கள் கைது செய்யவில்லை।
பர்மா பஜாரில் இன்றும் விற்கப்பட்டு வரும் ஆபாச பட சி।டி।க்களை பறிமுதல் செய்து, விற்பவர், அதை தயாரித்தவர் என எந்த நெட்வொர்க்காவது கைது செய்யப்பட்டுள்ளதா?
இதை விட முக்கியம் இன்று நடன நிகழ்ச்சிகள் என்ற பெயரிலும், தொடர்கள் என்ற பெயரிலும் டி।வி।க்களில் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகளில் துளியளவு கூட ஆபாசம் இல்லை என்று எந்த தயாரிப்பாளர்களாவது சொல்லியிருக்கிறார்களா? அல்லது ஆபாசத்தை பரப்புகிறார்கள் என்று இதுபோன்ற கைது நடவடிக்கை இவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளதா?
தனி மனிதனின் ஆபாச செயல்களை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க முனைவோர்கள், சமுதாயத்தில் ஆபாச செயல்களை எந்த வழியாகச் செயல்படுத்தினாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திங்கள், ஆகஸ்ட் 04, 2008
சுவர்க்கத்துச் சுனை நீர்
அவர் ஒரு மிகப்பெரிய அறிஞர். பெயர் ஆகா அகில். அன்றைய தினம் அவர் வீதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மேகம் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது. ஆகா அகில், மழை நீரிலிருந்து தன்னை காத்துக்கொள்ள ஒதுங்கிமிடம் தேடி ஓடிக் கொண்டிருந்தார்.
ஆகா அகில்... ஆகா அகில்...
குரல் வந்த திசையை நோக்கினார், அதுமுல்லாவின் வீடு.
வீட்டு திண்ணையில் ஒதுங்கிய ஆகா அகிலிடம் , முல்லா முகமன் கூறினார்.
பதில் வணக்கம் கூறியபடியே, தன் ஆடையிலிருந்த மழை நீர்த் துளிகளை உதறிக் கொண்டிருந்தார்.
என்ன இப்படி செய்து விட்டீர்களே ஆகா அகில்?
முல்லாவின் கேள்வியை அறிஞரை திகைக்க வைத்தது. ஏன் என்பது போல் பார்த்தார்.
அறிஞரே, மழை என்பது சொர்க்கத்து சுனை நீர். அதை பருக முனைய வேண்டுமே தவிர ஓடி ஒதுங்கக் கூடாது என்று ஒரு குட்டி பிரசங்கம் செய்து விட்டார் முல்லா.
தான் ஏதோ தவறு செய்துவிட்டது போன்றும், முல்லா அதிலிருந்து தன்னை காப்பாற்றி விட்டதாகவும் எண்ணிய ஆகா அகில், முல்லாவுக்கு நன்றி கூறியபடியே, சொர்க்கத்து சுனைநீரை ஆசை தீர பருகியபடியே மழையில் நனைந்த படி சென்றார்.
காய்ச்சல் , ஆகா அகிலை காய்ச்சி எடுத்துவிட்டது. குடும்பத்தினர் திட்டினார்கள். முல்லாதான் ஏதோ சொன்னார் என்றால் நீரும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டீரே, இப்போது பாரும் யார் அவஸ்தை படுகிறார்கள் என்று...
சில நாட்களில் மீண்டும் உடல்நிலை தேறியது ஆகா அகிலுக்கு. வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.
ஒரு நாள் தன் வீட்டுக்குள் அமர்ந்தபடியே மழை பெய்யும் தெருவை பார்த்துக் கொண்டிருந்தார் ஆகா அகில்.
தொலைவில் ஒரு உருவம் மழைக்கு பயந்து ஒதுங்க இடம் தேடிக்கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தால் அது முல்லா.
முல்லா நேராக ஆகா அகிலின் வீடுநோக்கித்தான் வந்தார்.
முகமன் கூறிய முல்லாவை நோக்கி, என்ன முல்லா நஸ்ருதீன், அன்றொருநாள் மழைக்கி ஒதுங்கிய என்னிடம், சுவர்க்கத்து சுனை நீரைப் பருகுங்கள். பயந்து ஒதுங்காதீர்கள் என்று உபதேசம் கூறினீர். இன்று ஏன் இப்படி ஓடி ஒளிகிறீர்கள் என்றார் ஆகா அகில்.
'சொர்க்கத்து சுனை நீரை என் காலால் மிதித்து அதை மாசு படுத்திவிடக் கூடாது ' என்பதற்காக இப்படி ஓடி ஒதுங்கிறேன் என்றார் முல்லா, சாவதானமாக.
முல்லாவின் பேச்சைக் கேட்டு, காய்ச்சலில் நொந்ததை விட இப்போதுதான் அதிகமாக வருத்தப்பட்டார் ஆகாஅகில்.
இன்றும் இப்படிப்பட்ட முல்லாக்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நாம்தான் ஆகாஅகிலாக இருக்கக்கூடாது.
சனி, ஆகஸ்ட் 02, 2008
சந்தனமரமும், கரிக்கட்டையும்
அது ஒரு மன்னராட்சி காலம். மன்னர் மிகவும் நல்லவர், ஆட்சி செய்வதில் வல்லவர். தம் மக்களின் துன்பம் கண்டு துடித்திடுவார். உடனே உதவிகள் பல புரிந்திடுவார்.
ஒரு நாள் மன்னர் மாறுவேடத்தில் நகர் வலம் புறப்பட்டார். நகரைத் தாண்டிய காடுகளுக்குள் தன் குதிரையை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முதியவர் மிகவும் தளர்வுடன் தன் தலையில் ஒரு கட்டிய மூட்டையுடன் வந்து கொண்டிருந்தார்.
அந்த மூட்டை அழுக்கு நிறைந்திருந்தது. முதியவரின் தளர்வு மன்னருக்குள் இரக்கத்தை அதிகப்படுத்தியது. குதிரையை விட்டிறங்கி, அந்த முதியவரிடம் சென்று அவரைப் பற்றி விசாரித்தார்.
முதியவர் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்ததும், தாந்தான் அரசன் என்றும், நகர் வலம் வந்ததாகவும் கூறி முத்திரை மோதிரத்தை காண்பித்தார்.
முதியவர் பேசத் தொடங்கினார். மன்னா, எனது மகன்களுக்கு திருமணமாகி என்னை விட்டுப் பிரிந்து தனியே சென்று விட்டனர். வயதான என்னையும், என் மனைவியையும் அவர்களால் கவனிக்க முடியவில்லை. நானும் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல், காட்டுக்கு வந்து மரம் வெட்டி அதை எரித்து கிடைக்கும் கரியை விற்பனை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன் என்றார்.
இந்த வயதிலும் உழைக்க வேண்டும் என்ற சிந்தையோடு செயல்படும் முதியவரைப் பாராட்டிய மன்னர், அங்கிருந்த ஒரு மரக்காட்டைக் காட்டி, அதிலிருக்கும் சந்தன மரங்களை வெட்ட அனுமதி வழங்கிச் சென்று விட்டார்.
ஒரு சில மாதங்கள் கழித்து மன்னர் மீண்டும் நகர்வலம் வந்தார். அதே காடு. அதே முதியவர். தள்ளாடியபடியே அழுக்கு தலைச்சுமையுடன் நடந்து வந்தார்.
மன்னரைப் பார்த்த முதியவர் மகிழ்ச்சி அடைந்தார்.
என்ன முதியவரே நலமா என்றார் மன்னர்.
எப்படி நலமாக இருக்கமுடியும் மன்னரே, நீங்கள் வழங்கிய சந்தன மரக்காட்டில் மரங்கள் முடியப் போகிறதே என்றார்.
மன்னர் குழம்பிப் போனார். நான் அனுமதி கொடுத்த சந்தனமரங்களை வெட்டி விற்றீர்களா என்று கேட்டார்.
ஆமாம் மன்னா, அந்த மரங்களை வெட்டி எடுத்து அதை எரித்து கரியாக்கி, கரியை விற்றேன் மன்னா என்றார் அந்த முதியவர்.
முதியவரின் அறியாமையை நினைத்து தன்னை நொந்து கொண்ட மன்னர், மீதமிருந்த மரங்களை வெட்டி விற்பனை செய்யச் சொல்லி சென்றார்.
நீதி: என்னத்த சொல்ல.... அவனவன் தெரிஞ்சிக்கிட்டா சரிதான்.
புதன், ஜூலை 30, 2008
மிஃராஜ் இரவு

புனிதமிகு மிஃராஜ் இரவு
இஸ்லாமியர்களின் புனிதமிகு மிஃராஜ், பரா அத் இரவுகளில் இன்று மிஃராஜ் இரவு கடைப்பிடிக்கப்படுகிறது. மிஃராஜ் இரவு என்பது மாநபி (ஸல்) அவர்கள், இறைத்தூதர் ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் சென்று அல்லாஹ்வை சந்தித்து, தொழுகை முறையை கற்று வந்து நமக்காக தந்த நாள் ஆகும்.
இந்த் அற்புதப் பயணமானது இரண்டு இடம் சம்பதமானது. மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பாலஸ்தீனத்துக்கும், மஸ்ஜிதுல் அக்ஸா வரையீலும், அங்கிருந்து அல்லாஹ்வின் அர்ஷ் வரையிலும் சென்று வந்ததாகும்.
மக்காவிலிருந்து, பாலஸ்தீனத்துக்கு நபியவர்கள் காலத்தில் சென்று வரவே 2 மாதங்கள் பிடிக்கும். அல்லாஹ்வின் அர்ஷை அறிந்தவர் மாநபியைத் தவிர யாருமில்லையே. ஆனாலும் இந்த நிகழ்வுகள் ஒரு மைக்ரோ செகண்ட் எனப்படும் நேரத்திற்குள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முகமது அவர்களின் 53ம் வயதில் நபித்துவம் பட்டம் பெற்று 13ஆண்டுகள் நிறைவு பெற்ற பின் நடந்த சம்பவமாகும் இது.
அபூதாலிப் அவர்களின் மகளார் உம்முஹானி அவர்களின் வீட்டில் நித்திரையில் இருந்த முகமது நபியை இருவானவர்கள் வந்து அழைத்துச் சென்றனர். அவர் நபியை மஸ்ஜிதுல் அக்சாவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்துதான் அல்லாஹ்வை காண்பதற்கான விண்ணேற்றப் பயணம் நடைபெற்றது. அப்போது நபிகள் 7வானங்களைத் தாண்டிச் சென்றார். அவருடன் இருந்த இறைத்தூதர் ஜிப்ரயில்(அலை) அவர்கள் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடத்தைக் கடக்கும்போது நபிகளின் கரம்பற்றி அவரை மட்டும் தனியே விட்டார். அங்கிருந்த நபிகள் அல்லாஹ்வின் அர்ஷை சென்றடைந்தார். படைத்தோனைப் பார்க்கும் பெரும் பேறு நிகழ்ந்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
அங்குதான் வணக்க முறைகள் நபிகளுக்கு கற்பிக்கப்பட்டது. அதுவும் ஒரு நாளைக்கு 50வேளை தொழுகை செய்ய டும் என்று முதலில் வல்ல நாயன் கூறினான். அதை ஏற்றுக்கொண்டு திரும்பும் போது, ஆதம் (அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடம் சென்று கேட்டு தொழுகை வேளையை ஐவேளையாக மாற்றி வந்தார்கள்.
