செவ்வாய், ஜூலை 15, 2008

சும்மானாச்சுக்கும்!

அந்தப் பெரிய குளக்கரை அருகே வந்து நின்றார்கள் குருவும் சிஷ்ய கோடிகளும். குரு சொன்னார், இந்த குளத்தின் தண்ணீரில் தன் உடுப்புகள் நனையாமல் அக்கரை செல்ல வேண்டும்.
குரு சொன்னதும் சிஷ்யர்கள் குழம்பிப் போய் நின்றனர். எப்படிக் குருவே தண்ணீரில் உடுப்புகள் நனையாமல் செல்வது.
குரு மவுனத்தை மட்டுமே மொழியாக்கி விட்டு அக்கரைக்கு சுற்றிவந்து நின்று கொண்டார்.
சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த சிஷ்யக்கோடிகளில் இரண்டுபேர் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர்.
தங்கள் வேட்டிகளைக் களைந்து ஒருவருக்கொருவர் மாற்றி உடுத்திக் கொண்டு குளத்துக்குள் இறங்கி நடந்து கரையேறினார்கள்.
குருவே குளம்பிப் போனார்.
அந்த இரண்டு சிஷ்ய கோடிகளும் சிரித்தபடியே குருவிடம் வந்து, குருவே
தன் ஆடை நனையாமல் தானே கரையேற வேண்டும் என்றீர்கள். அதனால் தான் எங்களுக்குள் ஆடையை மாற்றிக்கொண்டு அவன் ஆடையை நான் நனைத்தேன். என் ஆடையை அவன் நனைத்தபடி நடக்க முடிந்தது என்ற்னர்.
குரு சிஷ்யர்களை நோக்கி பெருமிதத்துடன், எப்படியோ நீங்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த அரசியல்வாதி ஆவீர்கள் என்று அவர்களை ஆசீர்வதித்தார்.
உடனே, அந்த இரண்டு சிஷ்ய கோடிகளும் குருஅணிந்திருந்த வஸ்திரங்களையும் , அவர் வைத்திருந்த பொருட்களையும் அள்ளிச் சுருட்டியபடியே, அரசியல் வாழ்க்கைக்கு உங்களிடமே அச்சாரம் போடுகிறோம் என்றபடியே அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர்.
குரு அம்போ என்றபடி நின்றார்.


நீதி: அரசியல் வார்த்தை நுழைந்தாலே வாழ்வில் எல்லாம் பறியோகும்.

கருத்துகள் இல்லை: