ஸ்பெக்ட்ரம்... இந்திய ஆட்சியாளர்களின் ஊழலை உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறது இந்தச் சொல்லாடல். அதுவும் தமிழக ஆட்சியாளர்களின் அண்டர் கிரவுண்ட் வேலைகள் எந்த அளவில் எல்லாம் நடந்திருக்கிறது என்று திக்பிரமை பிடித்தவர்களாகி நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள். (பார்ப்பதோடு விட்டுவிடுவதுதான் 'மற'த்தமிழரின் குணம்)
எங்கப்பா கொண்டு போய் வச்சிருப்பாங்க... எத்தனை பேரு பங்கு போட்டுருப்பாங்க... இவர் ஒருத்தர் மட்டுமா செஞ்சிருப்பாரு... மேல இருக்கிறவங்க ஆசி இல்லாம இதெல்லாம் முடியாதே... ஆளுக்கொரு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த 1.76லட்சம் கோடி இருந்தால் 13 வருஷத்துக்கு தமிழக மக்களுக்கு இலவச ரேசன் பொருள் தரலாம்... இந்திய ரயில்வே பட்ஜெட்டுக்காக 5 முறை ஒதுக்கலாம்... உலக வங்கியில் இருக்கும் கடன் தொகையை கழித்து விடலாம்..... இப்படியெல்லாம் ஆலோசனை எல்லாம் சொல்லியும் கொண்டிருக்கிறோம்.
''ஏற்கனவே செய்த வழிமுறைப்படிதான் நாங்களும் செய்தோம்'' என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும் சால்ஜாப்புகளை ஒரு கணக்குக்காக எடுத்துக் கொண்டால் இந்தியா 20 ஆண்டுகளுக்கு முன்பே வல்லரசாகி இருக்குமோ என்று என்னைப் போல ஏமாளிகளும் யோசித்துக் கொண்டிருக்கிறான்.
எத்தனையோ இத்யாதிகளை நாம் பேசிக் கொண்டிருந்தாலும், தமிழக ஆட்சியாளர்களின் தற்போதைய கவலை எல்லாம் அடுத்த தேர்தலைப் பற்றியதாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது... எப்படி மீண்டும் தன் குடும்ப ஆட்சியைக் கொண்டு வருவது என்று தி.மு.க. தலைவரும், எப்படியாவது தனது ஆட்சியைக் கொண்டு வந்து விடவேண்டும் என்று அ.தி.மு.க. தலைமையும் போராடி வருகிறது. இந்தியாவுக்கு ராஜாவானாலும், தமிழகக் கூஜா காங்கிரஸும் யாருடன் கூட்டணி வைப்பது என்று யோசித்துத்தான் தனது அஸ்திரத்தை ஸ்பெக்ட்ரம் வழியாக தற்போதைய தமிழக ஆட்சியாளரை அலைக்கழித்து வருகிறது.
இலங்கைத் தமிழனத்தை காவு கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கிய தி.மு.க. ஆட்சியாளர்களே, இன்று அதே காங்கிரஸ் உங்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...
ஞாயிறு, டிசம்பர் 19, 2010
வெள்ளி, நவம்பர் 26, 2010
பாருங்க பஸ்ஸுக்காரங்களே!
எல்லோருக்கும் வணக்கமுங்க! ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரமுடியலிங்க... இப்ப ஒரு கருத்து சொல்லலாமுன்னு (ஏலேய் மொக்க முனுசாமிமிமிமிமிமின்னு நீங்க முறைக்கிறது கேக்குது) வந்தேனுங்க!
25ந்தேதி பஸ்ஸுக்காரங்களுக்கு( போக்குவரத்து ஊழியர்கள்) தேர்தலாம். சங்கம் வச்சி தங்களை காப்பாத்துறதுக்காக அவங்க வச்ச தேர்தல்லாம் ரொம்ப சந்தோஷம்தான். ஆனால் ஓட்டு போட்டதுமே வண்டியை எடுத்துருந்தாங்கன்னா பஸ்ஸுகாரக மாதிரியே வயித்துப்பாட்டுக்காக மெட்ராஸுல தஞ்சமடைஞ்சு வாழ்ந்துட்டிருக்க நம்ம மாதிரிக ஆளுகளுக்கு சந்தோஷமா இருந்துருக்கும். அவுக ஓட்டுப் போட்ட களைப்புல பஸ்சை எடுக்காததால வேலையை முடிச்சி வீட்டுக்கு போக பஸ்ஸ்டாண்டில காத்துக்கிடந்த என்னைய மாதிரி எத்தனை ஜீவன்கள் அல்லாடுனாங்களோ தெரியலை!
பஸ்காரவுகளே... உங்க வேலையை சரியாச் செஞ்சும் பிரச்னை வந்தா உங்களை காப்பாத்துறதுக்காகத்தானே சங்கம் எல்லாம் வச்சிருக்கீங்க. அந்த சங்க தேர்தலுக்காக பயணிகளை டீலுல விட்டா எப்படி...
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கவுன்சிலர் ஒருத்தரோட மகன் ஒரு ஊழியரை அடிச்சுட்டான்னு, எல்லாரும் பஸ்ஸை எடுக்காம மெட்ராஸையே ஸ்தம்பிக்க வச்சீங்க. அப்பவும் எங்களை மாதிரி பயணிங்க ரொம்பவும் கஷ்டப்பட்டோம். அப்புறம் மேலே இருக்குறவுக, கீழே இருக்கிறவுகன்னு எல்லாரும் பேசி பஸ்ஸை எடுக்க வச்சாங்க.
உங்களை அடிச்சவங்க மேல நடவடிக்கை எடுக்கிறதுக்காக நீங்க நடத்துன போராட்டம் ஒரு பக்கம் நியாயம்தான்.
ஆனால், 25-ந்தேதி நடந்துக்கிட்டதுல என்ன நியாயம் இருக்குன்னு நீங்களே நினைச்சுப் பாருங்க. உங்களை எல்லாம் வழிநடத்துற உயர் அதிகாரிகள் என்ன பண்ணிக்கிட்டிருந்தாங்க. உங்களை அடிச்சிட்டாங்கன்னு பஸ்சை எடுக்காம இருந்த உங்களை, 25ந்தேதி பஸ்சை ஏன் எடுக்கலைன்னு எந்த அதிகாரியாவது ஒரு வார்த்தை கேட்டிருப்பாங்களா/ அரசாங்கம் எதுக்கு இருக்குன்னு தெரியலை. உங்களுக்குன்னு ஒரு சங்கம் வச்சிருக்கீங்க. பஸ்சுல போற எங்களுக்கு ஏதாவது சங்கம் இருக்கா... கொஞ்சமாவது மனசாட்சியோட வேலை பாருங்க பஸ்ஸுகாரங்களே...
என்னடா கருத்து கந்தசாமின்னு சொல்லிக்கிட்டு கன்னாபின்னான்னு எழுதிட்டான்னு நெனைக்கலாம். கருத்து சொல்ற அளவுக்கு எல்லாம் நான் இன்னும் பக்குவப்படல. பாதிக்கப்பட்டுக்கிட்டுதானே இருக்கேன். அதான்!

செவ்வாய், ஜூன் 01, 2010
எதிரும் புதிரும்!
உரிமையாச் சொல்லிக் கூப்பிட
ஊறவுன்னு யாருமில்லை
அம்மா, அப்பான்னு
உதடை நனைக்கும்
வார்த்தைக்கும் வழியில்லை
ஆனாலும் என்னைக்
கூப்பிடுறாக எல்லோரும்
அனாதையின்னு!
அனாதைன்னா
கடவுளோட
பிள்ளையாமே...
அப்படியா!
அம்மா அப்பா
அங்கிருக்கு
அக்கா தங்கச்சி
இங்கிருக்கு
அண்ணன் தம்பி
எங்கும் இருக்கு
உறவுக எல்லாம்
உயிரோடவே இருக்கு
ஆனாலும்
நானும் அனாதையாம்...
ஏன்னா நான்
அரவாணியாம்!
ஊறவுன்னு யாருமில்லை
அம்மா, அப்பான்னு
உதடை நனைக்கும்
வார்த்தைக்கும் வழியில்லை
ஆனாலும் என்னைக்
கூப்பிடுறாக எல்லோரும்
அனாதையின்னு!
அனாதைன்னா
கடவுளோட
பிள்ளையாமே...
அப்படியா!
அம்மா அப்பா
அங்கிருக்கு
அக்கா தங்கச்சி
இங்கிருக்கு
அண்ணன் தம்பி
எங்கும் இருக்கு
உறவுக எல்லாம்
உயிரோடவே இருக்கு
ஆனாலும்
நானும் அனாதையாம்...
ஏன்னா நான்
அரவாணியாம்!
புதன், மே 26, 2010

சாத்தான்குளத்தில் உலக வெப்ப மயமாதல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணத்தை அணிதா ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம் வட்டார மனித நேய பெருமன்றம் மற்றும் மக்கள் நல அமைப்பு சார்பில் உலக வெப்ப மயமாதல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணம் சாத்தான்குளத்தில் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு மனித நேய பெரு மன்ற தலைவர் பங்குதந்தை பர்ணபாஸ் தலைமை வகித்தார். செட்கோ இயக்குனர் ஜார்ஜ், வீட்ஸ் இயக்குநர் சார்லஸ், குளோப் இந்தியா இயக்குநர் ரெக்ஸ் சந்தனரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் கணபதி வரவேற்றார்.
டாடா ஸ்டீல் மேலாளர் ராஜாமணி, இந்தியன் காஸ் நிறுவன மேலாளர் மோகன், தொழிலதிபர் ஜெயக்குமார், யூனியன் கவுன்சிலர் மீனா, இந்திய புவிக்காந்த வட்டார மைய இயக்குநர் குருபரன், பங்குதந்தை எட்வர்ட உள்ளிட்ட பலர் பேசினர்.
அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணத்தை தொடங்கி வைத்தார். சைக்கிள் பிரசாரம் சாத்தான்குளத்திலிருந்து இட்டமொழி, கோட்டை கருங்குளம் வழியாக வள்ளியூர் சென்றது. புதுக்குளம் கல்லூரி முதல்வர் வேணுகோபால், வக்கீல் இளங்கோ, காசியானந்தன், யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய திமுக அவைத்தலைவர் சத்தியராஜன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செல்லச்சாமி, நகர அபிவிருத்தி சங்கத்தலைவர் செந்தில்ஆறுமுகம், பாவேந்தர் கலை இலக்கிய பேரவை செயலாளர் ஜோசப் மெஸ்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மன்ற செயலாளர் மகாபால்துரை நன்றி கூறினார்.
சைக்கிள் விழிப்புணர்வு பேரணிக்கு உதவிய நல் நெஞ்சங்களுக்கு எனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
செவ்வாய், ஏப்ரல் 27, 2010
விழிப்புணர்வுக்கு உதவுங்கள்!

