உலகத்தொலைக்காட்சியாம் சன் தொலைக்காட்சி... இப்படித்தான் மதுரை முத்து தொடங்கி அசத்தப்போவது யாரு கலைஞர்கள் அனைவரும் அள்ளித் தெளிக்கிறார்கள் பாராட்டுடன் நகைச்சுவையையும் சேர்த்து. சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி சன் தொலைக்காட்சி பார்க்கும் அத்தனைப் பேராலும் நல்ல நிகழ்ச்சியாகத் போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் நடுவர்கள் என்ற போர்வையில் சிட்டிபாபு செய்யும் அலம்பல்களுக்குத் தான் அளவே இல்லாமல் போய் விடுகிறது.
கலைஞர்களை கவனிப்பதை விட நிகழ்ச்சி தொகுப்பாளினி மகேஷ்வரியை கவர் செய்வதிலேயே சிட்டிபாபுவும், நிகழ்ச்சி ஒளிப்பதிவாளரும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அது அவர்கள் விருப்பம் என்று விட்டாலும் கூட கடந்த 5-ந்தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியினுடே மகேஷ்வரியிடம் சிட்டிபாபு கேட்ட கேள்வி:
சி.பாபு: மகேஷ்வரி நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா, இல்ல காதலிக்கிறீங்களா? காதலிக்கப் போறீங்களா.
மகேஷ்வரி: ஐயோ, நான் யாரையும் காதலிக்க வில்லை. என் அம்மா பார்த்து சொல்பவரை தான் கட்டிக்குவேன்.
சி.பாபு: பார்த்து, உங்க அம்மா அவரை கரெக்ட் பண்ணிக்கப் போறாங்க....
இதற்கும் மகேஷ்வரி சிரிப்பைத் தான் காட்டுகிறார். சரி தொலைக்காட்சி வெளிச்சத்தில் தாயை எப்படிபேசினாலும் கேட்டுக் கொள்வார்களோ என்னவோ?
சிட்டிபாபு சார், ஜோக்குக்காக பேசுறாதா நெனச்சு விஷமத்தனமா பேசாதீங்க. உங்க காமெடிகளை ரசிக்குற ரசிகனாத்தான் இதை சொல்றேன்.
நீங்க நடுவரா வேற இருக்கீங்க யோசிங்க.
1 கருத்து:
chitti babu kindal pannuvathu, varum asathal pvathu yaarkal matrum judgaithan irukkattum.kooda colleagues mattum koodathy.kurippaka maheswari vendam.vittu vidungal.medai nagareekam therindu , judgeaaga irungal, chitti babuve.
கருத்துரையிடுக