அன்றிலிருந்து நபிகள் தொழுகையை முறையாக தன் சஹாபாக்களுக்கு கற்றுத் தந்து, வழிவழியாக நாமும் பின்பற்றி வருகிறோம்.
தொழுகை நம்மை வந்தடையக் காரணமான மிஃராஜ் இரவில் உளத்தூய்மையுடனும், நம்பிக்கையுடனும் வல்ல நாயனை தொழுது வந்தால், நமது வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லாஹ்வின் அருள் நமக்கும் கிடைக்கும்.
இந்த இரவில் அதிகமதிகம் தொழுது நல்ல அமல்களை புரிவோம். இந்த இரவில் மட்டும் அல்லாது இனிவரும் நாட்களிலும் இன்ஷா அல்லாஹ் ஐவேலை தொழுகையையும் நாம் தொழ இறைவன் அருள்பாலிப்பானாக! ஆமீன்.
செவ்வாய், ஜூலை 29, 2008
குருதி குண்டு
கடிகார ஓசைகூட
எங்களை இப்போது
கதிகலங்க
வைக்கிறது!
நான்கு திசையில்
நடக்கும்
குண்டு வெடிப்புகளால்!
பாதகம் செய்பவருக்கோ
பாரெல்லாம் தொடர்பு
பாதிக்கப்படுபவனுக்கோ
பக்கத்து வீட்டுக்காரன்
யார் எனத் தெரியவில்லை!
நாகரிக இடைவெளிகள்...
நதிநீர் இணைப்பு
சாத்தியமில்லை..?
குருதியால்
இணைக்கிறது
குண்டுவெடிப்பு!
நமக்குள் இருக்கும்
பிரிவுகளே
நம்மை இன்னும்
பிரிக்க உதவுகிறது!
ஒன்று படுவோம்
இந்தியராய்!
பிடியுங்கள், அழியுங்கள்
தீவிரவாதிகளை!
தயவு செய்து
அழைக்காதீர்கள்
அந்த நாய்களை
'முஸ்லிம்' என்று!
இஸ்லாம்
போதிக்கவில்லை
மததுவேஷத்தை,
ஆதரிக்கவில்லை
தீவிரவாதத்தை!
ஞாயிறு, ஜூலை 27, 2008
ரைட்கால்!
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனருக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்தன.
டிரிங்....டிரிங்.... கதறிக் கொண்டிருந்த டெலிபோனின் ரிசிவரை காதருகே கொண்டு செல்ல கரகர குரல் கீறிச்சிட்டது.
என்ன கமிஷனர் எந்த மாங்கா மடையன்மாட்டினான். சைக்கோன்னு முத்திரை குத்தி உள்ள அனுப்பிட்டு பந்தாவா இருக்கீங்க. இனிமே போலீஸ்காரங்க என்ன செய்றாங்கன்னு யாரும் கேட்கப்போறதில்ல. அடுத்தாப்ல ஏதாவது புதுசா தொடர்கொலைன்னு கேஸ் வந்தாத்தான் உங்களுக்கு வேலை. அதுவரைக்கும்...
டேய் யார்டா பேசுறது... கமிஷனர் கத்தலில் எதிர்முனையில் ரிசீவர் சாத்தப்பட்டது.
டிரேஸ் செய்து பார்த்ததில் சைக்கோ கொலைகள் நடந்ததாகக் கூறப்படும் வடபழனி ஏரியாவின் ஒரு பப்ளிக் பூத் நம்பர் என்று தெரிந்தது.
காவல்துறை இரவும் பகலும் முடுக்கி விடப்பட்டது...
டேய் நில்லுடா... நீ யார்... போலீஸ்காரர்கள் மடக்கியது ஒரு குல்பி வியாபாரியை.
சார், நான் இந்த ஏரியாத்தான் சார். குல்பி வியாபாரம் செய்ய ராத்திரிக்கு தான் சார் வருவேன்.
சரி, சரி போய் வியாபாரத்தை பாரு. நாங்க வேற ஒருத்தனை தேடிக்கிட்டு இருக்கோம்.
தேடுங்க... தேடுங்க... தேடிக்கிட்டே இருங்க. போலீஸ்காரங்க ஒழுங்கா ரோந்து வந்தாத்தானே நாங்களும் திருட்டு பயம், வழிப்பறி இல்லாம நிம்மதியா வியாபாரம் பண்ண முடியும். கமிஷனரை கொஞ்சம் கலக்கிய தைரியத்தில் குல்பி வியாபாரி தன் வியாபாரத்துக்கு சென்று கொண்டிருந்தான்.
புதன், ஜூலை 23, 2008
அமாவாசையும், அப்துல் காதரும்.
அமெரிக்கா... அனில்....
இது என்னடா அமாவாசைக்கும், அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்.
முதல்ல அமெரிக்கா...
சோனியாவின் கைப்பாவை மன்மோகன்சிங் பிரதமரா இருக்கும்போதே, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டால் பிரச்னை இருக்காது.
இந்திய அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானால் கிட்டத்தட்ட வருஷத்துக்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் அமெரிக்காவுக்கு வருமானம்.
இந்தியா அணுகுண்டு சோதனை செய்யக்கூடாதுன்னு தடை விதிக்கக் கூடிய அளவுக்கு இலைமறை காயாக சில விதிகளை இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல்களால், இந்திய அணுகுண்டு தயாரிக்க முடியாது.
சீனாவை கண்ட்ரோல் பண்ணனும்னா அதுக்கான இறங்கு தளமா இந்தியாவை பயன்படுத்திக்கொள்ளலாம்னு ஒரு மாஸ்டர் பிளான்.(ஏற்கனவே பாகிஸ்தானுக்குள் தளம் அமைத்து அங்கே இருந்து நம்மை கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது தெரியும்)
இன்னும் என்னென்னவோ இருக்கு. இப்போதைக்கு போதும்.
மன்மோகன்சிங் காப்பாற்றப்பட்டதால அமெரிக்காவுக்கு லக்கு.
அடுத்து அனில் அம்பானி!
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. இங்க உடன்பிறப்புங்க சண்டையால இந்தியாவையே பிரிச்சி மேஞ்சிட்டு இருக்காங்க.
யார் பெரியவன்ங்கிற அதிகார ஈகோவால், மன்மோகன் அரசைக் காப்பாற்ற தன் அண்ணனை ஆளுமையைக் காலி பண்ணக் கோரியிருக்கிறார் அனில் அம்பானி. இவருக்கு ஆதரவா முலாயம் சிங்.
ஆதரவுக்கு அட்வான்ஸா முகேஷ் அம்பானி, தன் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த முன்னூறு கோடி ரூபாய் விமானத்தை அரசாங்கம் பறிமுதல் செஞ்சிருக்கு.
இப்போது ஜெயிச்சாச்சு. இனிமே முகேஷ் அம்பானியோட தொழில் நிலையங்கள் பாதிக்கப்படலாம்.
அனில் அம்பானி தன்னுடைய தகவல் தொடர்பு தொழில் விஷயத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கையில், முகேஷ் அம்பானி முட்டுக்கட்டை போட்டிருந்தார்.
இனிமே அப்படியிருக்காது. அனில் பையா, சும்மா சரமாரியா தொழிலில் புகுந்து லாபம் சம்பாதிக்கலாம்.
இப்போ தெரிஞ்சிருக்குமே அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம்.
என்ன ஒரு சின்ன வருத்தம்,, குதிரை பேரம் நடந்ததா சொல்றாங்க... ஆனால் பாராளுமன்ற வளாகத்துல நிறைய பச்ச கல்யாணிகள் இருந்ததா சொல்றாங்க
வியாழன், ஜூலை 17, 2008
உனக்குள்ளும்
குறிப்பு: இது யாரையும் குறிப்பிடுவது அல்ல!
இன்னும் சில நிமிடங்கள் தான். சாத்தான்குளம் பேருந்து நிலையத்தை வண்டி அடைந்து விடும். அப்புறம், அழைக்கும் ஆட்டோக்கார நண்பர்களுக்கு முறுவலிப்புடன் வேண்டாம் என்று தலையை ஆட்டி, பேக்கை கையில் மாட்டியபடியே ஊரை பார்த்தபடியே நடந்து வீட்டுக்கு செல்லலாம்...
புஷ்ஷ்ஷ்ஷ்.... பெரிய சீறலோடு பஸ்ஸின் டயரிலிருந்து காற்று பீறிட்டது. சாத்தான்குளம் கருகமேனி ஆற்று தரைப்பாலத்தில் வண்டி நின்று விட்டது.
இன்னும் ஒரு கிலோமீட்டர்தான் சாத்தான்குளம் பேருந்து நிலையம். லேசான எரிச்சல் மனநிலை இருந்தாலும், பரவாயில்லை இங்கேயிருந்தே ஊரைச் சுற்றிப்பார்த்தபடி புளியடி மாரியம்மன் கோயில் வழியாகச் சென்று, நான் படித்த தூய இருதய மேல்நிலைப்பள்ளியையும், தூய இருதய மாதா ஆலயத்தையும் பார்த்தபடியே என்னுடைய வீடிருக்கும் வடக்கு பள்ளிவாசல் தெருவுக்கு சென்று விடலாம் என்று நடக்கத் தொடங்கினேன்.
முன்னதாக பஸ்சிலிருந்து இறங்கிய உடனேயே வீட்டுக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்து விட்டேன்.
அந்த கரிசல் பூமியின் வெம்மையை மனதுக்குள் ரசித்தபடியே நடக்கத் தொடங்கினேன்.
புளியடி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான விளையாட்டுத் திடலில் உடற்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியுமாக சிலர் இருந்தார்கள்.
என்னைப்பார்த்து விட்டு ஒருவன் ஓடி வந்தான். மக்கா எப்படி இருக்கே.
பார்த்திபன்.
மிகவும் நல்ல நண்பன், இயற்கையின் ரசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதால் படிப்பில் கொஞ்சம் தள்ளி நின்றே கவனிப்பவன்.