நண்பர்களுக்கு வணக்கம்... எனது ஊரில் என்னுடைய ஆசிரியரின் பங்களிப்புடன் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தங்களால் இயன்ற வகையில் உதவ வலை அன்பர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
லேபிள்கள்:
சமூகம்
திங்கள், ஏப்ரல் 26, 2010
வெளிச்சம்!
ஏல... அந்த எதிர்வீட்டுப் பபயலும் உன்னமாதிரிதானல்ல... ஊங்கூட ஒண்ணாத்தானே படிக்கிறான். ஒங்க ரெண்டுபேருக்கும் வாத்தியாரு ஒண்ணுபோலத்தான சொல்லிக் கொடுக்காரு! அப்புறம் ஏண்டா மார்க் உனக்கு குறைஞ்சிருக்கு. அந்தப் பயலப் பாருல... நல்ல மார்க் எடுத்திருக்கான். பரிசெல்லாம் கொடுக்கிறாங்க. எனக்கு அதைப் பார்க்கும்போது உன்னை நெனைச்சி வயிறெரியுது. அவன் மாதிரி நீயும் மார்க் வாங்குனா உனக்கும் பரிசு தருவாங்கல்லா... நானும் பெருமையா எம்புள்ளை பரிசு வாங்கியிருக்கான்னு சந்தோஷப் படுவம்ல... அவன் மூத்திரத்தைக் குடிச்சாக்கூட உனக்கு எல்லாம் புத்தி வராதுல... எப்படியும் உருப்படாமப் போ...
அப்பா வழக்கம்போல் சூடான அர்ச்சனைகளை வழங்கிவிட்டு விசுக்குன்னு வீட்டிலிருந்து வெளியேறி ரோட்டுக்குப் போனார்.
ஆமா இது எப்பவும் நடக்குறதுதான... என்னமோ இவுக மட்டும் பெரிய ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டரு வேலை பார்க்குறாங்க, படிக்கிற காலத்துல என்னமோ ஸ்கூல் பர்ஸ்ட் மாதிரி பேசுறாங்க... உங்கப் புள்ளைத்தான உங்கள மாதிரி தானே நான் வருவேன். உங்க அளவுக்கு பெயிலாகி பள்ளிக்கூடத்துக்கு மூட்டை கட்டாம எண்பது சதவீத மார்க் வாங்கிட்டுத்தானே வர்றேன். அடுத்த பயக்கூட கம்பேர் பண்ணி என்னத் திட்டாட்டா உங்களுக்கு தூக்கமே வராது... மனசுக்குள்ளே அப்பாவோடு சண்டையிட்டபடியே வெளித்திண்னணக்குப் படிக்கப் போனேன் எதிர்வீட்டிலிருந்து வரும் லைட் வெளிச்சத்தில்!

வெள்ளி, ஏப்ரல் 23, 2010
இறைவனின் முத்திரை (விரல் ரேகை)

சென்னையின் பிரபலமான சன் டிடெக்டிவ் நிறுவனத்தின் உரிமையாளரும், தமிழக காவல்துறையின் விரல்ரேகை பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவருமான திரு.வரதராஜன் அவர்களை விகடன் மேடை நிகழ்ச்சியில் சந்திக்க முடிந்தது. அவரது பேச்சிலிருந்து...
உடலை அங்ககீனப் படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காணும் நிலையை உருவாக்கி வைத்திருந்தனர் தொடக்க காலத்தில்.
இது சரியாக இல்லாததை தொடர்ந்து குற்றவாளிகளின் உயரம், உடல் பருமன், விரல் நீளம், கைகளின் நீளம் என்னும் அளவீட்டு முறையில் குற்றப்பட்டியல் தயாரித்து வைத்திருந்தனர். ஆனாலும் ஒரே முக ஒற்றுமையைத் தவிர அனைத்து ஒற்றுமையுடன் குற்றவாளிகள் இருந்த போது இந்த முறையும் சரியில்லை என்று ஒதுக்கினர்.
அப்போது வெளிநாட்டறிஞர் ஒருவர் கண்டு பிடித்ததுதான் விரல்ரேகை பதிவு முறை. நமது விரல்களின் மேல்புறத்தை பதித்தல் விரல்ரேகை பதிவு எனப்படுகிறது. ஒரே கையில் உள்ள ஐந்து விரல்களின் பதிவும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை. இரட்டையர்களாக இருந்தாலும் அவர்களின் விரல் ரேகையும் ஒன்றாக இருப்பதில்லை.
தீயில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும் புதிதாக மேல்தோல் வளரும்போது ஏற்கனவே இருந்த ரேகையே மீண்டும் உருவாகிறது.
இடது கை பெருவிரலை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.அதனால் அதன் ரேகைப் படலம் தெளிவாக இருப்பதால்தான் நாம் இடது கை பெருவிரல் ரேகையை பதியச் சொல்கிறார்கள். தற்போது பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு அலுவலக விஷயங்களுக்காக பத்து விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்படுகிறது.
திரைப்படங்களில் காட்டப்படுவது போல் போலியான விரல்ரேகைகளை தயாரிப்பது எளிதல்ல. அவ்வாறு தயாரிக்கப்பட்டாலும் நிபுணர்கள் அதைக் கண்டறிந்து விடுவார்கள்.
குற்றவாளிகளுக்கான அடையாளமாக மட்டும் பயன்படுத்தாமல் அரசு குடிமக்களுக்கான அட்டைகள் தயாரிக்கும் போது விரல் ரேகையைப் பயன்படுத்தத் தொடங்கினால் போலி ரேஷன் கார்டு தொடங்கி, இறந்தும் வாழும் வாக்காளர்கள் அடையாள அட்டை வரை மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம். (என்ன ஆட்சியாளர்களுக்குத்தான் சிக்கலாகி விடும்!)
உலக அளவில் தமிழக காவல்துறையில் தான் முதன் முதலில் 1895ம் ஆண்டு விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இது பெருமையான விஷயம் ஆனாலும் உலக அளவில் விரல்ரேகைப் பிரிவில் தற்போது பயன்படுத்தப்படும் புதிய யுத்திகள் நமது காவல்துறையில் பயன்படுத்தப்படுவதில்லை. அந்த முன்னேற்றம் இருந்தால் விரல்ரேகை பிரிவில் காவல்துறையின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.
இன்று தேசிய அளவில் விரல் ரேகைப் பிரிவுகளை ஒன்றிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி செய்யப்பட்டால் குற்றவாளிகளின் கைரேகை இந்திய அளவில் அனுப்பப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீழ்வரும் தகவல் டார்லிங்... டார்லிங் என்னும் பிளாக்கில் தரப்பட்டிருந்ததை கூடுதலாகப் பார்வைக்கு தருகிறேன்.
பண்டைய பாபிலோனியர்கள் அவர்களுடைய வியாபார கொடுக்கல் வாங்கலை பதிவு செய்வதற்காக தங்கள் கைவிரல் பணிகளை களிமண்ணில் வைத்து அழித்தி பதிந்தனர். வியாபார கொடுக்கல் வாங்கலை சீனர்கள் மை தடவி தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்தனர்.மேலும் அதன் மூலம் குழந்தகளை அடையாளம் காணவும் விரல்ரேகை பதிவுகளை பயன் படுத்தினர்.
19 ஆம் நூற்றாண்டு வரை விரல் ரேகை பதிவுகள் குற்ரவாளிகளை கண்டறிய பயன்படுத்த்ப்படவில்லை.1858 ஆம் ஆண்டு இந்தியாவில் கூக்ளி மாவட்டத்தில் உள்ள ஜங்கிப்பூரில் முதன்மை நீதிபதியாக பபீயாற்றிய ஆங்கிலேயர் சர் வில்லியம் ஹர்ஷ்ல்
குற்றங்களை குறைப்பதற்காக விரல் ரேகைகளை பதிவு செய்யும் முறையை பயன்படுத்த தொடங்கினார்.
அதற்கு சில ஆண்டுகள் கழித்து ஸ்காட்லாந்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பால்ஸ் ஜப்பானில் பபீயாற்றிய பொழுது அநாட்டு கலைஞர்கள் தங்கள் பழங்கால படைப்புகளில்
அவர்களுடைய விரல் ரேகைகளை பதிவு செய்து இருப்பதை கண்டறிந்தார். இது அவருக்குள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விரல் ரேகை தொடர்பாக ஆராய தொடங்கினார்.1880 இல் பால்ஸ் தனது உறவினரான புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர்
ஜார்லஸ் டார்வினுக்கு கடிதம் எழுதி விரல் ரேகைகளை பகுத்தறிவதற்கான
ஒரு முறையை கண்டறிய உதவி கோரினார்.
ஆனால் டார்வின் மறுத்து விட்டார்.டார்வின் மற்றொரு உறவினரான சர் பிரான்சிஸ் ஹேல்டன் என்பவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்தார். ஹேல்டன் உலகின் பல பகுதிகளில் உள்ள மனிதர்களின் உயரம் எடை ஆகியவற்றை ஆய்வு செய்து அவை எப்படி பரம்பரை பரம்பரையாக தொடரந்து வருகின்றன. என கண்டரீயும்ஜ் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். அவர் இந்த கடிதத்துக்கு மதிப்பளித்து சுமார் 8 ஆயிரம் விரல் ரேகைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றி ஆய்வு செய்தார்.
1892 இல் பிங்கர் பிரிண்ட்ஸ் (FINGER PRINTS) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தான் கைவிரல் ரேகைகளை வைகைப்படுத்துவதற்கான் ஒரு முறையினை குறிப்பிட்டு இருந்தார். இது தான் முதன் முதலில் பகுத்தறியப்பட்ட ஒரு நடைமுறை.இது விரல் ரேகைகளில் உள்ள வளைவுகள்,துளைகள்,அலைகள் · (ARCHES,LOOPS,WHORLS) இவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.
லேபிள்கள்:
தகவல்
புதன், ஏப்ரல் 21, 2010
அச்சகத்தெரு
"ஏலே நம்மூரு கோயில் திருவிழாவுக்கு அய்யா வந்திருக்காங்களே... எப்படியும் வேலைக்கு ஆள் எடுப்பாவடே... நாமளும் போய்ச் சேரலாம்?''
"சரிடே... அய்யாக்கிட்ட வேலை கேக்குறதுக்கு முன்னாடி அய்யாவோட எடுப்பு ஒருத்தர் இருப்பாருடே... அந்த அண்ணாச்சியக் கவனிச்சா நமக்கு சிபாரிசு பண்ணுவாருலே''
"எடுப்புக்கு எவ்வளவுடே கொடுக்கணும்"
"ஒருமாசச் சம்பளத்தைக் கொடுக்கணும்டே. முழுச்சம்பளத்தையும் கொடுக்காட்டியும் பரவாயில்லை. இரண்டு தவணை கேட்டு அந்த அண்ணாச்சி பெரிய மனசு பண்ணி சேத்து வுட்ருவாருலே"
"டேய் மக்கா! என்னலா இம்பூட்டு கூட்டமா இருக்கு... நாமத்தான் சீக்கிரம் வர்றோம்னு நெனைச்சா அதுக்கு முன்னாடியே இவ்ளோ பேரு நிக்கிறாங்களடே?"
"எவ்ளோ பெரு நின்னாலும் நமக்கு வேலை கிடைச்சிரும்ல. எடுப்புக்கிட்ட அட்வான்ஸா பணத்தைக் கொடுத்தாச்சுல..."
"வேற எதுவும் எடுப்பு சொன்னாரேடே?"
"ஆமாம்ல... அய்யாவப் பார்த்ததும் டக்குன்னு கால்ல வுழுந்துரணுமாம். அய்யா நீங்க தான் எங்களுக்கு எல்லாம்னு டயலாக்குலாம் பேசணுமாம். அவரு எழுந்திரிப்பான்னு சொன்னாக்கூட கால விடக்கூடாதாம். அப்ப எடுப்பு பக்கத்துல இருந்துட்டு, அய்யா இது நம்ம பயலுவ தான்னு மண்டைய சொறிவாராம். அப்பத்தான் அய்யா நம்ம கையில இருக்கிற பயடோட்டாவை வாங்கிப் பார்த்துட்டு வேலையில சேர்த்துக்கலாம்னு எழுதி கையெழுத்துப் போடுவாராம். அப்ப எழுந்திருச்சு அய்யாவுக்கு நன்றி சொல்லிட்டு திரும்பவும் காலைத் தொட்டுக் கும்பிட்டுட்டு கையக் கட்டிட்டே வெளியே போயிரணுமாம்."
"அவர் காலுல விழுந்தாத்தான் வேலைக் கிடைக்கும்னு சொல்லு... அப்படி ஒரு வேலைத் தேவையாடே...?"
" 'அங்காடித் தெரு'வுல மட்டும் வேலைக்கு சேக்குறதுக்கு என்னெல்லாம் செய்றாங்க. ஒரு துணிக்கடையில வேலைக்கு சேர்றவங்களுக்கே இந்த மாதிரில்லாம்னா... நாம தமிழகத்தின் நம்பர் ஒன் நாளிதழ்ல வேலைக்கு சேரணும்னா இதையெல்லாம் செஞ்சாத்தாணே முடியும்"

