செவ்வாய், ஜூலை 29, 2008

குருதி குண்டு

டிக் டிக் டிக்....
கடிகார ஓசைகூட
எங்களை இப்போது
கதிகலங்க
வைக்கிறது!
நான்கு திசையில்
நடக்கும்
குண்டு வெடிப்புகளால்!

பாதகம் செய்பவருக்கோ
பாரெல்லாம் தொடர்பு
பாதிக்கப்படுபவனுக்கோ
பக்கத்து வீட்டுக்காரன்
யார் எனத் தெரியவில்லை!
நாகரிக இடைவெளிகள்...

நதிநீர் இணைப்பு
சாத்தியமில்லை..?
குருதியால்
இணைக்கிறது
குண்டுவெடிப்பு!

நமக்குள் இருக்கும்
பிரிவுகளே
நம்மை இன்னும்
பிரிக்க உதவுகிறது!
ஒன்று படுவோம்
இந்தியராய்!

பிடியுங்கள், அழியுங்கள்
தீவிரவாதிகளை!
தயவு செய்து
அழைக்காதீர்கள்
அந்த நாய்களை
'முஸ்லிம்' என்று!
இஸ்லாம்
போதிக்கவில்லை
மததுவேஷத்தை,
ஆதரிக்கவில்லை
தீவிரவாதத்தை!

1 கருத்து:

ரமேஷ் வைத்யா சொன்னது…

நல்ல சிந்தனைகள் ஆசாத். கொஞ்சம் நேரடியாக இருக்கிறது. கவிதை என்பது நுட்பமானதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.