ஏழாம் வகுப்பு படிக்கும்போது, வகுப்பறையில் ஒரு நீர்க்குருவி கட்டிய கூட்டை , அதிலிருந்து குஞ்சுடன் எடுத்துக்காட்டி, அதற்கு இறையளித்து அந்த இடத்திலேயே அப்படி வைத்தவன்.
குளத்துக்கருகே இருந்த குட்டையில் எனக்கு மீன்பிடிக்க கற்றுத்தந்தவன். சனி, ஞாயிறுவிடுமுறைகளில் குளத்து வழியாக அமுதுண்ணாக்குடி வரை நடந்தே சென்று குருவி, கிளி, கொக்கு பிடித்து வந்ததை பெருமையாகச் சொல்லும்போது, எனக்குள் கோபம் வரும். நம்ம வாப்பா, அம்மா நம்மள எங்கயும் போக உடமாட்டேங்குறாங்க. ஒருநாள் கஷ்டப்பட்டு தெப்பக்குளத்துல குளிக்கிறதுக்கு அனுமதி கெடச்சும், கையில பிளாஷ்டிக் மக்கோட தெப்பக்குள படியில நின்னு குளிச்சதை, என் கூடப்படிச்ச பசங்க பார்த்து கிண்டல் பண்ணுனதை இப்ப நெனசாலும் கொஞ்சம் அவமானமாத் தான் இருக்கும்.
.... மக்கா, என்னடா நான் கேட்டுக்கிட்டு இருக்கேன் பதிலக்காணம்.
நிகழ்காலத்துக்கு வந்த நான், நண்பனைத் தழுவிக் கொண்டேன்.
என்ன பார்த்தீபா, எப்படி இருக்கே. என்ன பண்ற, வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க...
இதுவரை பார்க்காத ஒரு விரக்தியான சிரிப்பு பார்த்திபனின் முகத்தில் இருந்தது.
அவனது வார்த்தைகளில் கலந்து வந்த போதை வஸ்துவின் வாடை அவனுக்குள் சோகம் கப்பியிருப்பதை எனக்குள் அறிவுறுத்தியது.
மக்கா, திருப்பூரில் போய் வேலை பார்த்தேன். சம்பாதிச்சு குடும்பத்தைத் தான் காப்பாத்தினேன். கல்யாணமும் செஞ்சு வச்சாங்க. என்ன பண்றது நம்ம சம்பாத்தியத்துக்குள்ள குடும்பம் நடத்துற வகை தெரியல என் சம்சாரத்துக்கு. சண்டை சச்சரவுதான். கோபிச்சுட்டு அவங்க அப்பா வீட்டுலபோய் உட்கார்ந்துக்கிட்டா. சமாதானம் பண்ணிக்கூப்பிட்டும், பிறந்த வீட்டு சொகுசு வாழ்க்கைக்காக அங்கயே உட்காந்துட்டா. சரி பிள்ளைய பார்க்கலாம்னு போனாலும், காட்ட மாட்டங்குறா.
பிள்ளைய அவளே பாத்துக்கிடட்டும்னு, நான் ஊருக்கு வந்துட்டேன். இங்க வந்தா எல்லோரும் என்னையத்தான் சத்தம் போடுறாங்க.
வெறுப்பாயிட்டு மக்கா. திரும்பவும் வேலைக்கு போனா, வேலைக்கு சேக்கமாட்டேனுட்டாங்க. அதான் இப்ப நம்ம ஊருலேயே சந்தை யாபாரத்துக்கு போய்ட்டு வர்றேன். திங்கள் கிழமை உடன்குடி சந்தை, செவ்வாய் கிழமை நாசரேத், வியாழக்கிழமை நம்ம ஊரு, வெள்ளிக்கிழமை திசையன் விளை. நாலு சந்தைக்கு போனாலும் காசு வந்துருது.
பிள்ளைக்கு காசு கொஞ்சம் அனுப்பிட்டு, மீதிய என் கையில வச்சு செலவழிச்சிட்டு இருக்கேன் மக்கா...
ஏல பார்த்திபா, முள்ளுச்செடி புதருக்குள்ளயிருந்து சத்தம் வர, மக்கா நாளைக்கு பார்க்கலாம்னு சொன்னபடியே, பார்த்திபன் ஓடினான், கொஞ்சம் இருக்கும் அந்த வஸ்துவையும் சுவைத்துவிட...
பார்த்திபனை பார்த்து மனம் வருத்தப்பட்டது.
என்ன பார்த்திபன் தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டான், நான் பதிவு போட ஆரம்பிச்சிட்டேன். ஆனாலும் என் மனைவி, என் பிள்ளை என் கூடத்தான் இருக்காங்க.
சோகம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையில்.
செவ்வாய், ஜூலை 15, 2008
சும்மானாச்சுக்கும்!
குரு சொன்னதும் சிஷ்யர்கள் குழம்பிப் போய் நின்றனர். எப்படிக் குருவே தண்ணீரில் உடுப்புகள் நனையாமல் செல்வது.
குரு மவுனத்தை மட்டுமே மொழியாக்கி விட்டு அக்கரைக்கு சுற்றிவந்து நின்று கொண்டார்.
சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த சிஷ்யக்கோடிகளில் இரண்டுபேர் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர்.
தங்கள் வேட்டிகளைக் களைந்து ஒருவருக்கொருவர் மாற்றி உடுத்திக் கொண்டு குளத்துக்குள் இறங்கி நடந்து கரையேறினார்கள்.
குருவே குளம்பிப் போனார்.
அந்த இரண்டு சிஷ்ய கோடிகளும் சிரித்தபடியே குருவிடம் வந்து, குருவே
தன் ஆடை நனையாமல் தானே கரையேற வேண்டும் என்றீர்கள். அதனால் தான் எங்களுக்குள் ஆடையை மாற்றிக்கொண்டு அவன் ஆடையை நான் நனைத்தேன். என் ஆடையை அவன் நனைத்தபடி நடக்க முடிந்தது என்ற்னர்.
குரு சிஷ்யர்களை நோக்கி பெருமிதத்துடன், எப்படியோ நீங்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த அரசியல்வாதி ஆவீர்கள் என்று அவர்களை ஆசீர்வதித்தார்.
உடனே, அந்த இரண்டு சிஷ்ய கோடிகளும் குருஅணிந்திருந்த வஸ்திரங்களையும் , அவர் வைத்திருந்த பொருட்களையும் அள்ளிச் சுருட்டியபடியே, அரசியல் வாழ்க்கைக்கு உங்களிடமே அச்சாரம் போடுகிறோம் என்றபடியே அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர்.
குரு அம்போ என்றபடி நின்றார்.
நீதி: அரசியல் வார்த்தை நுழைந்தாலே வாழ்வில் எல்லாம் பறியோகும்.
சனி, ஜூலை 12, 2008
பெருந்தலைவர் காமராஜர்!
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.
கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.
தந்தையொடு கல்விபோம் - என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.
அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
1957 - ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.
”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.
நன்றி: பெருந்தலைவர் காமராஜர் வெப்தளம்
புதன், ஜூன் 25, 2008
நீதிக் கதை
ஆனாலும் என்ன பண்றது அவருக்கும் வயசாயிடுச்சு. அவரு கணிச்சபடி அவரை சாவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நாமதான் ரொம்ப வெவரமானவராச்சே, நம்மள சாவுகொண்டு போகாம தடுக்க ஏதாவது செய்தாகனும்.
இராப்பகலா கண்ணுமுழிச்சி அவரமாதிரியே 6 நடமாடும் பொம்மைகளை செஞ்சாரு. அவரா, பொம்மையான்னு இனம்பிரிச்சி பார்க்க முடியாத மாதிரி இருந்துச்சு.
சாவு வர்ற நாளு அவருக்கு. வலப்பக்கம் மூணு, இடப்பக்கம் மூணு பொம்மைகளை படுக்க வச்சுட்டு, நடுவுல அவரும் படுத்துக்கிட்டாரும்.
உசுர எடுக்கிறவங்களோட சிஷ்யர்கள் வந்தாங்க.
என்னடா இது நமக்கு வந்த சோதனை. இங்க 7 பேரு இருக்கானுங்களே, யாரு அந்த விவரமான ஆளு. எப்படி அவரு உசுர எடுக்குறதுன்னு சிஷ்யர்களுக்கு குழப்பம்.
சரி, இந்தக் குழப்பத்தை நம்ம குருக்கிட்டயே விட்டுறலாம்னு நேரா குருகிட்ட வந்துட்டாங்க.
என்னாச்சு சிஷ்யப்பிள்ளைங்களா, வெறுங்கையோட வந்துருக்கீங்க...
அது வந்து குரு அங்கு ஏழு பேரு இருக்கானுவ. யார தூக்குறதுன்னு தெரியலை.... அதான்.
நல்லதாப் போச்சு அம்புட்டுபயபுள்ளையும் தூக்கிறவேண்டியதுதானே...
குருவே எங்க வேலைக்கு ஆப்பு வைப்பீங்களோன்னு உங்ககிட்ட வந்தா, நீங்க உங்க பதவிக்கே ஆப்பு வச்சிடுவீங்க போலயிருக்கே...
சரி, சரி... நாம் போய் அந்தப் பயலை தூக்கிர்றேன்.
குருவுக்கே தலை சுத்திக்கிச்சு. இந்த ஏழுல யாருடா நாம தூக்க வேண்டியது.
குருவோட மனக்குமுறலும் வெவர பார்ட்டிக்கு கேட்டு அவரு மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டிருக்காரு.
குருவுக்கு மண்டையில பல்பு எரிய... யப்பா, இந்த பயபுள்ளைங்கள எப்படிப்பா, இப்படி நுணுக்கமா படைச்சே. நீ வெரி குட்டுப்பா, சூப்பரப். உன்னை மாதிரி யாராலயும் படைக்க முடியாது. வெரி கிரேட்டுன்னு.... எக்ஸ்ட்ராவா குரு பொழந்து கட்ட...
அதுவரைக்கும் பொத்திக்கிட்டிருந்த அந்த வெவரம், எய் நாந்தாம்டே இதையெல்லாம் செஞ்சேன். அத வுட்டுட்டு யாரையோ ஓவரா பேசுறியடே...ன்னு வெவரம் எகிறிச்சு.
வாடே, மாப்ள நல்ல மாடடிக்கிட்டியான்னு குரு வெவரத்த தூக்கிட்டாரு.
நீதி: எம்மாம் பெரிய கொம்பனா இருந்தாலும் மவனே கடைசியில உனக்கும் பாலுதான்.