சனி, ஏப்ரல் 03, 2010
எல்லாத்தையும் பாருங்க!
தமிழகத்தையே கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக உலுக்கிப் போட்டு வருகிறது போலி மருந்து விவகாரம்...
காலாவதியாகி குப்பைக்கு அனுப்பப்பட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்துவந்து புதிய உறைகள், லேபில் இட்டு மறுபடியும் விற்பனைக்கு அனுப்புவது,
விலை மலிந்த மருந்துகளை வாங்கி அதே தரத்தில் விலை கூடுதலான மருந்துகளின் லேபிள்களை ஒட்டி கூடுதல் விலைக்கு விற்பது,
ஏதோ ஒரு பொருளை மாத்திரை என்ற பெயரில் விற்பனைக்கு அனுப்பி விடுவது...
இப்படியான வழிகளில் இன்று போலியான, காலாவதியான மருந்து மாத்திரைகள் நம் பாவனைக்கு வந்து நம்மை திகில் கிளப்பி விட்டிருக்கின்றன.
கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் பாணியில்... அரசின் நடவடிக்கைகள் தற்போது தூண்டிவிடப்பட்டு மருந்து கடைகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் என ஆங்காங்கே அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காலாவதியான, போலியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன.
மீனாட்சி சுந்தரம், சஞ்சய் குமார் உள்பட சுமார் எட்டுக்கும் மேலானோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளன. தேடுதல் வேட்டை இன்னும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
நிற்க...
ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீ விபத்து, கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் பலியானது ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்தே கல்யாண மண்டபங்கள் அமைப்பதற்கு விதி வகுக்கப்பட்டது. கூரைக் கொட்டகைப் பள்ளிகளுக்கு தடை விதித்து திருத்தப்பட்டது.
எல்லாம் நடந்து உயிர்கள் பல பலியான பின்னரே அரசு சக்கரம் முடுக்கிவிடப்படுகிறது. அதற்கு முன்பாக பள்ளிக்கூடம், கல்யாண மண்டபங்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதே போல்தான் இன்று போலி மருந்து விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. யானைக் கவுனியில் சிறுமி ஒருவர் காலாவதியான மருந்து உட்கொண்டு மரணமடைந்த செய்தி பரபரப்பான போதே அரசு சக்கரம் தன் ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்தால் இதுபோல் உயிர்களோடு விளையாடும் இந்த உன்மத்தர்களை கண்டறிந்து மக்கள் அரங்கில் நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் அரசு அதிகாரிகளுக்கு போகவேண்டியது போய்க் கொண்டே இருந்தால் யார்தான் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள். ஏதாவது நிகழ்ந்து விட்டால் உடனே எங்களிடம் அலுவலர்கள் இல்லை, அது இல்லை, என்று நொட்டை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்...
சரிப்பா இப்பவாவது நடவடிக்கை எடுக்கிறீங்களே நன்றி!
இப்ப நடவடிக்கையை அப்படியே மெடிக்கல் பீல்டுல மட்டும் காட்டிட்டு இருக்காதீங்க. இதோ இன்னும் ரெண்டு மாசத்துல புதிய கல்வியாண்டு பிறக்குது. தங்கள் பிள்ளைகளை புதுசா கல்விநிலையத்துல சேர்ப்பாங்க.
நாங்கதான் தரமான கல்வி தாரோம், எங்கக்கிட்டதான் எல்லா வசதியும் இருக்கு, புது பில்டிங்கெல்லாம் கட்டிருக்கோம் அதனால டொனேஷனா ஒரு இருபத்தைந்தாயிரத்தை வெட்டுங்க என்று எல்.கே.ஜி.க்கே டிமாண்ட் வைக்கும் தனியார் பள்ளிக்கூடங்கள் பக்கமும் பார்வை வலையை விரிங்க. அரசு பள்ளிகளும் நல்லபடியா கல்வி தருவாங்கன்னு மக்கள் சொல்ற அளவுக்கு அவுகளையும் தரம் உயர்த்துங்க...
அப்புறம் இன்னொன்னு... ஏம்பா இந்த சாமியார் படுத்தார்னு செருப்பால அடிச்ச மக்கா, நம்ம உயிருக்கே கொல்லி வைக்கிற அளவுக்கு போலி மாத்திரையெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கான். அவன்கிட்டயும் கொஞ்சம் பாய்வோமா?

