புதன், மே 21, 2008

உல்டா பாடல்

வெயிலோடு போராடி
வெயிலோடு வாயாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
சோர்ந்து போனோமே

பஸ் போகும் கார் போகும்
ரோட்டோரம் நாம் போனா
தார் கூட சூடாகித்தான்
செருப்பு அறுந்தோடும்

நிழல் வந்தா ஒதுங்கி நில்லு
தண்ணீன்னா குளுறும் சொல்லு
குடிப்போமே ஜூஸு கேளு...
கேழ்வரகு நல்ல கூழு
கேழ்வரகு நல்ல கூழு!
- வெயிலோடு

ஊரச் சுத்தும் சேல்ஸ்மேன வேல
ரொம்ப ரசிச்சோம்
வெயிலுலதான் சுத்தும்போது
கண்ணீர் வடிச்சோம்

வேற வேல போகலான்னு
நெஞ்சில் நினைச்சோம்
அப்பாவ பார்த்ததும்
இடுப்பு பெல்ட்ட நெனச்சோம்

எப்படியோ கோடையத்தான்
நாம இங்க சமாளிச்சாலும்
அடுத்து வர்ற மழக்காலத்த எங்க சொல்லுவோம்

அப்பவும் மழையிலதான் ஊரச் சுத்த முடியாதுன்னு
பழைய பல்லவியத்தான் நாமும் இன்னு படிப்போம்!
கோடைகாலம் போனாலு மழத்தூறல் விழுந்தாலும்
வேலையைத் தவிர வாழ்க்கையில வேறு எத அறிஞ்சோம்!
-வெயிலோடு

வியாழன், மே 15, 2008

திருநங்கைகள் - சமூகத்தின் பிழை

திருநங்கைகள் - இறைவனின் பிழை என்று வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை அது நம் சமூகத்தின் பிழை தான். நாம்தான் ஆண், பெண் என்று பாலினம் வேறுபடுத்தி நடித்துக் கொண்டு சமூகத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எத்தனை மனிதர்கள் உடலளவில் ஆணாக, பெண்ணாக இருந்தாலும் மனதளவில் எதிர்பாலினமாக அலைந்து திரிகிறார்கள். இந்த சமூகப் பிழையின் காரணமாகத்தானே ஹோமோ, லெஸ்பியன் என்றெல்லாம் பெருகிப் போய் இருக்கிறது.
ஆனால் திருநங்கைகள் தங்கள் மனதின் வழியே நடந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் எதுவாக உணர்கிறார்களோ அதுவாகவே வாழ்ந்து வருகிறார்கள். எங்கோ ஒருசிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் தவறான பட்டம் சூட்ட வேண்டாம்.
திருநங்கை வித்யா அவர்களின் நான் வித்யா புத்தகம் நான் படிக்காத போதும், அப்புத்தகத்தின் தாக்கத்தை எனது அண்ணாச்சியின் பதிவில் அவரது எழுத்தில் உணர்ந்து கொண்டேன்.
அதை படித்துக் கொள்ள கீழே உள்ள இடுகைக்குச் செல்லுக்கள்.


http://asifmeeran.blogspot.com/2008/05/blog-post_14.html