திங்கள், ஜூன் 16, 2008
நாகூர் தர்கா வரலாறு



அற்புதங்கள் நிகழ்த்தி அகிலத்தை ஆளும் இறைநேசர்களில் நம்முள் என்றும் பிரியமானவர்
நாகூரில் அடங்கியிருக்கும் ஞானப்பேரொளி சையது அப்துல் காதிர் ஷாஹ§ல் ஹமீது
ஒலியுல்லாஹ்(ரலி). இந்நாதரின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்.
முஹம்மது நபியின் வழித்தோன்றல் சையிது ஹஸன் குத்தூஸ் என்பவருக்கும், நபியின்
மருமகன் அலி(ரலி) அவர்களின் வழித்தோன்றலான சையித் ஹமீதுத்தீன் மகளுமான அன்னை
பாத்திமாவுக்கும் மகனாக சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவின் மாணிக்கப்பூர்
நகரில் பிறந்தவர் தான் ஷாஹ¨ல் ஹமீது ஒலியுல்லாஹ்.
இறைத்தூதர் ஹிலுரு(அலை) அவர்கள் ஷாஹ¨ல் ஹமீதின் பிறப்பு குறித்து அன்னை பாத்திமாவுக்கு
அறிவித்தார்கள். மூன்று மாத கருவாக இருந்தபோதே தனது அற்புதத்தை நிகழ்த்திவிட்டா
ஷாஹ¨ல் ஹமீது நாயகம். உடல்நலக் குறைவாக இருந்த தனது தந்தை நலம் பெறுவார் என்று
தாயின் கருவறையில் குரல் எழுப்ப அவ்வாறே தந்தை குணமடைந்தார். ஆறுமாதக் கருவாக
இருந்தபொழுது தனது தாயார் தொழுகைக்காக ஒழுச் செய்ய கிணற்றுள் விழுந்த பாத்திரத்தை
தண்ணீரோடு தாயின் காலடியில் இருக்க வைத்தார். கருவறையில் இருந்தபடியே மேலும் இரண்டு
அதிசயங்களை நிகழ்த்திய ஹாஹ¨ல் ஹமீது , ஹிஜ்ரி 910ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம்
நாள் வியாழன் மாலை வெள்ளிக்கிழமை இரவில் இப்புவியில் ஜனனம் செய்தார்.
நாயகம் பிறந்ததும் ஹிலுரு(அலை) மற்றும் இல்யாஸ் நபிகள் அந்த அறையில் தோன்றினார்.
ஹிலுரு(அலை) குழந்தையை கையில் எடுத்து பாங்கு சொன்னார்கள். இல்யாஸ் நபி ‘சையது
அப்துல் காதிர்’ எனப் பெயர் சூட்டிவிட்டு தாய்க்கருகில் கிடத்திவிட்டு மறைந்தார்கள்.
நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த ஷாஹ¨ல் ஹமீது நாயகம்
சிறுவயதிலேயே நோன்பு நோற்பது, கேட்பவர் மெய் மறக்கும் நிலையில் திருமறையை இசையுடன்
ஒதுவது, மார்க்க கடமைகளை முறையாக கடைப்பிடிப்பது என்று பக்தியில் திளைத்து வந்தார்கள்.
குர்ஆன், தப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ§ ஆகிய மார்க்கக் கல்விகளையும் சரித்திரம், பூகோளம்,
கணிதம், தத்துவம், தர்க்கம், வானசாஸ்திரம் ஆகிய லௌகீகக் கல்விகளையும் பதினெட்டு வயது
நிரம்புவதற்குள் கற்று முடித்தார்கள். இடையிடையே ஹிலுறு(அலை) அவர்களும் சிறுவன் முன்
தோன்றி வேதத்தை தெளிவாக்கி வைத்தாகள்.
வாலிப பருவம் அடைந்தது ஷாஹ¨ல் ஹமீது அவர்கள் தங்களுக்கான ஞானகுருவைத்
தேடி ஹிஜ்ரி 928ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் ஒரு திங்கட்கிழமை வழித்துணையின்றி,
கைச்செலவுக்குப் பொருள் இன்றி, துறவுக்கோலத்துடன் குவாலியர் பட்டணத்துக்கு விரைந்தார்.
நடை பயணமாக காடுகளை கடந்து வந்து கொண்டிருந்த நாயகத்தை திருடர்கள்
கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நெருங்கினார்கள். அவரிடம் பொருள் இல்லாததால் நாயகத்தை
கொலைசெய்யக் கருதி ஆயுதங்களால் வெட்டியவர்கள் தங்கள் உடல்களே துண்டாகி விழுந்தனர்.
கொள்ளையர்களின் உறவினர்கள் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அவர்களின் உடலை ஒட்டி,
உயிர் கொடுத்து அற்புதம் நிகழ்த்தினார்.
குவாலியர் நகரை நெருங்குகையில் அங்கிருந்த சிற்றூரில் ஒரு சிறிய மசூதியில் நாயகம் தங்கி தனது
ஞானகுருவை இறைவனே காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அப்போது தோன்ரிய
அசரீரி ‘ஷாஹ் அல் ஹமீது’ என்ற கருணைப் பெயரை உமக்கு சூட்டியுள்ளோம். உமது ஞானகுரு
முஹம்மது கௌது. அவரிடம் செல்’’ என்றது.
அதன்படி முஹம்மது கௌதுவிடம் சென்று அவரது மெய்ஞ்ஞான பயிற்சிக்கூடத்தில் பயின்று
மெய்ஞ்ஞானத் தீட்சை பெற்றுக் கொண்டார். பத்து ஆண்டுகள் மெய்ஞ்ஞானக் கல்வி பயின்றவர்
பின்னர் அங்கிருந்து கிளம்பினார்கள். அவருடன் நானூற்று நாற்பது சீடர்கள் உடன் சென்றனர்.
அப்போது மலைவழியாக வரும்போது ஆதிபிதா ஆதம் (அலை), ஹவ்வா(அலை) நாயகத்துக்கு
ரிக்வத் எனப்படும் திருவோடு போன்றதொரு பாத்திரத்தை வழங்கினார்கள். தேவைபடும் போது
தேவைப்பட்ட உணவை இதனின்று பெற்றுக் கொள்ளலாம்.
ஊர்தோறும் மக்களுக்கு உபதேசித்தும், உண்மையைப் பேணச் செய்து இஸ்லாத்தை நிலை
நாட்டிக் கொண்டே நாயகம் அவர்கள் மாணிக்கப்பூர் வந்தடைந்தனர். அங்கு கொஞ்ச காலம்
இருந்தவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்வதை தடை செய்தவர்களாக சீடர்களுடன்
லாகூர் சென்றார். அங்கு இறைவனின் ஆணைப்படி காழி நூருத்தீன் முஃப்தி என்பவரின் மனைவி
ஜஹாரா பீபிக்கு தான் மென்ற வெற்றிலை தாம்பூலத்தை கொடுத்து அவரை கருவுறச் செய்தார்.
அவர் பெறப்போகும் முதல் குழந்தைக்கு ‘முஹம்மது யூசுஃப்’ என பெயரிட நூருத்தினிடம்
தெரிவித்ததோடு குழந்தையின் தன்மை குறித்தும் தெரிவித்த நாயகம் தன் சீடர்களுடம் பயணத்தை
தொடர்ந்தார்.
மேற்கு, தென்மேற்கு ஆசிய நாடு நகரங்களைச் சுற்றிக்கொண்டு துர்க்கி தேசத்தினுள் புகுந்த
நாயகம், கர்ஸான என்ற பட்டணத்தை அடுத்துள்ள மலையில் நாற்பது நாட்கள் தனித்து சில்லா
இருந்தார்கள். அன்று ஹிஜ்ரி952ம் ஆண்டு ரஜப் மாதம் 12&ம் நாள் லாகூரில் ஜஹாரா பீபிக்கு மகன்
பிறந்தான். மனக்கண்ணால் தன் மகனை கண்டு உரையாடி முத்தமிட்டு மகிழ்ந்தார்கள்.
ஒருநாள் இரவு தொழுகையின் போது தனது தந்தை மரணிப்பதை அறிந்து தன் சீடர்களுடன்
ஒரே இரவில் ஆசியா மைனரிலிருந்து இந்தியாவின் மாணிக்கப்பூரை நடந்தே அடைந்து அதிசயம்
நிகழ்த்திய நாயகம் தந்தை மறைந்து 40 தினங்களுக்குப் பின் அரேபியாவுக்கு கிளம்பினார்கள்.
அங்கு மக்கா, மதீனாவில் ஹஜ்ஜு செய்தபடி இருந்தார் நாயகம். அப்போது நாயகம் நிகழ்த்திய
அதிசயத்துக்கு பரிசாக இபுனு ரவூஃப் தனது கப்பலை நாயகத்துக்கு சொந்தமாக்கி பத்திரம்
கொடுக்க, அதை தன்னிடம் வந்து யாசித்தவனுக்கு கொடுத்துவிட்டு கஃபாவை நோக்கி
நடந்தார்கள்.
நாயகம் அவர்கள் தங்களின் 37&ம் வயதில் ஜித்தா துறைமுகத்திலிருந்து கப்பல் ஏறி கேரளாவின்
பொன்னாணி எனும் ஊரில் கரையிறங்கினார்கள். அப்போது நாயகத்துடன் அவரது மகன்
யூசுஃப் ஆண்டகையும் இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து லட்சத்தீவுகள், சிலோன் முதலிய
வெளிநாடுகளுக்கும் காயல்பட்டணம், நத்தம், மேலப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் சென்று
இறைப்பிரசங்கம் செய்தவர் தஞ்சாவூரை அடைந்தார். அதை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கன்
உடல்நலம் குன்றியிருந்தார். நாயகத்தின் சிறப்புகள் தெரிந்து அவரைக் கண்டு நோய் நீங்கப்பட்ட
மன்னன், அதற்கு வெகுமதியாக நிலங்களைக் கொடுத்தான். அந்த இடத்தின் பகுதியில் தான்
தர்காவும், அதைச் சேர்ந்த குளம் முதலிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.
ஷாஹ¨ல் ஹமீது நாயகம் அவர்கள் நாஹ¨ரில் இருபத்தெட்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அற்புதங்கள் பல நிகழ்த்திய நாகூர் நாதர் ஹிஜ்ரி 978ம் வருஷம் ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம்
நாள் வெள்ளிக்கிழமை இரவு புகழுடம்பு எய்தினார்கள்.
தர்கா வரலாறு:
நாகூர் நாயகம் மறைந்ததும் அவரது புதல்வர் தனது மனைவி, மக்களுடன் அங்கு குடித்தனம்
நடத்தி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருந்ததோடு
நாயகத்தின் கஃப்ரை சுற்றி பலகையால் பள்ளி போல் அடைத்தார்கள். அந்தப்பள்ளியே இன்று
அழகிய ஐந்து மினாராக்களை( கோபுரம்) உடையதாய் விளங்குகிறது.
முதல் மினாராவை இப்ராஹீம் கான் என்பவர் ஹிஜ்ரி ஆயிரத்து ஐம்பத்தைந்தாம் வருடம்
கட்டினார். இதற்கு சாகிபு மினாராவென்று பெயர். இரண்டாம் மினாராவை செய்யது மரைக்காயர்
கட்டிக் கொடுத்தார். இம்மினாரா நாயகத்தின் தலைப் பக்கம் இருப்பதால் தலைமாட்டு மினாரா
எனப்படுகிறது. இந்த மினாராவில் இந்து அன்பர் ஒருவர் சின்ன தங்கக் கலசத்தை அமைத்துக்
கொடுத்துள்ளார்.
மூன்றாம் மினாரா( முதுபக்கு மினாரா) மலாக்காவை சேர்ந்த பீர் நெய்னா என்பவராலும்,
நான்காம் மினாரா (ஓட்டு மினாரா) பரங்கிப்பேட்டை நீதிபதி தாவுக்கான் என்பவராலும்,
ஐந்தாம் மினாரா(பெரிய மினாரா) தஞ்சையை ஆண்டுவந்த பிரதாபசிங்கு மன்னனாலும் கட்டிக்
கொடுக்கப்பட்டது. பெரிய மினாரா 131 அடி உயரம் கொண்டதாகும்.
நாகூர் தர்கா ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. சக்கரவர்த்தி சுல்தான் துல்கர்னைன்
கட்டிய முதுபக்கு(1). இந்த ஸ்தலத்தில் தான் நாயகம் மரணித்தார்கள். இந்த ஸ்தலத்தில் உள்ள
அற்புதக்கேணியின் தண்ணீரை புண்ணிய தீர்த்தம் என்று கருதி பக்தர்கள் எடுத்து செல்லுகின்றனர்.
நாயகத்தின் இறந்த உடலை குளிப்பாட்டி யாஹ§சைன் பள்ளி(2).இது முதுபக்குக்கு வெளியில்
தென்புறத்தில் இருக்கின்றது. நாயகத்தின் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் தேங்கி நின்ற சிறிய
குட்டை தான் தர்கா குளம்(3). குட்டை போலிருந்ததை அச்சை சுல்தான் பெருங்குளமாக வெட்டி
தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தான்
.
தர்காவில் இருக்கும் பீர்மண்டபம்(4). திருவிழாக்காலங்களில் பீர் சாயபு என அழைக்கப்படும்
தபோதனர்கள் 3 நாள் உபவாசம் இருந்து நோன்பு திறந்துவிட்டு பீர்மண்டபத்தில் வந்து அமர்வர்.
நாயகம் திருமுடியிறக்கிய கடற்கறை ஓரம் தான் சில்லடி(5) என்ற ஆலயம் இருந்து வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவும் நடந்து வருகிறது.
நாயகம் அவர்கள் 40 நாள் இறைதியானம் இருந்த புன்னிய ஸ்தலம் வாஞ்சூர் பள்ளிவாசல்(6). இது
நாகூரிலிருந்ஹ§ 21/2 மைல் தொலைவில் உள்ளது.
ஹஜ்ரத் ஷாஹ¨ல் ஹமீது பாதுஷா ஆண்டவர்களின் சன்னதி 7 வாயில்கள் கொண்டது. இவை
அனைத்தும் வெள்ளித்தகட்டால் வேயப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கான
குத்துவிளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்நிதிக்குள் எந்த மதத்தினரும் செல்லலாம்.
இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி கடைசி மூன்று வாசல்களை கடக்க மட்டும் பெண்களுக்கு
அனுமதியில்லை. நாகூர் ஆண்டவர், அவரது மகன் முகம்மது யூசுஃப், மருமகள் செய்யிதா சுல்தான்
பீவி அம்மாள் ஆகியோரின் சமாதிகள் உள்ளே அமைந்துள்ளது. நாகூர் ஆண்டவர் இடுப்பில்
கட்டியிருந்த இரும்புச்சங்கிலி, குமிழ்கள் இல்லாத காலணி, அதிசயம் நிகழ்த்திய கொம்புத்
தேங்காய ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அரபி மாதம் ஜமாத்துலாகிறு பிறை 1&ல் தர்காவில் கொடியேற்றத் திருவிழா நடக்கும் பிறை 10ம்
நாள் இரவு நாகையிலிருந்து அதி விமரிசையாக சந்தனக்கூடு புறப்பட்டு வந்து ஆண்டவர்கள்
சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பிறை 11&ல் பீர் ஏகுதல் நடைபெற்று 14&ம்
இரவு இறுதிக்கட்டம் அடையும். இந்த திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் கலந்து
கொள்கின்றனர். நாகூர் சமாதியில் போர்த்தப்படும் சால்வை, மலர்ப் போர்வை பழனியைச்
சேர்ந்த ஒரு இந்துக்குடும்பத்தாரால் இன்றளவும் கொண்டுவரப்படுகிறது. நாகூர் தர்காவை
நாயகத்தின் வாரிசுகளான சுமார் 640 குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர். தர்காவுக்கு வரும்
காணிக்கைகளே இவர்களுக்கு வருமானமாகும்.
அனைத்து மதத்தினருக்கும் அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார் நாகூர் ஆண்டவர்.
புதன், மே 21, 2008
உல்டா பாடல்
வெயிலோடு வாயாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
சோர்ந்து போனோமே
பஸ் போகும் கார் போகும்
ரோட்டோரம் நாம் போனா
தார் கூட சூடாகித்தான்
செருப்பு அறுந்தோடும்
நிழல் வந்தா ஒதுங்கி நில்லு
தண்ணீன்னா குளுறும் சொல்லு
குடிப்போமே ஜூஸு கேளு...
கேழ்வரகு நல்ல கூழு
கேழ்வரகு நல்ல கூழு!
- வெயிலோடு
ஊரச் சுத்தும் சேல்ஸ்மேன வேல
ரொம்ப ரசிச்சோம்
வெயிலுலதான் சுத்தும்போது
கண்ணீர் வடிச்சோம்
வேற வேல போகலான்னு
நெஞ்சில் நினைச்சோம்
அப்பாவ பார்த்ததும்
இடுப்பு பெல்ட்ட நெனச்சோம்
எப்படியோ கோடையத்தான்
நாம இங்க சமாளிச்சாலும்
அடுத்து வர்ற மழக்காலத்த எங்க சொல்லுவோம்
அப்பவும் மழையிலதான் ஊரச் சுத்த முடியாதுன்னு
பழைய பல்லவியத்தான் நாமும் இன்னு படிப்போம்!
கோடைகாலம் போனாலு மழத்தூறல் விழுந்தாலும்
வேலையைத் தவிர வாழ்க்கையில வேறு எத அறிஞ்சோம்!
-வெயிலோடு
வியாழன், மே 15, 2008
திருநங்கைகள் - சமூகத்தின் பிழை
ஆனால் திருநங்கைகள் தங்கள் மனதின் வழியே நடந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் எதுவாக உணர்கிறார்களோ அதுவாகவே வாழ்ந்து வருகிறார்கள். எங்கோ ஒருசிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் தவறான பட்டம் சூட்ட வேண்டாம்.
திருநங்கை வித்யா அவர்களின் நான் வித்யா புத்தகம் நான் படிக்காத போதும், அப்புத்தகத்தின் தாக்கத்தை எனது அண்ணாச்சியின் பதிவில் அவரது எழுத்தில் உணர்ந்து கொண்டேன்.
அதை படித்துக் கொள்ள கீழே உள்ள இடுகைக்குச் செல்லுக்கள்.
http://asifmeeran.blogspot.com/2008/05/blog-post_14.html
புதன், ஏப்ரல் 23, 2008
வியாழன், ஏப்ரல் 17, 2008
தொடர்கதை
உயிர்பிரிந்த காய்ந்த சருகுகள் மட்டும் நடந்து வந்த என் காலடியில் சிக்கி கசங்கி உடலையும் உடைத்துக் கொண்டிருந்தன.
திடீரென தோள்பட்டையை தொடவும் மின்சாரம் தாக்கிய உணர்வாய் திடுக்கிட்டு திரும்பினேன், வாட்ச்மேன் நின்று கொண்டிருந்தார்.
யாருப்பா, நீ பாட்டுக்கு கேட்டை திறந்து உள்ள வந்துக்கிட்டிருக்க. எதிர்த்த டீக்கடையிலருந்து உன்னைக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.
அறுபதை தாண்டியிருந்தாலும் உழைத்து சாப்பிடும் உறுதி உடம்பில் திணறெடுத்து நின்றது.
நான்... என் பேரு ராஜா. இந்த பங்களாவோட வோனரோடு சொந்த ஊருல இருந்து வர்றேன். சொந்தக்காரந்தான்.
சொந்தக்காரன்னு சொல்ற, அவங்க யாரும் இப்ப இங்க இல்லயப்பா. மலேசியாவுல போய் செட்டிலாய்ட்டாங்களடே தெரியாதா. சரி, நீ யாரு பையம்பா.
அண்ணாச்சி நான் சௌந்தரரஜன் மகன்.
யாரு, அந்த மேக்குத் தெரு சுந்தர் மச்சனன் பையனாடே.
ஆமா அண்ணாச்சி. அண்ணாச்சி உங்க பேரு தங்கவேலா.
ஆமாம்பா. இங்க என்ன சோலியா வந்தடே.
இங்க எனக்கு வேலை கெடச்சிருக்கு. தங்க இடம் இல்ல. அப்பா தான் இந்த பங்களா அட்ரஸ கொடுத்தாங்க. அதோட பங்களா ஓனர்கிட்டயும் அப்பா பேசிட்டாங்களாம்.
அப்படியா, சரி நம்ம ஊரு புள்ளதானப்பா தாராளமா தங்கிக்க். இங்க நா மட்டும்தான் ஒத்தையில இருந்து பங்களாவ பாதுகாத்துக்கிட்டு வர்றேன். நீயும் கூட இருந்தன்னா நல்லது தானே. அது சரி ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க.
வாடே, போய் டீ சாப்ட்டுட்டு வரலாம்!
ஊருல எல்லோரும் நல்ல இருக்காங்க அண்ணாச்சி. டீ அப்புறமா சாப்பிடலாம். முதல்ல குளிச்சிட்டு கொஞ்சம் தூங்கணும் அண்ணாச்சி.
டிரெயின்ல கூட்டத்துல வந்ததுல உடம்பெல்லாம் அடிச்சிப் போட்ட மாதிரி இருக்கு அண்ணாச்சி.
சரிப்பா, வா, இந்த ரூம்ல தங்கிக்க. போய் பாத்ரூம்ல குளிச்சிட்டு வந்து உக்காரு. உனக்கு டிபன் வாங்கிட்டு வந்துர்றேன்.
ஊர்க்காரன்னதும் அண்ணாச்சி காட்டிய பாசம் நெகிழச் செய்தது. மனதுக்குள் அதை ரசித்தபடியே குளியலைறையில் நுழைந்த நான் பார்த்த காட்சி அண்ணாச்சி என்ற அலறலை என்னையும் அறியாமல் என் வாய் அலறியது....
தொடர்ச்சி நாளை மறுநாள்!
வியாழன், ஏப்ரல் 10, 2008
சிட்டி பாபுவா, சீ...பாபுவா?
ஆனால் நடுவர்கள் என்ற போர்வையில் சிட்டிபாபு செய்யும் அலம்பல்களுக்குத் தான் அளவே இல்லாமல் போய் விடுகிறது.
கலைஞர்களை கவனிப்பதை விட நிகழ்ச்சி தொகுப்பாளினி மகேஷ்வரியை கவர் செய்வதிலேயே சிட்டிபாபுவும், நிகழ்ச்சி ஒளிப்பதிவாளரும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அது அவர்கள் விருப்பம் என்று விட்டாலும் கூட கடந்த 5-ந்தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியினுடே மகேஷ்வரியிடம் சிட்டிபாபு கேட்ட கேள்வி:
சி.பாபு: மகேஷ்வரி நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா, இல்ல காதலிக்கிறீங்களா? காதலிக்கப் போறீங்களா.
மகேஷ்வரி: ஐயோ, நான் யாரையும் காதலிக்க வில்லை. என் அம்மா பார்த்து சொல்பவரை தான் கட்டிக்குவேன்.
சி.பாபு: பார்த்து, உங்க அம்மா அவரை கரெக்ட் பண்ணிக்கப் போறாங்க....
இதற்கும் மகேஷ்வரி சிரிப்பைத் தான் காட்டுகிறார். சரி தொலைக்காட்சி வெளிச்சத்தில் தாயை எப்படிபேசினாலும் கேட்டுக் கொள்வார்களோ என்னவோ?
சிட்டிபாபு சார், ஜோக்குக்காக பேசுறாதா நெனச்சு விஷமத்தனமா பேசாதீங்க. உங்க காமெடிகளை ரசிக்குற ரசிகனாத்தான் இதை சொல்றேன்.
நீங்க நடுவரா வேற இருக்கீங்க யோசிங்க.
சனி, ஏப்ரல் 05, 2008
புதன், ஏப்ரல் 02, 2008
டேய் நீ ரொம்ப நல்லவனாடா?
பஸ்ல வரும்போது அந்த வெள்ளக்காரிய கூட்டத்துல இடிக்கச் சொன்னது நீதான். அப்படி இடிக்கும் போது பிக்பாக்கெட்னு அவ கத்தி நான் அறை வாங்கும்போது, யாருக்கோ வந்த வினைன்னு சும்மா இருந்துக்கிட்டு சும்மா பொளந்து கட்டுன பிறகு மாறிக்கடான்னு சமாதானம் சொன்ன.
சரி நீ இவ்வளவு நல்லவனாடான்னு நெனைக்கும் போதே, அந்த ஐஸ்க்ரீம் பார்லர்ல ஆண்ட்டி உட்காந்து சாப்பிடுறத பாக்க வச்சி ஜொல்லு வடிய வச்ச.
சரி, வேணாம்னு நான் ஒதுங்கினாலும், அதான் அடியெல்லாம் வாங்கியாச்சே, பின்ன ஏன் நல்லவன் வேஷம் போடுறன்னு கேள்வி கேட்ட....
ஆபிஸ்ல நான்பாட்டுக்கு வேலை பார்த்துட்டு இருந்தாலும் ,போய் அந்த ரிசப்ஷனிஸ்ட் இப்பத்தான் வந்திருக்கா! போய் ஒரு குட்மார்னிங் சொல்லிட்டு சிங்கிள் லுக் விட்டுட்டு வாப்பான்னு உசுப்பேத்துற.
ஆனா நான் போறதுக்குள்ள எப்படா, அவ வருவான்னு வந்த உடனே போய் குட்மார்னிங் சொல்றதுக்கு ஒரு கும்பலே அடிச்சுக்குது. எல்லாம் அவ மச்சம் இருக்குற இடம்தான் காரணம்.
வேலை விட்டு போகும்போதாவது ஒழுங்கா , ஆபீஸ் பிரண்டு வண்டியில போலாம்னா, அந்த டைபிஸ்ட போற பஸ்சுல ஏறி ஒரு , லுக் உட சொல்ற.
அந்த நேரத்துல நீ சொல்றது ரொம்ப நல்லா இருக்கிறதால நானும் ஏற, அவ வீட்டுக்காரணும் அதே பஸ்ல ஏறி வரணுமா. அவ என்னைய நோக்கி புருஷன்கிட்ட கையக் காட்ட அதிர்ச்சியில சிக்னல்லயே இறங்கி வேற பஸ்ச பிடிச்சி வீட்டுக்கு போயிட்டேன். ஆனா அடுத்த நாள் காலையில பாத்தா டைபிஸ்ட் எங்கிட்ட வந்து, என் புருஷன் கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டிருக்கும்போதே இறங்கி போயிட்டீங்களேன்னு ஒரு பற்பசை சிரிப்பு சிரிச்சுவைக்க நான் என்னத்த சொல்ல...
எப்படிடா உன்ன வச்சிட்டு நான் சமாளிக்கப்போறேன்.... கண்ணாடியில் தெரிஞ்ச மனசாட்சிக்கிட்ட ஒப்பாரி வச்சிட்டு இருந்தான் அந்தப் பயபுள்ள.
சனி, மார்ச் 29, 2008
நிவாரணம்
அடியே சண்டாளி, இப்படிப் பண்ணிப்புட்டியேடி.... உன் ஆதங்கம் அடங்குற அளவுக்கு அழுது தொலைச்சிட்டு, எங்க வயலு வரப்பெல்லாத்தையும் இப்படி தண்ணிக்காடாக்கிட்டியடி. விளைஞ்சி நின்ன உளுந்தெல்லாத்தையும் இப்படி உயிரோட உறிஞ்சிட்டியடி...
ஜலசமாதியான உளுந்து பயறை கையில் பிடித்தபடி வானத்தை பார்த்து தன் வறுமையை வசவுகளாக்கிக் கொண்டிருந்தான் சின்னையன்.
நான் என்ன நாலுகாசு பாக்கணும்னா விவசாயம் பண்றேன், என் வயிறு நெறஞ்சா போதும், மானம் மருவாதயோட ஒழச்சி பிழைக்கணும்னுதானடி வெள்ளாமை பண்றேன். அதவந்து காவு வாங்கிட்டியே.
இதுக்காக நான் கடனுக்கு வாங்குன பணத்தை எப்படி அடைக்கப்போறேன். எப்படி என் பொண்டாட்டி பிள்ளைகளை காப்பாத்தப் போறேன், இப்படி பண்ணிட்டியடி....
கலங்கிப் போய் கிடந்தவனின் தோளில் கை விழ திரும்பிப் பார்த்தான். பொன்னையன் அங்க நின்னுக்கிட்டிருந்தான். டேய் நம்ம சோகத்தை தீர்க்குறதுக்குதான் மந்திரி வந்திருக்காரு. வா அவருகிட்ட போவோம். நிவாரண உதவி தருவாரு.
நாளைய முதல்வர், வருங்கால பிரதமர்.. அவர்... இவர்.. அண்ணன்... தொண்டரடிபொடியின் பிளிறல்கள் காதைக் கிழித்தன.
சின்னான் இங்க வாங்க. மழையில பாதிக்கப்பட்டதா சொன்னாங்க. கவலைப்படாதீங்க, உங்கள மாதிரி பாதிக்கப்பட்டவங்கள கைகுடுத்து தூக்கி விடுறதுதான் நம்ம அரசாங்கம். இந்தாங்க நிவாரண நிதி வச்சிக்க. செக் நீட்டப்பட்டது. பிளாஷ் ஒளியில் சின்னானு, மந்திரியும் சிரித்தார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மந்திரி நிதிஉதவி... 8 காலம் தலைப்பில் செய்தி வெளியானது.....
சார்! ஷாட் ஓ.கே...
அரசோட சாதனைப் பட்டியல் விளம்பரப் படத்துல இந்தக்காட்சியை சேர்த்துருங்க.....
கட்டளை போட்டபடி மந்திரி காரில் ஏறிப் போனார்.
கண்டிப்பா உனக்கு பியூன் போஸ்டிங் தந்துருவாங்க... விவசாயி சின்னாண்டியாக நடித்தவருடன் பேசியபடி செட்டைவிட்டு சென்றார் பொன்னையனாக வந்த டைரக்டர்.
.... வானம் தன் நீலக் கூந்தலுக்கு வெண்மேக ஷேம்பு போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தது.
வியாழன், மார்ச் 27, 2008
என் ஆசான்கள்
நான் படித்த தூய இருதய தொடக்கப்பள்ளியின் முதல் வகுப்பு ஏ பிரிவு ஆசிரியை மரியாதைக்குரிய கண்ணாடி டீச்சர். அவரது பெயர் இன்று வரை சரியாக எனக்குத் தெரியாது. எனது சாத்தான்குளம் வீட்டின் பின் பகுதியில் உள்ள வீட்டில் தற்போது குடியிருந்து வருகிறார்கள். ஊருக்கு செல்லும்போதெல்லாம் அவர்களுக்குத் தான் என் முதல் வணக்கம் கிடைக்கிறது.
கண்ணாடி டீச்சர் என் பள்ளிக்கல்வியில் சரியான அஸ்திவாரத்தை அமைத்தவர்.
இரண்டாம் வகுப்பில் சி பிரிவுக்கு சென்ற எனக்கு வகுப்பாசிரியர் ஆக்னஸ் டீச்சர். இவர்களது கண்டிப்பும், கண்ணையும், நாக்கையும் காட்டி மிரட்டும் பாங்கும் இவர்கள் மேல் பயத்தை வரவழைத்தாலும் பாசமானவர்.
3ம் வகுப்பு அ பிரிவில் எனது வகுப்பாசிரியர் திரு பத்மநாபன் சார். முந்திரி பருப்புகளை சாப்பிடுவதில் மிகுந்த விருப்பமுடையவர். சரியாக படிக்காத மாணவர்களின் விரலில் இவர் காட்டு வித்தை அவர்களையும் படிக்க வைத்து விடும்.
4ம் வகுப்பில் பி பிரிவில் சென்ற எனக்கு வகுப்பாசிரியராக இந்தவர் பங்கரா சார். இன்னும் மார்க்கண்டேயன் போல் காட்சிதரும் இவர் எளிய நடையில் பாடம் நடத்துபவர்.