சனி, மார்ச் 20, 2010
உறவுகள்
அப்பா உங்கக் கூட நான் கொஞ்சம் பேசணும்...
கஷ்டப்பட்டு மகன் பேசிய வார்த்தைகள் அப்பாவின் முகத்தில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்பா.....அப்பா.... ஒரு நிமிஷம்பா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கப்பா...
திரும்பிப் பார்த்தவர் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்.
அப்பா... அப்பா... கத்தித் தீர்த்தான்...
பிரயோஜனமில்லை... அப்பாவின் பாதங்கள் படிதாண்டி பல அடிதூரத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது...
தொப்பென சாய்ந்தான் பக்கத்திலிருந்த ஷோபாவில்... கண்களில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் ... அயற்சியில் இமை மூடும்போது மெதுவாகக் கசிந்தது.
இப்ப அழு... போடா போ... நீயும் உன் கண்ணீரும்... காதுகளில் துல்லியமாகக் கேட்டது மனசாட்சியின் குரல்.
தப்பெல்லாம் உன் மேல வச்சிட்டு நீலிக் கண்ணீர் வடிக்காதடா?
கொஞ்சம் சுள்ளெனப் பட்டது...
நான் என்ன தப்பு செஞ்சேன்...
நீ என்ன தப்புதான் செய்யலை... வயசான மனுஷன்... எப்பவாவது அவரைப் பத்தி நீ நினைச்சிருக்கியா? அவர் என்ன செய்றாரு, எது பண்றாருன்னு என்னைக்காவது கேட்டிருக்கியா?
அவரைப் பத்தி நினைக்காமலா அவரு வசதிக்காக தனியா ரூம் கட்டிக் கொடுத்திருக்கேன். கட்டில், மெத்தை, டி.வி. ப்ரீட்ஜ்ன்னு எல்லா வசதியும் செஞ்சிருக்கேன். பேப்பர் கூட தினசரி அவருக்கு வந்துடுது. வாக்கிங் போறதுக்காக வீட்டைச் சுற்றியே கற்கள் பதிச்சி வெச்சிருக்கேன். வீட்டுல அவருக்கு டேஸ்ட் பத்தலைன்னதும் தினசரி பெரிய ஹோட்டல்லருந்து சாப்பாட்டை வரவச்சி குடுத்துட்டு இருக்கேன். அவருக்கு என்னென்ன வேணும்னு ஒவ்வொன்னா பார்த்து பார்த்து செஞ்சிட்டுதான வாரேன்.
போடா.... எப்பவாவது அவர் கூட உட்காந்து பேசியிருக்கிறியா? அவர் என்ன விரும்புனாருன்னு கேட்டுருக்கியா. அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டியா?
எனக்கு அதுகெல்லாம் ஏது நேரம்? நாலு கம்பெனி நடத்திக்கிட்டு வர்றேன். எப்போ பார்த்தாலும் பிசினஸ் பிசினஸ்னு பிஸியா இருக்குறேன். உண்மையா சொன்னா என் மனைவி மக்கள்ட்ட கூட எனக்குப் பேச நேரம் கிடைக்கிறதில்லை. ஆனாலும் அவங்களுக்கு தேவையானதை எல்லாம் செஞ்சுக்கிட்டிருக்கேன். இல்லேன்னா காச கொடுத்து அவங்களையே தேவையானதைச் செஞ்சுக்கச் சொல்லிடுறேனே...
வெறும் காசு மட்டும் மனித உறவுகளின் தேவைகளை தீர்மானிக்கிறதில்லை. அதையும் தாண்டி பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிறதிலயும், அடுத்தவங்களோட உணர்வுகளை புரிஞ்சிக்கிறதுலயும்தான் உண்மையான உறவுக்கான அர்த்தம் இருக்கு. இப்ப நீ கொடுக்கிற வசதிங்கிறது உன்னோட தரத்துக்காக நீ போட்டு வெச்சிருக்கிற அலங்கார மேடை. காசு கொடுத்து தங்க வைக்கும் முதியோர் இல்லத்துல இருக்கிற வசதிகளை நீயும் செஞ்சு கொடுத்திருக்க. ஆனால் முதியோர் இல்லத்துலயாவது ற மற்ற முதியோர்கிட்ட மனசு விட்டு பேச முயடியும். ஆனா இங்க அதுவும் கிடையாது. பிசினஸ்மேன் என்கிற வேஷத்தை உன்னுடைய பிசினஸ் அரங்கத்திலேயே வச்சிக்க. வீட்டுக்கு வந்தா ஒரு நல்ல மகனா, கணவனா, தந்தையா உனக்கான உறவின் அடையாளத்தை வெளிப்படுத்து.
ஆமாம், நான் என்னுடைய வேஷத்தை கண்டிப்பா கலைக்கணும். அப்பத்தான் உறவுகளின் கூடா நான் இருக்க முடியும்.
நானும் திருந்திட்டேன்.
.............அவன் வேகமாக எழவும் நாடக மேடையில் திரை விழுந்தது.
சொல்லிக் கொள்ள உறவுகள் இல்லாத அந்த நடிகனுக்கு பார்வையாளர்களின் கைத்தட்டல் ஓசை நெஞ்சை நிறைத்தது.

புதன், மார்ச் 10, 2010
அப்பாவும் நானும்...
யாரும் எழுப்பாததே என்னை ஆச்சர்யமாக எழ வைத்தது.
விழித்த கண்களில் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை தன் அசைவுகளின் வழியாக பெரிய முள்ளும், சிரிய முள்ளும் கடிகாரத்துக்குள் காட்டிக் கொண்டிருந்தது. கூடகூடவே சிவப்பு கலர் வினாடி முள்ளும் படபடத்தது.
சூரியனுக்கு எப்போதுமே என்னைவிடச் சூட்டிப்பு ஜாஸ்திதான். எப்போதுமே என்னைவிட அதுதானே முதலில் எழுந்துவிடுகிறது.
கால்களை தரையில் வைத்தபோது உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது. தரையில் ஈரம் படர்ந்திருந்தது.
வெள்ளிக்கிழமை என்றாலே தரையைக் கூட்டிப் பெருக்கி வீட்டை கழுவிவிடுவது வாடிக்கை.
அன்றைக்கும் அறையை கழுவி விட்டுச் சென்றிருக்கிறார்கள்...
மெதுவாக ஈரத்தில் கால் பதித்து அறையை விட்டு வெளியே வந்தேன்.
அப்பாவின் அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. வேலைக்குப் போய்விட்டார்...
அப்பப்பபா...
இடி அமீன், ஹிட்லர், முசோலினி என ஒரு பெரிய சர்வாதிகார கும்பலே அப்பாவுக்குள் மொத்தமாய் குடியிருக்கிறது. அதைச் செய்யாதே, இதைச் செய்.... அதைத்தான் சாப்பிடனும்... நான் தர்ற டிரஸைத்தான் போடனும்... இன்னும் என்னெவெல்லாமோ..... தன் சுய ஆர்வத்தை, அதிகாரத்தை வீட்டில் ஒவ்வொருவர் மீதும் திணிப்பதிலே அவருக்கு ஒரு திருப்தி. நான் மட்டும் சம்பாதிச்சுக் கொண்டுவந்து கொட்டலேன்னா... அடுத்த வேளை பூவாவுக்கு கையைத்தான் ஏந்தணும்.... கான்வெண்ட்டுல மட்டும் இல்ல கவருமெண்ட் ஸ்கூல்ல கூட படிக்க முடியாது... இப்ப நீங்க இருக்கிற நல்ல நிலைமைக்காக நான் என்ன கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா? வழக்கமான அப்பாக்களின் வரிசையில் எனது அப்பா மட்டும் விதிவிலக்கா என்ன?....
வீடும் முக்கியமாக சமயலறை மட்டுமே அம்மாவின் சாம்ராஜ்யம். வாயில்லாப் பூச்சி... அப்பா வாங்கிக் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்தி சமைப்பதோடு, அவர் வாங்கித் தரும் துணிமணிகளை மட்டுமே கட்டிப்பார்ப்பவர். அவருக்கே அவருக்கான உணர்வுகள் உரிமைகள் என்று எதுவும் கிடையாது.
ஏம்மா இப்படி இருக்க... கொஞ்சமாவது உன்னோட ஆசைகளையும் அப்பாக்கிட்டச் சொல்லுமா? எப்படிம்மா அந்த பாடாவதி மாடல் புடவையைக் கட்டிக்கிட்டு இருக்கே... இப்போதான் புதுசு புதுசா சேலை டிசைனெல்லாம் வருதே அத வாங்கிக் கட்டிக்கிட்டா என்ன? இரும்மா நான் சம்பாதிக்கும் போது உனக்கு பட்டுப்புடவையா வாங்கிக் கொடுத்து ராணி மாதிரி பார்த்துப்பேன். வேலைக்கு எல்லாம் ஆளுதான்... பெருமையாக பீற்றிக் கொள்வேன்...
என்ன சொன்னாலும் சரி அம்மாவிடமிருந்து ஒரு புன்னகை மட்டும்தான் பதிலாக வரும்... அது அவரின் இயலாமையின் வெளிப்பாடா அல்லது என்னைப் பற்றிய பெருமிதமா அல்லது அப்பா குறித்தான நகையாடலா.... எனக்குத்தான் புரிபடவில்லை...
இப்போதும் அம்மா சமையலறைக்குள்... வெண்டைக்காயை நறுக்கிக் கொண்டிருக்கிறாள் ... தன் கணவருக்கு பிடித்த பொறியல் வைப்பதற்காக...
பிரஸில் டூத் பேஸ்ட்டை வைத்து வாய்க்குள் திணித்தவனாக பாத்ரூமுக்குள் செல்கிறேன்.
மணி பத்து... உடைகளை மாற்றிக் கொள்கிறேன்...
டைனிங் டேபிளில் இருந்த இட்லியை எடுத்துச் சாப்பிடுகிறேன்.
அம்மாவிடம் சொல்லிக் கொண்டு போக நினைத்து சமையலறைக்குள் நுழைந்தாள் அம்மா இல்லை. பாத்ரூமுக்குள் தண்ணீர் சத்தம்.
குளிக்கிறார்கள்...
அம்மா போய்ட்டு வருகிறேன்
பைக் சாவி நினைவு வந்து என் அறைக்குச் செல்கிறேன். அங்கு பைக் சாவி இல்லை. பைக்கிலேயே வைத்து விட்டோமோ...
வேகவேகமாக வெளியே வந்து பார்த்தேன். பைக்கை காணோம்.
அப்பா எடுத்துட்டுப் போகமாட்டார்... பைக்கை எங்கே... யோசித்துக் கொண்டிருக்கும் போதே
கொஞ்ச தூரத்தில் அப்பா வந்து கொண்டிருந்தார்.
இன்னைக்கு வேலைக்குப் போகலையா?
அப்பாவுக்கு பின்னால் ஒரு மெக்கானிக். அவர் என் பைக்கை தள்ளிக் கொண்டு வந்தார்.
அப்பா எப்போ என் பைக்கை...
அம்மாவும் வாசலுக்கு வந்துவிட்டார்.
ஏம்மா என் பைக்கை அப்பா கொண்டுட்டு வர்றார்.
என் கேள்விக்கு அம்மாவிடமிருந்து விடையில்லை. அவர் முகத்தில் மெல்லிய சோகம்.
பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு மெக்கானிக் போய்விட்டார்.
அப்பா, அம்மாவின் முதுகில் கை வைத்தபடி மெதுவாக வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தார்.
அப்பா என்னாச்சு என் பைக்குக்கு... அப்பா.... அம்மா... என் கதறல் அவர்களை ஒன்றுமே செய்யவில்லை.
மெதுவாக பூஜை அறைக்குள் அம்மாவுடன் நுழைந்தார் அப்பா...
ஓடிச் சென்று எட்டிப்பார்த்தேன்.
அம்மாவின் மடியில் குழந்தை போல அப்பா அழுது கொண்டிருந்தார். எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன். எம்புள்ளைமே்ல என்னையவிட அதிகமா யாருடி அக்கறையும் பாசமும் காட்டமுடியும்................ இன்னும் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருந்தார்.
குலுங்கி அழுத அப்பாவை பார்ப்பதை விட அதிர்ச்சியாயிருந்தது நிமிர்ந்து பார்த்தபோது என் போட்டோவுக்கு மாலை போடப்பட்டிருந்தது!

