அடி மூதேவி, கண்ட கண்ட படத்தையும் செகண்ட் ஸோ பார்க்க வேண்டியது இல்லாட்டி கண்ட கண்ட நாவலையும் படிச்சுத் தொலைக்கவேண்டியது. தூக்கத்துல கனவு கண்டு கத்த வேண்டியது.
அப்பாவின் மிதியில், உண்மையில் அரண்டு போனான் கனவு கலைந்த விரக்தியில் ராஜா.
புதன், ஏப்ரல் 23, 2008
வியாழன், ஏப்ரல் 17, 2008
தொடர்கதை
தைரியத்தை வரவழைத்தபடி மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்றேன். சுனாமி சுருட்டி விட்டு சென்றதைப்போல் வெறிச்சோடிக் கிடந்தது பங்களாவின் வராண்டா. சுற்றும் முற்றும் பார்த்தும் யாரும் அங்கிருப்பதைப் போல் தெரியவில்லை. மூன்றாம் மாடி தாண்டி இருந்த மொட்டைமாடியின் புகைப்போக்கி திகில் சினிமாவை நினைவு படுத்திக் கொண்டிருந்தது.
உயிர்பிரிந்த காய்ந்த சருகுகள் மட்டும் நடந்து வந்த என் காலடியில் சிக்கி கசங்கி உடலையும் உடைத்துக் கொண்டிருந்தன.
திடீரென தோள்பட்டையை தொடவும் மின்சாரம் தாக்கிய உணர்வாய் திடுக்கிட்டு திரும்பினேன், வாட்ச்மேன் நின்று கொண்டிருந்தார்.
யாருப்பா, நீ பாட்டுக்கு கேட்டை திறந்து உள்ள வந்துக்கிட்டிருக்க. எதிர்த்த டீக்கடையிலருந்து உன்னைக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.
அறுபதை தாண்டியிருந்தாலும் உழைத்து சாப்பிடும் உறுதி உடம்பில் திணறெடுத்து நின்றது.
நான்... என் பேரு ராஜா. இந்த பங்களாவோட வோனரோடு சொந்த ஊருல இருந்து வர்றேன். சொந்தக்காரந்தான்.
சொந்தக்காரன்னு சொல்ற, அவங்க யாரும் இப்ப இங்க இல்லயப்பா. மலேசியாவுல போய் செட்டிலாய்ட்டாங்களடே தெரியாதா. சரி, நீ யாரு பையம்பா.
அண்ணாச்சி நான் சௌந்தரரஜன் மகன்.
யாரு, அந்த மேக்குத் தெரு சுந்தர் மச்சனன் பையனாடே.
ஆமா அண்ணாச்சி. அண்ணாச்சி உங்க பேரு தங்கவேலா.
ஆமாம்பா. இங்க என்ன சோலியா வந்தடே.
இங்க எனக்கு வேலை கெடச்சிருக்கு. தங்க இடம் இல்ல. அப்பா தான் இந்த பங்களா அட்ரஸ கொடுத்தாங்க. அதோட பங்களா ஓனர்கிட்டயும் அப்பா பேசிட்டாங்களாம்.
அப்படியா, சரி நம்ம ஊரு புள்ளதானப்பா தாராளமா தங்கிக்க். இங்க நா மட்டும்தான் ஒத்தையில இருந்து பங்களாவ பாதுகாத்துக்கிட்டு வர்றேன். நீயும் கூட இருந்தன்னா நல்லது தானே. அது சரி ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க.
வாடே, போய் டீ சாப்ட்டுட்டு வரலாம்!
ஊருல எல்லோரும் நல்ல இருக்காங்க அண்ணாச்சி. டீ அப்புறமா சாப்பிடலாம். முதல்ல குளிச்சிட்டு கொஞ்சம் தூங்கணும் அண்ணாச்சி.
டிரெயின்ல கூட்டத்துல வந்ததுல உடம்பெல்லாம் அடிச்சிப் போட்ட மாதிரி இருக்கு அண்ணாச்சி.
சரிப்பா, வா, இந்த ரூம்ல தங்கிக்க. போய் பாத்ரூம்ல குளிச்சிட்டு வந்து உக்காரு. உனக்கு டிபன் வாங்கிட்டு வந்துர்றேன்.
ஊர்க்காரன்னதும் அண்ணாச்சி காட்டிய பாசம் நெகிழச் செய்தது. மனதுக்குள் அதை ரசித்தபடியே குளியலைறையில் நுழைந்த நான் பார்த்த காட்சி அண்ணாச்சி என்ற அலறலை என்னையும் அறியாமல் என் வாய் அலறியது....
தொடர்ச்சி நாளை மறுநாள்!

வியாழன், ஏப்ரல் 10, 2008
சிட்டி பாபுவா, சீ...பாபுவா?
உலகத்தொலைக்காட்சியாம் சன் தொலைக்காட்சி... இப்படித்தான் மதுரை முத்து தொடங்கி அசத்தப்போவது யாரு கலைஞர்கள் அனைவரும் அள்ளித் தெளிக்கிறார்கள் பாராட்டுடன் நகைச்சுவையையும் சேர்த்து. சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி சன் தொலைக்காட்சி பார்க்கும் அத்தனைப் பேராலும் நல்ல நிகழ்ச்சியாகத் போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் நடுவர்கள் என்ற போர்வையில் சிட்டிபாபு செய்யும் அலம்பல்களுக்குத் தான் அளவே இல்லாமல் போய் விடுகிறது.