5-ம்வகுப்பு அ பிரிவில் தலைமையாசிரியர் திரு ஜோசப் சார் தான் வகுப்பாசிரியர். கண்டிப்பான நல்லவர்.
உயர்நிலைப்பள்ளிக்கான படிப்பும் அதே தூய இருதய உயர்நிலைப்பள்ளியில் தொடங்கியது. 6ம் வகுப்பு முதல் அ பிரிவிலேயே எனது படிப்பு தொடங்கியது.
அருகே உள்ள தைலாபுரத்தைச் சேர்ந்த ஜெய்ரூஸ் டீச்சர் தான் எனது வகுப்பாசிரியை. சில ஆண்டுகள் கழித்து இவர் மாற்றல் வாங்கி அவர் பகுதி அருகே சென்று விட்டார்.
7ம் வகுப்பில் தான் என் ஆசானாக இருந்தவர் மரியாதைக்குரிய மகா.பால்துரை ஆசிரியர் அவர்கள். இன்றளவும் அவர்மீதான் மரியாதை தொடர்புகள் நீண்டு கொண்டே இருக்கின்றன. எனது தந்தையாரை அண்ணன் என்று உரிமையோடு அழைக்கும் பாசக்காரரான இவரை எனது குருநாதர் அந்தஸ்தில் வைத்திருக்கிறேன்.
8ம் வகுப்பில் திரு ஐசக் ஆசிரியர் தான் வகுப்பாசிரியர். இவரது கைவண்ணத்தால்தான் எனக்குள் ஒளிந்திருந்த நடிப்புத் திறமை வெளிப்பட்டது.
9ம் வகுப்பில் வகுப்பாசிரியையாக இருந்தவர் திருமதி மங்கையர்கரசி ஆசிரியை அவர்கள். எனது இல்லத்தின் வழியாக வருபவராகையால் எனது படிப்பு தொடர்பாக எனது தாயார் இவரிடம் கேட்டு தெரிந்து வீட்டில் பூஜைகள் பெற்றிருக்கிறேன்.
பத்தாம் வகுப்பில் திரு சொர்ணம் அவர்கள் தான் வகுப்பாசிரியர். கணிதத்தை இவரைப் போல் எளிமையாக யாராலும் நடத்த முடியாது. அதனால் தான் பத்தாம்வகுப்பு தேர்வில் கணிதத்தில் 97 மதிப்பெண் பெறமுடிந்தது.
இதை ஒரு பெருமையாகக் கருதித்தான் பிளஸ் 1ல் கணிதப் பிரிவை எடுத்தேன். அங்கும் திரு சொர்ணம் அவர்கள் தான் கணித ஆசிரியர். ஆனாலும் என் மண்டையில்தான் கணக்கு ஏறவில்லை. விளைபு பொதுப் பரீட்சையில் மட்டும் தக்கிமுக்கி 200க்கு 95 மதிப்பெண் எடுத்து பாஸாகி விட்டேன். வகுப்பாசிரியர் யார் என்பது சரியாக நினைவில் இல்லை.
பிளஸ் 2 வில் வகுப்பாசிரியர் திரு ரெஜிஸ்மேரி. ஆங்கில ஆசிரியையான இவர் பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் நடனத்துக்கு மாணவர்களை தயார் செய்வார். இவரது நடனக்குழுவில் கண்டிப்பான நானும் இடம்பெறுவேன்.
இவர்கள் தவிர ராஜம் ஆசிரியை, சின்ன ஜேம்ஸ் சார், வேப்பங்காடு சார். (பெயர் மறந்துவிட்டது), பாப்பு டீச்சர், சிலுவை ஆசிரியர், பிரேமா டீச்சர், ஞானபுஷ்பம் ஆசிரியை, இயற்பியல் சீலி டீச்சர், வேதியியல் மகேஷ்வரி டீச்சர், வரலாறு சந்திரா டீச்சர், மற்றுமொறு சந்திரா டீச்சர், தமிழ் ஆசான் திரு ஆறுமுகம் ஆசிரியர், விலங்கியல் தேவராஜ் ஆசிரியர், தாவரவியல் ஹென்றி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் தேவகரம், ஆகியோர்களும் மனக்கண்முன் வந்து போனவர்கள்.
இவர்களைத் தவிர திரு பள்ளி ஊழியர் விஸ்வநாதன் அவர்களோடு இன்னும் சந்திப்பில் இருந்து கொண்டிருக்கிறேன்.
95ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சாத்தான்குளத்தத விட்டும் வெளியேறினேன். இன்று சென்னையில் வேலை செய்தபடி வாழ்க்கை ஓடுகிறது. வளத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.
நினைவுகளுடன்
மு.செய்யது முகம்மது ஆஸாத்.
வெள்ளி, ஜனவரி 25, 2008
பதில் சொல்லட்டும் புலிகள்!
துன்பியல் சம்பவத்தை மறக்க முயல்கிறேன் - மீடியா உலகம்
எதிர்பார்த்த பேட்டியில் புலித்தலைவர் பிரபாகரன், இந்தியப்
பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றது குறித்து கூறிய கூற்று மேற்கண்டது.இன்று மீண்டும் ஒரு துன்பியல் நிகழ்வை தமிழகத்தில் ஏற்படுத்தும்
நோக்குடனோ அல்லது தங்கள் பழிதீர்க்கும் படலத்தின் களமாய் தமிழகத்தை பயன்படுத்தும் நோக்குடனோ புலிகளின் செயல்பாடு அமைந்து வருவது உற்றுநோக்கத்தக்கது.சென்னையில் கைதான புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் நாதன் என்கிற சுருளி என்கிற தம்பித்துரை பரமேஸ்வரன் போலீஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில், இலங்கை தமிழ் தலைவர் வரதராஜ பெருமாள், டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது உதவியாளர் யோகராஜ் ஆகியோரை கொல்வதற்காக ததன அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் தங்கியிருக்கும் வரதராஜப் பெருமாளை அவரது மகள் திருமணத்தின்
போதும், டக்ளஸ் தேவானந்தா, யோகராஜ் ஆகியோர் தமிழகத்துக்கு வரும்போது கொலை செய்ய இருந்ததாகவும், அதற்கான கூட்டுசதிகள் நிறைவேற்றப்பட இருந்ததாகவும் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்கள் என்றாலே பாசம் காட்டி வரும் காரணத்தால் தமிழகத்தை தங்களின் கடத்தல் கேந்திரமாக புலிகள் ஆக்கிவருவதும், பண மோகம் காரணமாக சட்டமீறல்களை செய்யும் சிலரை துண்டுகோலாக்கி தமிழக இளைஞர்களை தங்களின் அத்துமீறலுக்கு பயன்படுத்தும் நோக்கம் இவர்கள் போலீஸாரால் கைது செய்யப்படும்போது நமக்கு விளங்குகிறது.
இன்று உலகளவில் தமிழினம் பெயர் பெறக்காரணமானவர்களில் புலிகள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழகத்தில் இவர்கள் மேற்கொள்ளும் ஒரு சில நடவடிக்கைகள் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி விடக்கூடுமோ என்ற அச்சம்தான் மேலோங்கி நிற்கிறது.
நிலம் நீச்சை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு உயிருக்காக தமிழகத்தில் அடைக்கலமாகும் நாடு புகுந்தோர்களுக்கும் புலித் தரப்பினரின் நடவடிக்கைகள் இன்னலை விளைவிப்பதாகத்தான் உள்ளது.
ஆனால் இதுவரை புலிகளின் தரப்பிலிருந்து தமிழக போலீஸாரால் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கோ, பரமேஸ்வரன் கைது தொடர்பாகவோ எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. அங்கு நிகழும் போர் காரணமாகவோ அல்லது உள்ளடி வேலைகளின் வினனயின் காரணமாகவோ விளக்கம் தெரிவிக்காமை இருக்கலாம் என்பது நம் எண்ணம்.
புலிகளின் மேல் தமிழர்கள் கொண்டுள்ள அன்பு நீடிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற சட்ட மீறல், அத்துமீறல் நிகழ்வுகளை நிச்சயமாக அவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்பது என்போன்ற பலரின் எண்ணம்.
சனி, ஜனவரி 19, 2008
ராம கிருஷ்ணா 'மட" மருத்துவமனை!
ராமகிருஷ்ணா மடம்! உலகெங்கும் பக்தர்களைக் கொண்டிருக்கும் உன்னதமான இந்த மடத்தின் சார்பில் பல்வேறு நலப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகிறார்கள் இந்த அமைப்பின் உதவியால்.
குறைந்த செலவில் தரமான சிகிச்சையை தரும் ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனையின் மூலம் சிகிச்சை பெற்றதால் நானும் பலனை அனுபவித்திருக்கிறேன்.
தினகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2004-ம் ஆண்டு என் உடல் உபாதைக்காக முதன் முறையாக மருத்துவ சிகிச்சை பெற்றேன். முதல் முறையாக மயிலாப்பூரில் ஆர்.கே. மடம் சாலையில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றேன். எப்படி மருத்துவச் சீட்டு போட வேண்டும் என்பது தொடங்கி, எந்த அறையில் மருத்துவரை பார்க்க வேண்டும், வரிசையில் மருந்துகள் பெற வேண்டும் என்று அங்கிருந்த மடத்தின் களப்பணியாளர்கள் கூறிய கூற்றுகள் நான் உடல் உபாதையிலிருந்து பாதி அளவு மீண்டதைப் போல் உணர்ந்தேன்.
அதே போன்று மருத்துவர்களைச் சந்தித்தேன். அவர்களும் இன்முகமாகப் பேசிய, நோயின் தன்மை அறிந்து மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டேன். முற்றிலுமாக குணமடைந்தேன்.
எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் ராமகிருஷ்ணா மடம் மருத்துவமனைக்கு செல்லுங்கள், அங்கு நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். குறைந்த கட்டணம்தான் என்று பாராட்டினேன்.
......
மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்றில் ஏற்பட்ட உபாதைக்காக பழைய நம்பிக்கையுடன் ராமகிருஷ்ணா மடம் மருத்துவமனையை அணுகினேன்.
நம்பிக்கை பழைமையாகி, நடைமுறைகள் புதுமையாகி விட்டது. களப்பணியாளர்கள் 'கடமை'க்காகப் பணியாற்றினார்கள்.
சந்தேகங்கள் கேட்டாலும் பதிலில் அலட்சியம் தென்பட்டது. புதிய மருத்துவர்கள் இருந்தனர். ஆனால் பழைய மருத்துவர்களைப் போல பரிவு காணப்படாவிட்டாலும் 'கடமை +' ஆகப் பணி செய்தார்கள். எனக்கு வயிற்று உபாதைக்காக ஸ்கேன் செய்யச் சொல்லியிருந்தார்கள்.