வியாழன், மார்ச் 04, 2010
நான் மகான் அல்ல!

ஒருத்தன் வேணும்னா அவனைத் தாங்குறதும், வேண்டாம்னா பொத்துன்னு தூக்கி கீழப் போடுறதும் மனித இயல்பு. ஒருத்தன் மேல அவன் நல்லவன்னு நம்பிக்கை வச்சி வாழ்த்துறதும், அவனோட தப்பான சகவாசம் எப்போவாவது தெரியவந்துச்சுன்னா ச்சீய்... அவனப் போயா இவ்வளவு நாளா நம்பிக்கை வெச்சிருந்தோம்னு தனது நம்பிக்கை தவறானதை ஏற்கமுடியாத கோபத்தை அவன் மீது காட்டுவதும் கூட மனித இயல்புதான் போலும்.... சமீபத்தில் ஊடகங்களால் பரவலாக கடை விரிக்கப்பட்ட சுவாமி நித்யானந்தா விவகாரமும் இப்படித்தான்.
சிறுவயதிலேயே துறவறத்தை மேற்கொண்டு உபதேசங்களை வழங்கியும், யோகாசனங்களை செய்யச் சொல்லியும், மனதை ரிலாக்ஸாக்கும் சில பல நூல்களை வெளியிட்டும் தன் பெயரையும், பேங்க் பேலன்ஸையும் சொத்துக்களையும் குவித்து கொண்டவர் இந்த நித்தியானந்தா.
தனக்கான ஆறுதல் வார்த்தைகளை, தன் உள்ளத்துக்கான அமைதியை தேடும் சிலர், பலருக்கு அந்த ஆறுதல் வார்த்தைகளை, அமைதியை தருபவன் தெய்வமாக, தன்னை வழிநடத்துபவனாக தெரிவதில் ஆச்சர்யமில்லை. அந்த நியதியில்தான் நித்தியானந்தாவின் வார்த்தைகளும், போதனைகளும் தனக்கான வழிகாட்டுதலாக நினைத்தவன் அவரை தெய்வமாக்கிக் கொண்டான்.
தன்னை தெய்வமாக்கிக் கொண்ட பக்தனிடமிருந்து காணிக்கையாக பெற முடிந்ததையெல்லாம் பெற்ற நித்தியானந்தாவுக்கு சொத்துக்கள் குவிந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை.
நேர்மை, நீதி, நியாயம், சத்தியம், தர்மம் என்று ஊருக்கு உபதேசம் சொன்னவரை கடவுளாகப் பார்த்தவன், உபன்னியாசத்தை மட்டும் பார்க்காமல் அவருக்குள்ளும் ஊடுருவிப் பார்த்தபோது தெரிந்ததுதான் அவரது மறுபக்க லீலைகள்.
தன்னை நித்தியானந்தா பாலியல் வல்லுறவு கொண்டதாக இன்னும் யாராலும் புகார் தரப்படவில்லை. லீலையில் இருந்ததாக கூறப்பட்ட நடிகை ரஞ்சிதாவும், தன் கடவுளுக்கு தன்னையே காணிக்கையாக்கியதாக ஒப்புக் கொண்டு விட்டார்.
.............. ஆஹா ஓஹோ என்று நித்தியானந்தாவைப் தூக்கி வைத்தவர்கள் இன்று தொப்பென்று போட்டுவிட்டு ஆங்காரம் காட்டுகிறார்கள்.
காவி உடையில் சன்னியாசம் பேணும் ஒருவர், துறவி என்று முற்றும் துறந்தவராகக் காட்சி அளித்தவரின் இந்த செயல் அருவருப்பானதே. தன் மீதான பக்தர்களின் நம்பிக்கையைத் தகர்த்த செயல் தவறானது.
முற்றும் துறக்கவில்லை, இன்னும் சில இன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்றால் துறவறத்தை கைவிட்டு இல்லறத்தை மேற்கொண்டு கல்கி(?) சாமியார் போல் கணவன் மனைவியாக சமயச் சொற்பொழிவைத் தொடரலாம்..... சொத்து பத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ளலாமே...
இன்னொரு விஷயம்:
அமெரிக்காவில் தன்மனித ஒழுக்கம் சரியாக இல்லாவிட்டாலும் தங்களுக்கு தலைமையாக வருபவர் ஒழுக்கமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் இந்தியாவிலோ தனிமனித ஒழுக்கம் மட்டுமே முக்கியம், தலைமை எப்படியும் இருக்கலாம் என்னும் மனோபாவமே இருக்கிறது. இதனால்தான் தான் நேர்மையாக இருந்தாலும் தான் தேர்ந்தெடுக்கும் தலைமை - ஆன்மீகமானாலும் சரி, அரசியல் ஆனாலும் சரி அவர்களின் ஒழுக்கங்களை பார்ப்பதில்லை.
எப்படி மனித வாழ்வை ஆன்மிகம் நல்ல வழிக்கு திருப்புகிறதோ அவ்வாறே அரசியலும் நல்ல நெறியில் நடத்த வேண்டும். ஆனால் இங்கு ஆன்மிகமும் சரியில்லை, அரசியலும் சரியில்லை... நல்லக்கூத்து நடக்குது இந்தநாட்டில்...........
லேபிள்கள்:
சமூகம்
புதன், பிப்ரவரி 24, 2010
நீ கடவுள்!

வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்;
வாழ விடாதவர்களுக்கு நான் தரும் மரணம் தண்டனை! அஹம் ப்ரமாஸ்மி....
ருத்ரன் வேஷத்தில் வாழ்ந்திருந்த ஆர்யாவின் வசனங்கள் செவிகளுக்குள் நுழைந்து மனதைப் போட்டு பிசைந்தது.
ஏற்கனவே பார்த்த படம் தான் என்றாலும் பாலாவுக்கு அவார்டு கொடுத்த பின்னர் பெருமிதத்துடன் இரண்டாம் ஆட்டமாய் பார்த்தபோதும் முதல்முறை ஏற்பட்ட உணர்வே வர தன் சைக்கிளை மிதித்தபடி யோசனையில் வீட்டுக்கு புறப்பட்டான்.
நெல்லை டவுன் தர்மராஜா நகரில் இருக்கும் மாநகராட்சி குளியலறை வழியாக தன் சைக்கிளை விட்டவனை அங்கே கேட்ட முனகல் குரல் பிரேக்கிட செய்தது.
சோடியம் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சத்தம் வந்த இடத்தைப் பார்த்தவாறு சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டான்.
ஒரு நாய் குளியலறையின் உள்ளே போவதும் வெளியே வருவதுமாய் இருந்தது.
நாள் உள்ளே போகும்போதெல்லாம் அந்த சத்தம் கேட்டது.
ச்சீ... நாயை நோக்கி பறந்தது அவன் உதிர்த்த சொல்லோடு எரிந்த கல்...
தன் ஈனக்குரலை விட்டபடி அங்கிருந்து நாய் ஓடியதும், அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தான்.
தன் கையில் வைத்திருந்த டார்ச் விளக்கை அடித்தவன் கண்ட காட்சி நிலைய குலைய வைத்தது.
உயிருள்ள ஒரு பிரேதமாய் மூலையில் சுருங்கிக் கிடந்தாள் அந்தக் கிழவி. எழுபதுக்கும் மேலான வயதிருக்கும். உடம்பிலிருந்த புண்களை நாய் கடித்ததால் வழிந்து கொண்டிருந்தது ரத்தம். மரண வேதனையை அனுபவிப்பவள் போல் தோன்றியது. பார்த்தவுடன் தெரிந்தது உறவுகளின் குப்பை இந்தக் கிழவி என்று.
கொஞ்சம் தள்ளி மூடிக்கொண்டிருந்த டீக்கடைக்கு சென்று காயின் போனில் 108க்கு டயல் செய்து ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தான்.
... என்ன உலகம்... என்ன குடும்ப உறவுகள்... உறவுகளின் குப்பையாக எறியப்பட்டிருக்கும் இந்தக் கிழவி... 'நான் கடவு'ளில் நாம் பார்த்த பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கும் இந்த கிழவியை இந்தக் கதிக்கு ஆளாக்கிய உறவுகளுக்கும் என்ன வித்தியாசம். அனாதை ஆசிரமங்களும், முதியோர் இல்லங்களும் பெருகுவது தான் இன்றைய நாகரிக வளர்ச்சிக்கான எச்சங்கள் போலும்...
இரவின் நிசப்தத்தை கிழித்தபடி வந்தது ஆம்புலன்ஸ்.
'யாருப்பா போன் பண்ணுனது?'
நாந்தான்...
இந்தக் கிழவி உனக்கு என்ன வேணும்?
பாட்டி வேணும்.
அம்மா வழி பாட்டியா, அப்பா வழி பாட்டியா?
நேரு எப்படி நமக்கு மாமாவான்னாரு, காந்தி எப்படி தாத்தாவானாரு அது மாதிரி இந்த கிழவியும் எனக்கு பாட்டியானாங்க....
அவன் பதிலிலேயே கேள்வி கேட்டவன் நிலவரத்தை விளங்கிக் கொள்ள, கிழவியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அவனையும் கூட வைத்தபடி ஹைகிரண்டை ஆஸ்பத்திரியை நோக்கிக் கிளம்பியது ஆம்புலன்ஸ்...
எப்படியும் இந்த கிளவியை காப்பாற்றி நம்மோடு அழைத்துச் செல்ல வேண்டும். அனாதையாய் இருக்கும் நாம் இந்தக் கிழவிக்காவது ஆதரவாக இருக்கலேமே எண்ணியபடி இருந்தவைன் கைகளை கிழவியின் கைகள் பற்றிக் கொண்டிருந்தது.
வாழ இயலாதவர்களுக்கும் வாழ்வளிப்பவன் கடவுள்தான். நீ கடவுள்!
லேபிள்கள்:
சிறுகதை
சனி, பிப்ரவரி 20, 2010
அஜீத் - ரஜினி: இலக்கின் பின்னால் இருப்பவர் யார்?