கலைஞர்களை கவனிப்பதை விட நிகழ்ச்சி தொகுப்பாளினி மகேஷ்வரியை கவர் செய்வதிலேயே சிட்டிபாபுவும், நிகழ்ச்சி ஒளிப்பதிவாளரும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அது அவர்கள் விருப்பம் என்று விட்டாலும் கூட கடந்த 5-ந்தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியினுடே மகேஷ்வரியிடம் சிட்டிபாபு கேட்ட கேள்வி:
சி.பாபு: மகேஷ்வரி நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா, இல்ல காதலிக்கிறீங்களா? காதலிக்கப் போறீங்களா.
மகேஷ்வரி: ஐயோ, நான் யாரையும் காதலிக்க வில்லை. என் அம்மா பார்த்து சொல்பவரை தான் கட்டிக்குவேன்.
சி.பாபு: பார்த்து, உங்க அம்மா அவரை கரெக்ட் பண்ணிக்கப் போறாங்க....
இதற்கும் மகேஷ்வரி சிரிப்பைத் தான் காட்டுகிறார். சரி தொலைக்காட்சி வெளிச்சத்தில் தாயை எப்படிபேசினாலும் கேட்டுக் கொள்வார்களோ என்னவோ?
சிட்டிபாபு சார், ஜோக்குக்காக பேசுறாதா நெனச்சு விஷமத்தனமா பேசாதீங்க. உங்க காமெடிகளை ரசிக்குற ரசிகனாத்தான் இதை சொல்றேன்.
நீங்க நடுவரா வேற இருக்கீங்க யோசிங்க.

சனி, ஏப்ரல் 05, 2008
புதன், ஏப்ரல் 02, 2008
டேய் நீ ரொம்ப நல்லவனாடா?
உனக்குத் தெரியாம நான் என்ன செய்யமுடியும் சொல்லு? என்னமோ பெரிய நீதிமானாட்டமா இப்ப கேள்வி கேட்கிற.
பஸ்ல வரும்போது அந்த வெள்ளக்காரிய கூட்டத்துல இடிக்கச் சொன்னது நீதான். அப்படி இடிக்கும் போது பிக்பாக்கெட்னு அவ கத்தி நான் அறை வாங்கும்போது, யாருக்கோ வந்த வினைன்னு சும்மா இருந்துக்கிட்டு சும்மா பொளந்து கட்டுன பிறகு மாறிக்கடான்னு சமாதானம் சொன்ன.
சரி நீ இவ்வளவு நல்லவனாடான்னு நெனைக்கும் போதே, அந்த ஐஸ்க்ரீம் பார்லர்ல ஆண்ட்டி உட்காந்து சாப்பிடுறத பாக்க வச்சி ஜொல்லு வடிய வச்ச.
சரி, வேணாம்னு நான் ஒதுங்கினாலும், அதான் அடியெல்லாம் வாங்கியாச்சே, பின்ன ஏன் நல்லவன் வேஷம் போடுறன்னு கேள்வி கேட்ட....
ஆபிஸ்ல நான்பாட்டுக்கு வேலை பார்த்துட்டு இருந்தாலும் ,போய் அந்த ரிசப்ஷனிஸ்ட் இப்பத்தான் வந்திருக்கா! போய் ஒரு குட்மார்னிங் சொல்லிட்டு சிங்கிள் லுக் விட்டுட்டு வாப்பான்னு உசுப்பேத்துற.
ஆனா நான் போறதுக்குள்ள எப்படா, அவ வருவான்னு வந்த உடனே போய் குட்மார்னிங் சொல்றதுக்கு ஒரு கும்பலே அடிச்சுக்குது. எல்லாம் அவ மச்சம் இருக்குற இடம்தான் காரணம்.
வேலை விட்டு போகும்போதாவது ஒழுங்கா , ஆபீஸ் பிரண்டு வண்டியில போலாம்னா, அந்த டைபிஸ்ட போற பஸ்சுல ஏறி ஒரு , லுக் உட சொல்ற.
அந்த நேரத்துல நீ சொல்றது ரொம்ப நல்லா இருக்கிறதால நானும் ஏற, அவ வீட்டுக்காரணும் அதே பஸ்ல ஏறி வரணுமா. அவ என்னைய நோக்கி புருஷன்கிட்ட கையக் காட்ட அதிர்ச்சியில சிக்னல்லயே இறங்கி வேற பஸ்ச பிடிச்சி வீட்டுக்கு போயிட்டேன். ஆனா அடுத்த நாள் காலையில பாத்தா டைபிஸ்ட் எங்கிட்ட வந்து, என் புருஷன் கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டிருக்கும்போதே இறங்கி போயிட்டீங்களேன்னு ஒரு பற்பசை சிரிப்பு சிரிச்சுவைக்க நான் என்னத்த சொல்ல...
எப்படிடா உன்ன வச்சிட்டு நான் சமாளிக்கப்போறேன்.... கண்ணாடியில் தெரிஞ்ச மனசாட்சிக்கிட்ட ஒப்பாரி வச்சிட்டு இருந்தான் அந்தப் பயபுள்ள.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)