கட்டணம் கட்டினேன்.
'' மறுநாள் ஸ்கேன் செய்ய வேண்டும். காலை 10 மணிக்கு இரண்டு இட்லி சாப்பிடவேண்டும். 12 மணி வரை தண்ணீர் குடித்துக் சிறுநீர் கழித்துக் கொள்ளலாம். 12 மணி தொடங்கி 2 மணி வரை 15 டம்ளர் தண்ணீரைக்குடித்து கொண்டு மருத்துவமனைக்கு வரவேண்டும்.''
கட்டணம் கட்டிய இடத்தில் கூறப்பட்ட அறிவுரை.
சரியாக 2 மணிக்கு வந்தேன். தகவல் என்ற பலகை வைக்கப்பட்டிருந்த மேஜை காலியாக இருந்தது. வெளி வராண்டாவில் என்னைப் போல் இருந்தார்கள். ஸ்கேன் என்பது எனக்கு புதிதான நடைமுறை. கட்டணம் கட்டிய இடத்தில் இருந்த் ஒரு பெண்ணிடம் தகவல் கேட்டேன்.
''மேடம் ஸ்கேன் செய்ய வரச்சொல்லியிருந்தார்கள்...
எத்தனை மணிக்கு?
2 மணிக்கு மேடம்...
மணி எத்தனையாவுது....
2 மேடம்.
வெளியே நில்லு...
எதுக்காக மேடம்...
கேள்வி கேட்கக்கூடாது... சொன்னதைச் செய்...''- அவர்கள் இருக்கும் பணிநிலைக்கும், பேச்சுக்கும் சம்பந்தமேயில்லை.
(டாக்டர் வந்தபின் உள்ளே அழைப்பார்கள். வெளியே இருங்கள் என்றால் இருக்கப்போகிறோம். மனதுக்குள் முணுமுணுத்தபடி வெளியே வந்தேன்)
தண்ணீர் குடித்ததால் சிறுநீர் கழிக்க வேண்டிய அவஸ்தையில் இருந்தேன். என்னைப் போல் ஸ்கேன் செய்யவந்தவர்களும் இருந்தார்கள்.
(கண் பரிசோதனைக்கும் நிறைய பேர் வந்திருந்தார். அங்கிருந்த ஒரு நடுத்தர வயது களப்பணியாளர் அனைவரையும் போ, வா என்று ஒருமையில் கூறிக்கொண்டிருந்ததைப் பார்க்கையில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்வுகள் மனதுக்குள் வந்து சிரிப்பை மூட்டியது.)
சில நிமிடங்கள் கழிந்தன. உள்ளே அழைத்து பெஞ்சில் அமர வைத்தார்கள். வயது முதிர்ந்த பெண் களப்பணியாளர் வந்தார். ஸ்கேன் செய்வதற்கு முந்தைய நிகழ்வுகள் குறித்து சில தகவல்களைச் அமைதியாக எடுத்துக் கூறினார்.
மூன்று மணி நெருங்கிய பின்னர் பெண் மருத்துவர் வந்தார். அவரது 'கடமையை' செய்தார். மாலையிலேயே ஸ்கேன் முடிவுகளைக் கொடுத்தனர். அந்த முடிவுகள் குறித்து சொல்வதற்கு ஆள் இல்லை. மறுநாள் வந்து மருத்துவரை பார்க்க வேண்டும்.
மறு நாள் வந்தேன். மருத்துவரை சந்தித்தேன். ஸ்கேன் ரிசல்ட்டை கொடுத்தேன். படித்தார், வயிற்று வலிக்காக சென்றேன். ஸ்கேன் ரிசல்ட்டில் ஈரல்(லிவர்) பிரச்னை என்று காட்டியது. இதை உறுதி செய்வதற்காக மேலும் சில டெஸ்ட்டுகளை எடுக்கக் சொன்னார்கள் மருத்துவர்.
சரி அதையும் எடுத்துவிடுவோம் என்று மீண்டும் கட்டணம் கட்டும் இடத்தில் வரிசையில் நின்றேன்.
எனக்கு முன் ஒரு பெண். அவருக்கு முன் ஒரு ஆண், வயதான ஒரு பெண். வயதான பெண்ணிடம்
கட்டணம் கட்டும் இடத்தில் அவரிடம் விலாசம் கேட்டனர். சரிவர சொல்லத்தெரியாத அந்தப் பெண் வெளியில் நின்றிருந்த ஒரு பெண்ணை அழைத்தார். அவர் வந்து விலாசம் எழுதி வைத்திருந்த காகிதத்தை அந்த வயதான பெண்ணிடம் கொடுத்து விட்டு மீண்டும் வெளியில் சென்று விட்டார். இந்த இடைவெளியில் அந்த வயதா பெண்ணுக்கு அடுத்து நின்ற ஆண் சீட்டைக் கொடுத்துவிட்டார்.
அந்த வயதான பெண்ணை மீண்டும் வரிசையில் வரும்படி சொல்லி அனுப்பி விட்டனர். அவர் கூறியும் ஏற்கவில்லை. கேட்டால் பப்ளிக் பிகேவியர் என்று பதிலடி. விடாத அந்தப் பெண் அங்கிருந்த காவி சட்டையும், வேட்டியும் அணிந்திருந்த மடப் பணியாளரிடம் கேட்டும் அவரும் மீண்டும் வரிசையிலேயே வரச் சொல்ல அந்தப் பெண் செய்வதறியாது மீண்டும் வரிசையிலேயே சென்றுவிட்டார்.
இப்போது அந்த ஆண் கட்டணம் கட்டுகிறார். அடுத்தது என் முன் நின்ற பெண். அடுத்து நான். இதனிடையே கட்டணம் கட்டும் இடத்திலிருந்த மற்றொரு கவுண்டரில் கட்டணம் கட்ட வருமாறு அங்கிருந்த பெண் அழைத்தார்.
எனக்கு முன்னிருந்த பெண் செல்லவில்லை. நான் சென்று விட்டேன். ஆனால் என்னிடம் , அந்த எனக்கு முன்னிருந்த பெண்தான் வரவேண்டும் நீ ஏன் வந்தாய் என்று பணியிலிருந்த பெண் சொல்லியதோடு மீண்டும் வரிசையில் வா என்று அனுப்பி விட்டார்.
நான் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.
நான் மீண்டும் அந்தக் காவி உடை அணிந்திருந்தவரிடம் (அவரை சாது என்று அழைக்க எனக்கு மனம் வரவில்லை) சென்று நியாயம் கேட்டேன். பப்ளிக்கில் ஒழுங்காக பிகேவ் பண்ணு. வரிசையில் வா என்று கூறிவிட்டார்.
நான் நன்றி சொல்லிவிட்டு வெளியேறி விட்டேன். நியாயங்கள் எடுபடாத ராமகிருஷ்ணா மட மருத்துவம்னையிலா, மடத்திலா?
விடை தெரிந்தவர்கள் கூறுங்கள்.
புதன், ஜனவரி 16, 2008
வசிப்பிடம்!
நான்
சுவாசிக்கையில்
எனக்குள்
வசித்தவள்,
பெயர்ந்ததேன்
உன்னை
யாசிக்கையில்!
வசிப்பிடம்
மட்டுமே
நான்!
வாழ்விடம்
அவன்!
புரிந்தது உன்
புதுத்துவம்!
ஏமாளி நான்
என் எண்ணம்!
இல்லை...
காலத்தின்
பதில்!
அவன்
ஏமாற்றியதில்
பரத்தையாய் நீ!
கேள்விப்பட்டேன்...
தேடமுயலவில்லை!
உன் வசிப்பிடம்
காலியாய்
என்னுள்!
புதன், ஜனவரி 09, 2008
எத்தனை எத்தனை சாமிகள்?
--------------
அம்மா நான் கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்.
எந்த கோயிலுக்கடி?
நம்ம மேடவாக்கம் மதுரை வீரன் சாமி கோயிலுக்குத்தான்!
அய்யோ வேனாண்டி! இப்பத்தான் அந்த சாமியாரு மூணாவதா ஒரு டாக்டரை கட்டிக்கிட்டு அங்க இங்கன்னு ஒரே பிரச்சினையாச்சு. இப்போது ஒரு வழியா அந்த டாக்டரு பொம்பள அவரை விட்டுட்டு போயிடுச்சு. அந்த ஆளையும் போலீஸ்ல புடிச்சுட்டு போயிட்டாங்க!
அம்மா நல்ல வேளை நீ சொன்ன. இல்லாட்டி நானும் போயி நாலாவதா போயிருக்க வேண்டியிருக்கும்.
(அட லூசு மகளே, ஏற்கனவே நான் ஏமாந்ததை எப்படிடி சொல்றது உங்கிட்ட.)
___________
யக்கா, இன்னனக்கு எங்கூட்டுக்கு அந்த சடாமுடி சாமியாரினி வர்றாங்கக்கா. வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போங்க.
எந்த சாமியாரினிடி!
அதாங்க அந்த மல்லிகா சாமியாரினி.
அட இவளே! சும்மா மல்லிகான்னு சொல்லாதடி, சயனைடு மல்லிகான்னு சொல்லு. இனத்துக்காகப் போராடி சாவுற புலிகளுக்கு அப்புறமா, பெண் இனத்தை சாகடிக்கிறதுக்காக அதிகமா சயனைடு யூஸ் பண்ணுனது இந்த மல்லிகா தாண்டி!
யக்கா என்னமோ சொல்லி பயங்காட்டுறீயேக்கா!
அட இவளே, அந்த பொம்பளையை பார்க்க கோயிலுக்கு போனவங்களுக்கு பிரசாதம் தர்றேன்னு சொல்லி சயனைடு கொடுத்து கொன்னுருக்காடீ. ஆறு, ஏழு பேரை சயனைடு கொடுத்தே காலி பண்ணிட்டு கம்பி நீட்டியிருக்கா. இப்ப கம்பி எண்ணிக்கிட்டிருக்கா. தெரியும்லா?
அப்படியாக்கா. நல்ல வேளை என்னைய காப்பாத்திப்புட்டீங்க.( அட இவளே சயனைடு மேட்டரை முன்னாடியே சொன்னாக்க எங்க மாமியாருக்கு எப்பவோ பிரசாதம் ரெடி பண்ணியிருப்பேனே!)
_____________
போலி சாமியார்களையும், சாமியாரிணிகளையும் நம்பி மோசம் போகும் நம்மவர்கள் இருக்கும் போது.... என்னத்த சொல்ல, இப்படி உண்மையக் கூட ஜோக்காக போடுறதுக்கு என்னமாதிரி ஆசாமி வந்துருவான்.!