"இனிமேலும் அந்த அம்மாவை ஆட்சியில் அமர வைத்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது" - 95 தேர்தல் களத்தில் தமிழகத்தின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் உதிர்த்த வாசகம் அவரை நேரடி அரசியல் களத்துக்குள் பிரவேசிக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்தாலும், சொன்னாலும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டு அவரே வேண்டாம் என்றாலும் அவரைப் பற்றிக்கொண்ட அரசியல் விடுவதாக இல்லை.
டாக்டர் ராமதாஸுக்கு எதிராக கருத்து கூறி 'பாபா' திரைப்படத்தை அவர்கள் திரையரங்குகளில் ஓட விடச்செய்யாமல் தடுத்ததிலிருந்து தமிழக அரசியலில் ரஜினி கூடுதலாகக் கவனிக்கப்பட்டார்.
பின்னர் ஜெயலலிதாவுடனும், கருணாநிதியுடனும் சுமூகப் போக்கை மேற்கொண்டு தன்னைக் காத்துக் கொள்ள பெரும்பாடுபட்டுக் கொண்டு இருந்தாலும், அரசியல் கழுகுகள் எப்போதும் அவரை துரத்துவதற்கான நேரம் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.
சமீப நாட்களாக தமிழக அரசின் விழாக்களிலும், தமிழக முதல்வருக்கு எடுக்கப்படும் விழாக்களிலும் அரசவைக் கலைஞர் போல இவரும் அழைக்கப்பட்டும் வருகை தந்து வாழ்த்துரைத்தும் வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னால் திரைப்படத்துறை சார்பில் முதல்வருக்கு எடுக்கப்பட்ட விழாவில் நடிகர் அஜீத் பேசியபோது, தங்களைக் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் அழைத்து வருவதாக உண்மையை சபையறியாமல் பேசிவிட்டார். இந்த உண்மைக்காகவே ரஜினிகாந்த்தும் சபையிலேயே தனியாக எழுந்து கைதட்டிவிட்டார்.
முதல்வர் முன்னால் எப்படி இவர் பேசலாம் என்று அஜீத்தையும், எப்படி ஆமோதித்து கைதட்டலாம் என்று ரஜினியையும் இப்போது பிடித்து விட்டார்கள் அரசியல்வாதிகளின் அருவருடிகள் கூடவே அரசியல் முகம் மறைத்து திரியும் கலையுலகினரும்.
எங்கே இது மீண்டும் தலைவலியாகுமோ என்று தன் மகள் திருமண நிச்சயதார்த்தத்துக்குப் முதல்வர் வந்த பிறகும் மீண்டும் அவரது இல்லம் சென்று தனி சந்திப்பு நடத்தி தன் விளக்கத்தை தெளிவுபடுத்தியதோடு, நடிகர் அஜீத்தையும் முதல்வரை சந்திக்கச் சொல்லி விளக்கமளிக்க வைத்தார் ரஜினி.
ஆனாலும் இப்போது பிரச்னை தீரவேயில்லை. முதல்வரை சந்தித்து திரும்பும் முன்னதாகவே, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீட்டில் கல்லெறிந்ததாக அஜீத் மன்றத்தினர் மீதும், தாக்குதலுக்கு தூண்டியதாக அஜீத்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் பார்த்தால் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் வி.சி.குகநாதன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன், இருவரும் சங்கமுடிவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் சங்கத்திலிருந்து தூக்கி வீசப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வமோ அஜீத் படத்தை திரையிடுவதா வேண்டாமா என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் நடிகர் சங்கம் சார்பாகவும் இந்த இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் அழுத்தம் தரப்படும்.
பொதுச்சபையில் தனக்கான மரியாதை குறைந்ததாக கருதிய ஒரு தனி மனிதரின் கோபம் எந்த அளவுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதே ரஜினி, அஜீத் விவகாரங்களுக்கான விதை என்பது சொல்லாமலே தெரியும்.
கொசுறு: இப்போது அரசின் விழாக்கள் என்றாலே இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்து ஒளிபரப்பி வருகின்றன. இந்த ஒளிபரப்பின் விளம்பரம் அதிகரிக்க வேண்டும் என்றால் அரசவைக் கலைஞர்கள் (ரஜினி, கமல்....)மற்றும் துணை நிலைக் கலைஞர்கள் (விஜய், சூர்யா, அஜீத், சிம்பு....) கலந்து கொள்ள வேண்டும். அதனால்தான் அவர்கள் மிரட்டப்பட்டாவது விழாக்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இல்லாவிட்டால் அவர்களது வீட்டில் வருமானவரித்துறையிலிருந்து கார்ப்பரேஷன் வரை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
கூடுதல் கொசுறு: திரை நட்சத்திரங்களை தங்கள் விழாக்களுக்கு அழைத்து பப்ளிசிட்டி தேடிக் கொள்வது என்பது காமராஜர், அண்ணா, காலத்திலிருந்தே நடந்து வருகிறது. காலங்களுக்கேற்ப கலைஞர்களும், அரசியல் தலைவர்களும் மாறிக் கொண்டே வருகிறார்கள். அவ்வளவுதான்!
லேபிள்கள்:
அரசியல்
திங்கள், பிப்ரவரி 15, 2010
எஸ்.ராமகிருஷ்ணனுடன் கலந்துரையாடல்!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நான் பணியாற்றும் விகடன் அலுவலகத்தில் நடந்தேறியது.
விகடன் எம்.டி. பா.சீனிவாசன் நிகழ்ச்சி அறிமுகத்தைத் தொடர்ந்து தனது உரையாடலைத் தொடங்கினார் எஸ்.ராமகிருஷ்ணன்..... அதிலிருந்து சில வரிகள்...
கட்டாயம் என்ற சொல்லை நாம் பயன்படுத்தும் விதம் வேறு. ஆனால் கட்டாயம் என்பதன் அர்த்தம் கட்டு+ ஆயம். கட்டு என்பது நிலத்தையும் ஆயம் என்பது வரியையும் குறித்து நிலவரி என்பதான சொல்லே கட்டாயம். நாம் இன்று அதைப் பயன்படுத்தும் தன்மை வேறு விதமாக இருக்கிறது.
செய்தியாளர் உணர்ச்சியின் அடிப்படையில் செய்திகளை பார்ப்பதை தவிர்த்து உண்மையின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
வழக்கமான சொல்லையே பயன்படுத்திக் கொண்டிருக்காமல் புதிய புதிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரே சொல் பல்வேறு இடங்களில் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் தன்மை தமிழ் மொழியில் மட்டுமே உண்டு...
உறவுகளுக்குள் நம்மை ஊடுருவிப் பார்க்க வேண்டும். நவீனத்துவமாகி வரும் குடும்ப வாழ்க்கையில் எந்திரத்தனமாக இயங்காமல் வாழ்க்கையை கொஞ்சம் சுவாரஸ்யத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
புறச்சிந்தனைகளை வளர்க்கும் விதமான கேள்விகளை நமக்குள் எழுப்பி அதற்கான தீர்வைத் தேடும்போது இன்னும் நாம் சுவாரஸ்யமான பாதையில் பயணிக்கலாம். மகாபாரதத்தை படித்தால் பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும்.
அழகான தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் தான் நம்மை ஐநூறு வருடங்கள் ஆங்கிலேயர் அடிமையாக வைத்ததற்கு பிள்ளையார் சுழி. தீயில் கருகிய தன் மகளின் முகத்தை குணப்படுத்திய வெள்ளை டாக்டர் கோரிய வரியில்லா வர்த்ததகத்துக்கு ஷாஜஹான் வழங்கிய அனுமதிதான் பிரிட்டீஸ் அரசு நம்மை ஆண்டது...
உறவுகள் தொடர்பாக ஆறுமுக நாவலரின் கதைகளையும் அவர் சுட்டிக்காட்டிப் பேசியபோது உண்மையிலேயே தந்தையின் அரவணைப்பு என்பது ஆண் குழந்தைகளுக்கே கிடைக்காத ஒரு பொக்கிஷம் என்பது தெரியவந்தது....
புத்தரின் மகன் நகுலன் தவறு செய்துவிட்டான். அந்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்று விரும்பியவர் தன் அறையில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைத்திருந்தார். நகுலன் அங்கே வந்ததும் அந்த பாத்திரத்தில் கையை கழுவச் செய்தார். பின்னர் அந்த தண்ணீரை குடிக்கச் சொன்னார். அழுக்குத் தண்ணீர் என்று நகுலன் சொன்னதும், அந்த தண்ணீரை அழுக்காக மாற்றியது யார் என்று கேள்வி எழுப்பி சிந்திக்கச் செய்ததன் மூலம் அவன் தவறை அவனே உணரச் செய்து திருத்தினார்.
நல்லபல தகவல்களைச் சொன்னவர் கடைசியாக பத்திரிகையாளர்கள் பார்ப்பதற்காக பல ஆங்கிலப் படங்களைச் சுட்டிக்காட்டி சென்றார்................
பெயர் மட்டுமே தெரிந்திருந்த ஒரு எழுத்தாளரை நேரில் சந்தித்து, அவர் கூறியதை சிந்திக்க முடிந்தது.
வியாழன், பிப்ரவரி 11, 2010
சிந்தியுங்கள் சிங்களப் பெண்களே!

"என் கணவர் கைது செய்யப்படவில்லை. இலங்கை அரசால் கடத்தப்பட்டுள்ளார். இன்று நான் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதேபோன்று நாளை ஏனைய பெண்களுக்கும் எனது நிலைமை ஏற்படக்கூடும். இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராட என்னுடன் அணிதிரளுங்கள்?" - பத்திரிகையாளர் சந்திப்பில் அனோமா பொன்சேகா கண்ணீருடன் உதிர்த்த வார்த்தைகள் இவை.
2009 மே நடுப்பகுதியில் புலிகளுடனான போர் முடிவடைந்தது என்று தென்னிலங்கையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற போது கணவர் இராணுவத்தளபதி பொன்சேகாவை நாடு போற்றிப் புகழுவதைக் கண்டு பூரித்து நின்ற திருமதி பொன்சேகா ஒரு வருடகாலத்திற்குள் கணவருக்கும் தனக்கும் இந்த நிலைவருமென்று கனவிலும் நினைத்திருப்பாரா.................?
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைத் தனது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான ஜெனரல் ஹவுஸுக்கு விருந்துக்கு அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். போர் தீவிரமடைந்திருந்த இறுதி இரண்டு ஆண்டுகளின் தொடக்கத்திலும் விருந்துபசாரங்களின்போது ஜெனரல் பொன்சேகா வேதாளம் ஒன்று புலியை மடக்கிப் பிடித்து வைத்திருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட மேலங்கியை அணிந்த வண்ணம் ஊடகவியலாளர்களுடன் போர் நிலைவரங்கள் பற்றி கலகலப்பாகப் பேசிக்கொண்டிருப்பார். தனது பேச்சில் இந்தப்போரை அடுத்த தளபதிகளின் கைகளில் விட்டுவிடப்போவதில்லை; தன் பதவிக்காலம் முடியும் முன்பு தாமே முடிவுக்கு கொண்டுவருவதாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
ஜெனரல் பொன்சேகா தான் கூறியவாறே போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு விட்டுவைக்காமல் தனது பதவிக்காலத்துக்குள்ளேயே அதை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆனால், தனக்கு அடுத்ததாக இராணுவத் தளபதியாகப் பதவியேற்கக் கூடியவர் தன்னைக் கைது செய்து தடுத்துவைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார் என்று ஜெனரல் கனவிலும் நினைத்திருப்பாரா..................?
திருமதி அனோமா பொன்சேகாவிடம் ஒரு கேள்வி?
எங்கட காப்பாத்துங்கோ... என்று உலகமே கேட்க ஒப்பாரி வைத்த தமிழினத்தினத்தின் அழுகுரல் உங்கள் செவிகளில் எட்டவில்லையா... பத்துமாதம் சுமந்து பெற்று பசிக்கு மார்பமுது வழங்கும் நிலையில் பாஸ்பரஸ் குண்டுகளில் கருகிய தாய் சேயின் சதைக்கட்டையின் காட்சி உங்கள் கண்களில் கண்ணீர் வரவழைக்கவில்லையா... புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் பிறந்த சிசு முதல் இறப்பு நோக்கிய முதியவர் என தமிழினம் அழிப்பில் உங்கள் கணவர் 'கடமை' கருப்புக் கண்ணாடி அணிந்தபடி செய்த கொடூரங்கள் உங்கள் நினைவுகளில் இருந்து நீங்கி விட்டதா?
புலிகளை அழித்து விட்டோம் என்று கொண்டாடிவிட்டு இன்று தங்கள் மண்ணுக்குள்ளேயே நாடோடிகளாய் முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவது உங்களைப் போன்ற பெண்களுக்கெல்லாம் தெரியவில்லையா?
பதவிக்காகவும், பெயருக்காகவும் இந்தக் கொடுஞ்செயலைப் புரிந்து விட்டு பழியிலிருந்து தப்பிக்கவும், தன்னை காத்துக்கொள்ளவும் அரசுக் கட்டிலில் ஏற முயன்று தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் உங்கள் கணவர். இன்று ஆளும் வர்க்கம் தன் இனத்தையே வேட்டையாடத் தொடங்கி இருக்கிறது. உங்கள் கணவருக்கு ஒன்று என்றவுடன் ஒப்பாரி வைக்கிறீர்கள்... ஊர்ப் பெண்களையெல்லாம் உங்களுக்கு ஒத்துழைக்க அழைக்கிறீர்கள்... நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலை வரலாம் என்று ஆரூடம் செய்கிறீர்கள்...
தமிழினம் கதறும்போது, பெண்கள் அங்கே மானபங்கம் செய்யப்பட்டபோது, நம்மினம் (பெண்ணினம்) என்று அந்த அபலைத் தமிழ்ப் பெண்களுக்காக நீங்கள் செய்தது என்ன? சிதறிச் செத்த சிசுக்களுக்காக நீங்கள் செய்தவை என்ன?
இந்தக் கேள்வி அனோமா பொன்சேகாவுக்கு மட்டுமல்ல, அதிகார வர்க்கத்து குடும்பப் பெண்கள் அனைவருக்கும்தான். ராணுவத்தில் தன் கணவனை, மகனை, தம்பியை, தந்தையை என்று பணிக்கு அனுப்பியிருக்கும் ஒவ்வொரு சிங்களப் பெண்ணினத்துக்கும்தான். தவறிழைக்கும் ஆண்களை திருத்துவதில் பெண்களின் பங்குதான் அதிகம் இருக்கிறது. உங்கள் பங்களிப்பை நீங்கள் ஒழுங்கே செய்திருந்தால், போர் என்ற பெயரில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது. வினையை விதைக்காமல் வினையை அறுக்காமல் இருந்திருக்கலாம்....
இனிமேலாவது சிந்தியுங்கள்... முகாமில் இருக்கும் தமிழர்களுக்கான வாழ்க்கையாவது மலர்ச்சி அடையட்டும்....
சனி, பிப்ரவரி 06, 2010
அழகிரி திராவிட முன்னேற்றக் கழகம்
'அண்ணனை' பார்க்க வந்துட்டாருல்ல! இனி அவருக்கு ஏத்தம்தான். மாப்ளே இப்பவே நாமளும் ஆளுக்கு ஒரு பூமாலை வாங்கியாந்து 'அண்ணனுக்கும்' 'அவருக்கும்' போட்டுடுவோம். நாளைக்கு கட்சி மாறிப்போனாலும் நம்மளையும் அரவணைச்சுக் கொண்டு போய்சேர்த்திடுவாரு அவரு. போறப்போக்கப் பார்த்தா இனிமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகங்கிறது 'அண்ணன் திராவிட முன்னேற்றக் கழகம்'னு ஆகிடும் போல...
மதுரையில் அழகிரியை, அ.தி.மு.க. எல்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் சந்தித்து 'தன் கோரிக்கை'மனு அளித்தபோது இப்படித்தான் பேசியிருப்பார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
அனிதா ராதாகிருஷ்ணன் சொன்னபடியே முதலில் ராதாகிருஷ்ணனை இழுத்து வந்து நிறுத்தி விட்டார். இனிமேலும் தென்மாவட்டங்களில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் உடன்பிறப்புகளாக சங்கமிக்கும் நாள் வெகுதூரமில்லை.... இது நம் கண்முன் தற்போது நடைபெறும் காட்சிகள்... இந்தக்காட்சிகளின்கோர்வை நாளைய ஒரு முக்கிய பிரிவுக்கான அசைன்மெண்டாக கூட இருக்கலாம்.
அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் தகப்பன்சாமி, அதற்கு முன்னால் தன் வாரிசுகளுக்கிடையே நடந்து கொண்டிருக்கும் அரசியல் கௌரவத்துக்கான பனிப்போரை எப்பாடுபட்டேனும் முடிவுக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
தகப்பன் சாமியின் பங்கீடு ஏதாவது வில்லங்கமாகாது, அப்படி வில்லங்கமாகி விட்டால் நாளையே கட்சியிலிருந்து வெளியேறி புதிதாக ஒரு கட்சி அமைப்பதைக் காட்டிலும் இப்போதே இன்னொரு கட்சியின் தளகர்த்தாக்களை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து கூடிய விரைவிலேயே அந்த கட்சியையே தனது கட்சியாக்கும் தொலைநோக்கு(?) சிந்தனையின் வடிவம்தான் தற்போது அரங்கேறி வரும் ஆள்பிடிப்பு வேலைகள்.
அரசியல் வியாபாரி பணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டே இருந்தால் வளர்ந்து விடாது. அதை தன்னை நாடிவருபவருக்கு பங்கிட்டுக் கொடுத்து வட்டியும் முதலுமாக கொடுத்தவனிடம் இருந்து அவன் கையாலேயே தரவைக்கும் யுக்தி படைத்தவனாக இருக்க வேண்டும்.
போயஸ் வியாபாரிக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் அருகிருக்கும் சிலர் சில்லறையை வெளியே கொண்டுவர விரும்பவில்லை.
ஆனால் 'அண்ணன்' இன்றைய முதலீட்டை நாளைய வருமானமாக்கி அரசியல் அஸ்திவாரத்தை திடப்படுத்திக் கொண்டு வருகிறார். தம்பியின் கவனத்தை பதவிக்கான காய்நகர்த்துதலிலேயே இருக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்... அரசியல் பீடம் அண்ணனிடமா? தம்பியிடமா?

வியாழன், பிப்ரவரி 04, 2010
புகை ஒழிப்போம்... புற்றுநோய் தடுப்போம்!

உலகை அச்சுறுத்திவரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனை தடுக்கும் முறைகள், அதற்கான சிகிச்சைகள் பற்றிய தகவல்களை பரப்புவதற்கும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி "உலக புற்றுநோய் எதிர்ப்புக்கழகம்'' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பணக்கார நாடுகளின் நோய் என்று முன்னர் கருதப்பட்டுவந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. இந்நோயினால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவோர், உயிரிழப்போரின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்ந்து விடும் நிலை காணப்படுகிறது.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் ஷின் யங் சூ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் 1.7 கோடியை தாண்டிவிடும். இந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 76 இலட்சத்தையும் விட அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். உலகில் 8 பேர் இறந்தால் அவர்களில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார். ஆண்டு தோறும் உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடிப் பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ள ஷின் யங் சூ, புற்றுநோய் மரணங்கள் தவிர்க்கப்படக் கூடியவை என்றும் கூறுகிறார்.
இன்று உலகில் மனித உயிர்களைப் பறிப்பதில் புற்றுநோய் தான் முதலிடம் வகிக்கிறது. ஒரு வருடத்தில் 76 இலட்சம் பேரின் உயிரினைக் குடிக்கும் இந்நோய் இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கையை 1.7 கோடியாக உயர்த்தவுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுவரை புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை 8 கோடியாக இருக்குமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை, சிகரெட் புகைப்பதனால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு மட்டும் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேராகவும் அதேயாண்டு உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் மட்டும் இரண்டு இலட்சம் பேராகவும் உள்ளது. புற்றுநோய் குறித்து உலகளாவிய ரீதியில் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவேயுள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தல், போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விடயங்களின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.
எனவே வளரும் நாடுகள் உள்பட அனைத்துலக நாடுகளில் புற்றுநோய் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படும் அறியாமையை போக்குவதுடன் புற்றுநோய் குறித்த சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்தி மக்கள் மத்தியில் நோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி விட்டால் புற்றுநோய் மரணங்களில் 50 வீதத்தையேனும் தடுக்க முடியும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் நோய் முற்றிய நிலையிலேயே தமக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் மக்களும் கவனம் செலுத்தி தமக்கு ஏற்படும் நோய்களின் போது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாது உடனடியாகவே மருத்துவமனைகளை நாடவேண்டும். இது விஷயத்தில் நாம் மெத்தனமாக செயற்பட்டால் போவது நமது உயிராக இருந்தாலும் நாளை பாதிக்கப்படப் போவது நமது குடும்பம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருந்தால் உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான புற்றுநோயிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தையும் ஒட்டுமொத்தத்தில் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை மறப்போம்... புற்றுநோயை இல்லாமல் செய்வோம்.
கருத்து உதவி: தினக்குரல்
லேபிள்கள்:
சமூகம்
திங்கள், பிப்ரவரி 01, 2010
தேடிக் கொண்டிருக்கிறேன்!
.jpg)
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்றோ நான் கடந்த
என் பாலப் பருவத்தை
தேடிக் கொண்டிருக்கிறேன்
பள்ளிக்கொட்டடியில்
பழகியிருந்த என் தோழர்களை
தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒற்றைக் கொட்டடியில் இருந்து
பிரிந்து கிடக்கும் உடன்பிறப்புகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்
அம்மா ஊட்டிய பிடிசோறு
இன்றும் கிடைக்குமா
தேடிக் கொண்டிருக்கிறேன்
தள்ளி நின்றே எனைப்பார்க்கும்
தந்தையிடம் அன்பை
தேடிக் கொண்டிருக்கிறேன்
இல்லறத்தில் எப்படி
நல்லறம் நடத்தினார்கள் என்று
தேடிக் கொண்டிருக்கிறேன்
என் மகனையாவது எப்படி
நல்லவனாய் வளர்ப்பது
தேடிக் கொண்டிருக்கிறேன்
உழைப்பின் எல்லை
எனக்கு எதுவரையென்று
தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒழுக்கமான சமுதாயத்தில்
எனக்கும் ஓரிடம்
தேடிக் கொண்டிருக்கிறேன்
இன்னும் நான்
நானாகத்தான் இருக்கிறேனா?
லேபிள்கள்:
கவிதை
சனி, ஜனவரி 30, 2010
இலங்கையின் சிறுபான்மையினர் இனி யார்?

மகிந்த ராஜபக்சே இலங்கையின் அதிபர் பதவியை மீண்டும் பெற்றிருக்கிறார்.
இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி பதிவான வாக்குகள் 1,04,95,451. செல்லுபடியான வாக்குகள் 10,393,613. மகிந்த ராஜபக்சே 60,15,934(57.88%)வாக்குகள் பெற்றிருக்கிறார். பிரதான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சரத் பொன்சேகா 41,73,185 (40.15%) வாக்குகள் பெற்றிருக்கிறார். தமிழர்களுக்காக குரல் எழுப்பிக்(?) கொண்டிருந்த சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகள் 9,662 (0,09%).
தமிழர் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள், வாக்காளர் அடையாள அட்டை தரப்படாமை, வாக்குச் சாவடி செல்வதற்கான போக்குவரத்துகள் நிறுத்தம், தமிழர்களின் குறைந்த சதவீதத்தினாலான வாக்களிப்பு வீதம் ஆகியவை தனது தோல்விக்கான காரணங்களாக சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். மேலும் ராஜபக்சே அரசின் அச்சுறுத்தல் செயல்பாடுகளும் தன் தோல்விக்கு காரணம் என்று கூறியிருப்பதோடு தாம் இந்த தேர்தல் முடிவினை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பேட்டியினூடே தெரிவித்திருக்கிறார்.
மகிந்த ராஜபக்சே தனது வெற்றியைத் தொடர்ந்து கொடுத்த பேட்டியில் இந்த அரசு எல்லாருக்குமான அரசு (தமிழர்களைத் தவிர்த்து...?). நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரையும் சமத்துவத்தோடுதான் பார்க்கிறது. சிறுபான்மையினர் என்ற பேதமில்லை என்று கூறியிருக்கிறார்.
எல்லாம் பேச்சோடு சரி... தனது சிங்கள பேரினத்துக்காக தமிழர்களின் பெரும்பகுதியை காவு வாங்கிவிட்டு, எஞ்சியோரையும் வதைமுகாம்களில் அடக்கி ஒடுக்கிவிட்டவர்தான் இந்த மகிந்த. பதவி, அதிகார வெறியினை தனது குடும்பத்தின் கையில் வைத்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் கூட்டுழைப்புடன் ஒரு இன அழிப்பினைச் செய்து அதில் ஏறக்குறைய 90 சதவீதம் பேரை அழித்து விட்டார்கள். இருக்கும் 10 சதவீதம் பேர்களுக்கும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை நசுக்கி வைத்திருப்பதால் அது கேள்விக்குரியான வாழ்வுதான்.அதுமட்டுமல்ல டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகிய 'பச்சை' தமிழர்கள், இருக்கும் தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்யப் பயன்படுத்தப்படுவார்கள்.
தனது பழைய அதிபர் பதவியின் குறையாக உள்ள ஒன்றரை ஆண்டுகாலம், புதிய பதவியின் சுமார் ஆறு ஆண்டுகாலம் என மொத்தமாக ஒரு ஏழரை ஆண்டுகாலத்தை குத்தகை எடுத்திருக்கிறது இந்த ஏழரை பக்சே...
இனி அதன் நடிவடிக்கைகள் இதுவாகத்தான் இருக்கும்...
தனக்கான வெற்றிக்கு பெருவாரியான வாக்குகளை அளித்த சிங்களர்களை வாழ்விக்கவே இந்த ஏழரை விரும்பும். தமிழர்கள் பகுதிகளை இல்லாமல் போகச் செய்து தந்து பௌத்தப் பேரினவாதத்தை அமர்த்தும்.
முக்கியமாக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பார்முலாவில் சிறுபான்மை இஸ்லாமியர்களுடன் வைத்திருந்த கூட்டணி முடிவு பெறும். ஏற்கனவே ஒரு இனத்தை அழித்த மமதையில் இதோ இந்த இனத்தையும் அழித்துவிட்டால் இலங்கை என்பது சிங்களர் தீவு என்றே நிலைத்து விடும்.
இலங்கை அரசின் வருவாய்க்கான கேந்திரங்களாக இருக்கும் இஸ்லாமிய தொழில் அதிபர்களையும், வெளிநாடுகளில் வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்களையும் உள்நாட்டில் பெருந்தனக்காரர்களாக இருப்பவர்களையும் இனி வெள்ளைவேன் சம்பவங்கள் மூலமாகக் கடத்தி தங்கள் கைக்குள் கொண்டு வர சிங்களர்கள் முயற்சிப்பார்கள்.
ஆட்சி அதிகாரம் சிங்களமயமாக்கப்படும். எப்படி நேபாளம் இந்து நாடு என்று தனித்துவம் பெற்றிருக்கிறதோ அதே போல் இலங்கை என்பது மருவி சிங்களத் தேசம் என்று மாறும்.
பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் சிங்களனாகவே இருக்கும்....
இந்த நிலையை வரவிடுவதுவும், வராமல் இருக்கச் செய்வதும் இருக்கும் சிறுபான்மை இஸ்லாமியர்களின் கைகளில்தான் உள்ளது.
திங்கள், ஜனவரி 25, 2010
பாலாவுக்கு வாழ்த்து!

நான் கடவுள் படத்தின் இயக்குனர் பாலாவுக்கு தேசிய விருது! பாலா அடைந்த சந்தோஷத்தை விட எனக்கு கூடுதலாகவே இருந்தது.
நந்தா படம் பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளால், அந்த பாலா என்கிற இயக்குனர் அடுத்தடுத்து எடுக்கும் படங்களை எப்படியும் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தேன்.
ரௌத்ரம் பழகிய நாயகன் தாய்ப் பாசத்துக்காக ஏங்குவதும், இறுதியில் தாயின் கைகளால் தரப்படும் சாத்தத்தில் விஷம் கலந்திருப்பதை அறிந்தும், விரும்பி வாங்கி ஜனனம் தந்த தாயிடமே மரணத்தையும் வாங்குவது என்ற முடிவில் தன்முத்திரையை பதிய வைத்தார்.
சேது படம் அவரது இரண்டாவது இமாலய வெற்றி! படத்தின் முடிவில் கதைமாந்தனின் சித்தம் சரியாகிவிட்டதா? இல்லையா என்று நமது சிந்தைக்கு மட்டுமல்ல ஆறாம் அறிவர்களின் மனதையும் தட்டி எழுப்பியிருந்தார்.
பிதாமகன் - தன் நண்பனுக்காக விளிம்பு நிலை மனிதன் எடுக்கும் அவதாரம்.
நான் கடவுள் - வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்...
வாழ விடாதவர்களுக்கு நான் தரம் மரணம் தண்டனை...
கருத்தை மனதில் பதிய வைப்பதற்காக தேர்ந்தெடுத்த களம், கதாபாத்திரத்தின் தன்மை, காட்சியமைப்பு, முடிவு என்பவற்றுக்குள் இன்னொரு உலகம் என்று தமிழ் சினிமா உலகம் நுழையவே முயற்சிக்காத பயணத்துக்குள் புகுந்து எல்லையை கண்ட படம்.
பாலாவுக்கு விருது எனக்கு, உனக்கு ஒவ்வொரு தமிழனுக்கும், உண்மை சினிமா ரசிகனுக்கும் கிடைத்த விருது.
இன்னும் கலைப்பயணம் தொடரட்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)